பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிள்ளு விளைவு 707

P₁ இதன் காரணமாகக் கடத்தியில் ஏதாவது ஓர் 4 தில் கழுத்துப் போன்ற சுருக்கம் ஏற்பட்டு இறுதியில் அந்த இடத்தில் கடத்தி, துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் மின்னோட்டம் நின்றுவிடும். எனவே, உலோகத்தில் சூடானது சமச்சீராக இருப்பதில்லை. இந்த நிகழ்வுக்கு ஹெரிங் என்பார் 1907 இல் கிள்ளு விளைவு என்னும் பெயரை அளித்தார். பின்னர் இந்தத் தொழில் நுட்பச் சிக்கல், வளையக் குழலின் தளத்தைச் செங்குத்தாக வைத்து அதை உருகிய உலோகத்திற்குள் ஆழ்ந்து அமிழ்ந்திருக்குமாறு செய்த தன் மூலம் தவிர்க்கப்பட்டது. மின்னல்களிலும், உயர்திறன் குறுக்கு மின்சுற்று களிலும் (short circuits) ஏற்படுவதைப் போன்ற பெரும் குறுகிய நேர மின்னோட்டங்கள் குழாய் வடிவக் கடத்திகளில் பாயும்போது கிள்ளுவிளைவின் காரணமாக நசுக்கப்பட்டு விடுவதுண்டு. சில உலோக வடிவமைப்பு முறைகளில் இத்தகைய கிள்ளு விளைவு பயன்படுகிறது. வகை வெப்ப அணுக்கருவினைகள். டியூட்ரியத்தையும் டிரிட்டியத்தையும் பயன்படுத்தும் ஓர் அணுப் பிணைவு உலையில் (fission reactor) அணு எரி பொருளைச் சூடாக்கச் செலவாகும் ஆற்றலைவிட அணுப் பிணைவால் வெளிப்படும் ஆற்றல் மிகுதியா யிருக்க வேண்டுமானால் டியூட்ரிய - டிரிட்டியப் பிளாஸ்மாவின் வெப்பநிலை 10 கிலோ எலெக்ட்ரான் வோல்ட்டுக்கு (1.6 X 10K - க்கு) மேல் இருக்க வேண்டும். பிளாஸ்மா, கொள்கலத்தின் சுவர்களைத் தொடாமலிருந்தால்தான் இந்தப் பெரும் வெப்ப நிலையைப் பேண முடியும். அதற்குப் பிளாஸ் மாவிற்குள் வெளிநோக்கிச் செயல்படும் அழுத்தங் களை. வெளியிலிருந்து செயல்படும் உள்நோக்கிய அழுத்தங்களால் - சமன் செய்ய வேண்டும். அணு உலையிலிருந்து வெளிப்படும் நிகர வாபமான ஆற்றலின் அளவு பிளாஸ்மாவின் அடர்த்தியையும். பிளாஸ்மா அடைத்து வைக்கப்படுகிற நேரத்தையும் பொறுத்திருக்கும். பிளாஸ்மாவை அடக்கி வைக்கப் பல விதங் களில் காந்தப் புலத்தை அமைக்கலாம். ஒரு வகையில் ஒரு வளையக் குழாயில் பிளாஸ்மா வைக்கப்படு கிறது. அது ஒரு மின்மாற்றியின் (transformer) துணைச் சுருளினிடத்தில் வைக்கப்படும்போது பெரும மின்னோட்டம் தூண்டப்படுகிறது. அம்மின் னோட்டம் பிளாஸ்மாவைச் சூடாக்குவதுடன், அதை வளையக் குழாயின் அச்சுப் பகுதியில் இறுக்கு கிறது. சமன் கிள்ளு விளைவுக்கான அடிப்படைச் பாட்டை I/2× 10 = NK (I, + T.) எனப் பென்னட் (W. Bennet) என்பார் வருவித்தார். இதில் I - என்பது ஆம்பியரில் மொத்த மின் னோட்டம்; N - என்பது