கிழங்குகள் 705
பத்தைச் சேர்ந்தது. உருளைக்கிழங்கு, இச்செடியி லிருந்து உண்டான தரைக்கீழ்த் தண்டிலிருந்து தோன்றும். (படம் 14). தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் பகுதியிலிருந்து உருளைக்கிழங்கு தோன்றி இருக்கலாம் என்னும் கருத்து நிலவுகிறது. உருளைக்கிழங்கு தென் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குப் பதினேழாம் நூற்றாண்டில் புதி தாகப் பயிர் செய்யக் கொண்டு வரப்பட்டு. நீலகிரி. மாவட்டத்தில் 1822 ஆம் ஆண்டு முதல் பயிரிடப் பட்டு வருகிறது. இப்பயிர் முக்கிய வணிகப் பயிராக வும், மாவுச்சத்து நிறைந்த காய்கறியாகவும் பயன் படுகிறது. இது ஒரு குளிர்காலப்பயிராகும். செடிகள் வளர்ச்சிப் பருவத்திலும், கிழங்குகள் உண்டாகும் சமயத்திலும் வெப்பநிலை 20-25°C அளவில் இருந்தால் நன்று. வகை. இதில் பல வகைகள் இனக்கலப்பு செய்து பயிரிடப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை வருமாறு: அப்டுடேட் (up to date). து த வகையாம்.கிழங்குகள் தாக்காத ஒரு நோய் பருமனாகவும், அரும்புகள், ஓவல் வடிவம், தட்டையான கண வெள்ளை நிறச்சதை கொண்டனவாகலும் இருக்கும். கிரேட் ஸ்காட் (great scot). இது இங்கிலாந்தி லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வகை யாகும். 105 நாள் வயதுடையது. ஓவல் வடிவமான வெள்ளைக் கிழங்குகள் கொண்டது. நீலகிரியில் இவ்வகை மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. கோ-சிம்லா. இது ஒரு வீரிய வகை உருளைக் கிழங்காகும். சமவெளிகளுக்கு ஏற்றது. ஏறத்தாழ 28 வகை உருளைக்கிழங்குகள் இந்தியாவில் பயிரா கின்றன. இவை சமவெளி வகைகள், மலை நாட்டு வகைகள் என இருவகைப்படும். சேனைக்கிழங்கு. இது தண்டுக் தண்டடிக்கிழங்கு (corm) என்னும் கிழங்குகளுள் வகையைச் கிழங்குகள் 705 சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் அமார்ஃபோ ஃபால்லஸ் கம்பானுலேட்டஸ் (Amorphophallus companulatus) என்பதாகும். இது ஒருவித்திலைத் தாவரத் தொகுதியினுள் நாடிஃபுளோரே என்னும் வரிசையில் ஏரேசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது (படம் 15). இதன் தாயகம் இந்தியா என்று சுருதப் படுகிறது. இதில் புரதம், தாதுச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் A கால்சியம் போன்றவை அடங்கி யுள்ளன. இதை அனைத்துத் தட்பவெப்ப நிலை களிலும் பயிரிடலாம். செம்மண் கலந்த மணல் மிகவும் ஏற்றது. வகை. இதில் குறிப்பிட்ட வகை எதுவுமில்லை. மென்மையான கிழங்கு, கெட்டியான கிழங்கு என்று தனிப்பட்ட வகைகள் உண்டு. மென்மையான கிழங்கு மிகுந்த காரம் உடையது. கெட்டியான கிழங்கில் காரத்தன்னம இல்லை. சேப்பங்கிழங்கு. இது ஒருவித்திலைத் தாவரத் தொகுதியினுள் நாடிஃபுளோரே என்னும் வரிசையில் ஏரேசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர்- கொலகேசியா எஸ்குலன்டா (Colocasia csculenta) (படம் 16).இது ஒரு சிறந்த காய்கறி. இது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப் படுகிறது. இதில் கால்சியம் ஆக்சைடு நிறைந்திருப்ப தால் காரமாக உள்ளது. இதில் புரதம், வைட்டமின் A. இரும்பு, தயாமின் போன்ற சத்துகள் அடங்கி யுள்ளன. இது ஒரு வெப்பப் பகுதிப் பயிர். நல்ல ஆழமான மண்ணும், மணலும் கலந்த நிலம் மிகவும் ஏற்றது. தில் வெள்ளை வகை, கறுப்பு வகை என்னும் இரு வகை உண்டு. வெள்ளை வகை மிகுதியான அளவில் பயிரிடப்படுகிறது. சுறுப்பு வகையின் இலைகளும் இலை நுனிகளும் ஊதாக் கலந்த கறுப்பு நிறத்தில் இருக்கும். கருணைக்கிழங்கு. இதுவும் சேனைக்கிழங்கைப் போல ஒரு தண்டடிக்கிழங்கு ஆகும். ஆனால் இது படம் 17,18 வெங்காயம், பூண்டு அ. க. 8 - 45