கிழங்குகள் 703
பகுதிக்கு ஏற்றது. வெள்ளை முள்ளங்கி சமவெளிக்கு ஏற்றது. மேலும் சில முக்கிய முள்ளங்கி வகைகள் பின்வருமாறு: ஒயிட் ஐசிகில் (white isicle), ஸ்கார்லட் குளோப், ஜப்பானிய வெள்ளை (Japanese white), பூசா தேசி (pusa desi) ஆகியன. பீட்ரூட். இதன் தாவரவியல் பெயர் பீட்டா வல்காரிஸ் (Beta vulgaris) என்பதாகும். (படம்7). ஸைலமும் சேமிப்புப் பாரன்கைமாவும் வளையங் களாக இதில் காணப்படுகின்றன. இந்தக் குளிர் விரும்பும் பயிர், அனைத்து மண் வகைக்கும் ஏற்றது. சிலவகை நீளமாகவும், அரை நீளமாகவும் இருக்கும். சாதாரணமாகக் கிரீம்சன் குளோப், டெட்ராயிட் மிகு சிவப்பு (Detroit dark red) போன்ற வகைகள் இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. இதில் தாதுச்சத்துக்களும், லைட்டமின்களும் மிகுதி யாக உள்ளன. டர்னிப் கிழங்கு. இதுவும் ஓர் ஆணிவேர்க்கிழங்கு ஆகும். இதன் தாவரவியல் பெயர் பிராஸிகா ராபா (Brassica rapa) என்பதாகும். இது குரூசிஃபெரே இருவித்திலைத் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்தது. கிழங்குகள் 703 (படம் 8). இது ஒரு குளிர்காலப் பயிர், நல்ல வளமுள்ள பொடியான மண்ணுள்ள நிலம் இதற்கு ஏற்றது. குளிர்ப்பகுதிகளில் பயிரிட ஏற்றது. இதில் ஐரோப்பிய வகை, ஆசிய வகை என இரு வகை உண்டு. பர்ப்பிள் டாப் ஒயிட் குளோப் (purple top white globe), கோல்டன்பால் (golden ball), ஸ்னோ பால் (snow ball), எர்லி மிலான் (early milon), பூசா காஞ்சன் (pusa kanchan) ஆகியவை ஐரோப்பிய வகைகளாகும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதன் தாயகம் அமெரிக்கா ஆகும். இதன் தாவரவியல் பெயர் ஐபோமியா பட்டாடஸ் (Ipomoea batatas) என்பதாகும். (படம் 9). இக் கிழங்குகளில் 16% மாவுச்சத்தும், 4% சர்க்கரையும் உள்ளன. இப்பயிர் 5,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதற்கு நீண்ட வெப்பமான பருவநிலை வேண்டும். தண்ணீர் விட்டான் கிழங்கு. இதன் தாவரவியல் அஸ்பராகஸ் அட்செண்டஸ் (Asparagus பெயர் படம்9,10 சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு படம் 11,12. காட்டுவள்ளிக்கிழங்கு, இஞ்சி