கிள்ளப்பட்ட பகுதியில் அ க. 8-45 அ கிள்ளு விளைவு 707 ஓரலகு நீளமுள்ள எலெக்ட்ரான்கள் அல்லது அயனி களின் எண்ணிக்கை; K = 1.4 × 10- J/ கெல்வின். (போல்ட்ஸ்மன் மாறிலி); T; என்பது அயனிகளின் வெப்பநிலை; T. என்பது எலெக்ட்ரான் களின் வெப்பநிலை. ஆய்வுகள். கிள்ளு விளைவை ஆராய்வதற்குத் தொடக்க காலத்தில் குவார்ட்ஸ் அல்லது பீங்கானால் செய்யப்பட்ட நேரான மின்னிறக்கக் குழாய்களும் வளையக் குழல்களும் பயன்படுத்தப்பட்டன. நேரான மின்னிறக்கக் குழாய்களின் இரு முனைகளிலும் மின் முனை பொருத்தப்பட்டிருக்கும். அவை குறுகிய நேர ஆய்வுகளுக்குப் பயன்பட்டன. அவற்றில் பிளாஸ்மா குறைந்த அளவிலேயே சூடாக்கப்பட்டது. வளையக் குழல்களில் முனைகளற்ற வளைய வடிவப் பிளாஸ்மா உருவாகிறது. நேர் குழாய்களை விட வளையக் குழல்களில் பிளாஸ்மா பயனுறு முறையில் அடக்கி வைக்கப்படுகிறது. இது ஒரு மின்மாற்றியமைப்பின் துணைச் சுருளிடத்தில் வைக்கப்பட்டு அதில் மின்னோட்டம் தூண்டப்படு கிறது. இருவகைக் கருவிகளிலும் கிள்ளப்பட்ட மின் புலங்களில் 50 ஆயிரம் - 5 லட்சம் ஆம்பியர் வரை யான மின்னோட்டங்கள் தோன்றும். தொடக்க காலத்தில் மின் தேக்கிகளிலிருந்து கருவிகளுக்குத் தேவையான முதன்மை ஆற்றல் பெறப்பட்டது. நிலையற்ற தன்மை. பிளாஸ்மா கிள்ளல் மின்னிறக்கக் குழாயின் உட்புறச் சுவர்களுக்கருகில் ருவாகிக் குழாயின் மையத்தை நோக்கிச் சுருங்கி ஒரு பொலிவுமிக்க கோடாக மாறுகிறது. அதில் முடிச்சுகளும் நெளிவுகளும் விரைந்து தோன்று கின்றன. சில மைக்ரோ நொடிக்குள் கிள்ளல் மறைந்து பிளாஸ்மா குழல் முழுதும் பரவி விடுகிறது. தன் காரணத்தை எளிதாக விளக்கலாம். பிளாஸ் மாவைச் சுற்றி உருவாகிற காந்த விசைக்கோடுகள் அதைக் கிள்ளி அடக்கி வைக்கின்றன. அவை நீள் வாக்கில் இழுவிசையும், குறுக்கு வாக்கில் இறுக்கு விசையும் கொண்டவை. சீரான உருளை வடிவமுள்ள பிளாஸ்மா கிள்ளலில் வெளிநோக்கிய அழுத்தமும் உள்நோக்கிய அழுத்தமும் எல்லாவிடத்தும் சமமாயிருக்கும். ஆனால் ஒரு நெளிவான இடத்தில் காந்தப்புலக் கோடுகள் நெருக்கமடைந்து அங்கு காந்தப்புல அழுத்தத்தை மிகுதியாக்கிவிடுகின்றன. இதன் விளை வாக நெளிவு மேலும் சுருங்குகிறது அல்லது நெளி லின் வளைவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாகப் பிளாஸ்மா அடைபட்டிருக்கும் நேரம் பெரிதும் குறைந்து போகிறது. டியூட்ரிய பிளாஸ்மாக் கிள்ளல் மூலம் நியூட்ரான் களைப் பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும். இதன் அடிப்படையில் பிளாஸ்மாவில் அணுப்பிணைவு வினைகள் நடைபெறுவனவாக ஒரு