பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 கிழங்குகள்‌

704 கிழங்குகன் adscendeus) ஆகும். இது ஒரு வித்திலைத் தாவரத் தொகுதியில் கொரோனேரி என்னும் துறையில் லிலியேசி என்னும் குடும்பத்தைச்சேர்ந்தது (படம்10). காட்டு வள்ளிக்கிழங்கு. இக்கிழங்கு வகை பொது வாக யாம் என்னும் பெயரால் குறிக்கப்படும். இதன் தாவரவியல் பெயர் டயாஸ்கோரியா அலாடா (Dioscorea olata) என்பதாகும் (படம் 11). இது டையாஸ்கோரியேசி என்னும் ஒருவித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தென்கிழக்கு ஆசியாவில் அஸ்ஸாம் பர்மாப் பகுதியிலிருந்து தோன்றி இருக்கலாம். நிலத்தைச் சீர்படுத்தி இதன் சிறு கிழங்குத் துண்டுகளை மேடுகளில் நடுகின்றனர். இஞ்சி. இதுவும் மட்ட நிலத்தண்டு என்னும் தண்டுக்கிழங்கு ஆகும். இதன் தாவரவியல் பெயர் ஜின்ஜிபெர் அஃபிஷினேல் (Zingiber officinale) என்பதாகும். இது ஒரு வித்திலைத் தாவரத் தொகுதி யில் எபிகைனே என்னும் வரிசையில் ஜின்ஜிபெரேசி கோண குடும்பத்தைச் சேர்ந்தது. இது தரைமட்டத்தில் தரைக்கு ஏறக்குறைய இணையாக வளருகிறது. நுனி வளரா இணைக்கிளைத்தல் பெரும்பாலும் காணப் படுகிறது. பல கணுக்கள். கணுவிடைப் பகுதிகள், செதில் இலைகள், நுனி மொட்டுகள், மொட்டுகள். வேர்கள் ஆகியவை காணப்படுகின்றன. தண்டின் வளர்ச்சி கோண மொட்டின் உதவியுடன் தொடர்கிறது (படம் 12). இது ஆசியாக் கண்டத்தில் நீண்ட காலமாகப் பயிரிடப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் தோன்றி ஏனைய நாடுகளுக்குப் பரவி இருக்கலாம். மஞ்சள் கிழங்கு. இதன் தாவரவியல் பெயர் கர்குமா லாங்கா (Curcuma Longa) அல்லது கர்குமா டொமஸ்டிகா (படம் 13). இது ஒருவித்திலைத் 13).இது எபிகைனே என்னும் தொகுதியில் வரிசையில் ஜின்ஜிபெரேசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. உருளைக்கிழங்கு. இது சொலானம் டூபெரோசம் (Solanum tuberosum) என்னும் சொலனேசி குடும் . B படம் 13,14,மஞ்சள் கிழங்கு, உருளைக் கிழங்கு العندل ☑ வடம் 15,16, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு அ.கி. 8 44