பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/721

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழங்குகள்‌ 701

வேர்க்கிழங்குகளின் மேல்பகுதி வித்திலைக் கீழ்த்தண் டாகவும், கீழ்ப்பகுதி ஆணிவேராகவும் இருக்கும். வளை கேரட்டின் பருமைக்குக் காரணம் இரண்டாம் நிலை ஃபுளோயத்திலும், இரண்டாம் நிலைப் புறணி யிலும் உண்டாகிய மிகுதியான பாரன்கைமா திசு வாகும். முள்ளங்கியின் பருமைக்குக் காரணம் இரண் டாம்நிலை ஸைலத்தில் உள்ள மிகுதியான பாரன் கைமா திசு ஆகும். பீட்ரூட், டர்னிப் போன்ற வற்றின் பருமைக்குக் காரணம் பல ஸைலம் யங்கள் பாரன்கைமாவுடன் கூடிய ஃபுளோயம் வளையங்களுடன் மாறி மாறி இயல்பிற்கு மாறான குறுக்கு வளர்ச்சி அடைவதே ஆகும். ஆணிவேரைத் தவிர வேற்றிடத்து வேர்களிலும் உணவு சேமித்து வைக்கப்படுகிறது. இத்தகைய வேற்றிடத்து வேர்க் கிழங்குகள் பல உள்ளன. இவற்றுள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு முக்கியமானது. தண்ணீர்விட்டான் கிழங் கிலும் ஆஸ்பராகஸ், டாலியா வேரிபிலிஸ் (Dahlia variablis) என்னும் செடியிலும் வேற்றிடத்து வேர்க் கிழங்குகள் (root modifications) கொத்தாகக் காணப் படுகின்றன. இவற்றிற்குக் கொத்து வேர்க்கிழங்கு என்று பெயர். கள் . ஹேபனேரியா க கிழங்குகள் 701 என்னும் ஆர்க்கிட் வகைச் செடியின் வேர்க்கிழங்கு அகங்கை வடிவமாக (palmate) அமைந்துள்ளமை யால் இது அகங்கை வேர்க்கிழங்கு எனப்படும் (படம் 1). . மாங்காய் இஞ்சி, கோரை (Cyperus rodundus) ஆகியவற்றில் வேற்றிடத்து வேர்களின் நுனியில் மட்டும் உணவு சேமிப்பதால் வேர் நுனி பருத்து முடிச்சைப் போன்று இருக்கும். இதற்கு முடிச்சு வடிவ வேர்க்கிழங்கு (படம் 2) என்று பெயர். காட்டுவள்ளிக்கிழங்கு, கிளிரோடென்டிரான் செர் ரேட்டம் (clerodendron serratum) போன்ற சில செடிகளின் வேற்றிட வேர்களில் உணவின் சேமிப்பு விட்டு, விட்டு நிகழ்கிறது. அதனால் வேர்கள் மாறி மாறிப் பருத்து மணிமாலை போன்று இருக்கும். எனவே இது மணிமாலை வடிவ வேர்க்கிழங்கு (moniliform root tuber) எனப்படும். (படம் 3) சைக்கோட்ரியா இபிகாகுவான்ஹா (psychotria ipecacuanha) செடியின் வேர்க் கிழங்குகள் வட்டுகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி அடுக்கியது போல் இருக்கும். இதற்கு வளைய வடிவ வேர்க் கிழங்கு annular root tuber) என்று பெயர். (படம் 4) படம் 1.2.அகங்கை வேர்க்கிழங்கு, முடிச்சு வடிவ வேர்க்கிழங்கு படம் 3, 4. மணிமாலை வடிவ வேர்க்கிழங்கு வளைய வடிவ வேர்க்கிழங்கு