பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/728

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 கிளமென்சன்‌ ஒடுக்க வினை

708 கிளமென்சன் ஒடுக்க வினை தவறான கருத்து நிலவியது. ஆனால் பிற்காலத்தில் நியூட்ரான்கள் சில குறிப்பிட்ட திசைகளில் மட்டும் பெருமளவு வெளிப்படுவதும் அவை பிளாஸ்மா கிள்ளலின் நிலையற்ற தன்மையுடனும் அதில் தோன்றும் பெரும முடுக்கங்களுடனும் தொடர்பு கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டமையால் அக் சுருத்து மறைந்தது. பிளாஸ்மா கிள்ளவின் நிலையாமையைத் தடுக் கப் பல உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. மின்னி றக்கக் குழவின் வெளிப்புறத்தில் ஒரு மின் கம்பிச் சுருளை அமைத்து அச்சுத் திசையில் ஒரு காந்தப் புலத்தை ஏற்படுத்துவது அவற்றில் ஒன்று. அந்தப் புலம் மின்னிறக்கத்தை வலிமைப்படுத்திக் கழுத்துச் சுருக்கம் அல்லது நெளிசல் ஏற்படுவதை எதிர்க்கக் கூடும். அதேபோல மின்னிறக்கக் குழாயின் வெளிப் புறத்தை ஒட்டி ஒரு மின் கடத்தும் பரப்பை அமைத் தால் அது பிளாஸ்மா கிள்ளலுக்கும் குழாய்ச் சுவருக் கும் இடையில் காந்தப் புலத்தைச் சிக்கவைக்கும். இதனால் பிளாஸ்மா குழாய் சுவரில் மோதாமல் தடுக்கப்பட்டு மையத்திற்குத் திரும்பத் தள்ளப் படும். பிளாஸ்மா கிள்ளலில் உட்புறமுள்ள காந்தப் புலத்திற்கு எதிரான திசையில் நீள்வாட்டில் ஒரு காந்தப் புலத்தைச் செலுத்துவதன் மூலம் நிலையற்ற தன்மையைக் குறைக்கலாம் எனத் தற்போது தெரிய வந்துள்ளது. இம்முறை எதிர்ப்புல Z கிள்ளல் (reversed field Z pinch) எனப்படும். உயர்திறன் துடிப்பு அமைப்புகள் உயர் திறனும் உயர்ந்த அதிர்வெண்ணுமுள்ள மின் துடிப்புகளைச் high power pulsed systems) செலுத்திப் பிளாஸ் மாவைச் சூடாக்கவும் ஒடுக்கி வைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் செல்லும் மின்னோட்டங்களைப் பயன் படுத்திப் பிளாஸ்மாவை ஒடுக்கி வைக்கும் உத்தி தீட்டா கிள்ளல் எனப்படும். 1957 இல் இம்முறை யைப் பயன்படுத்தி லாஸ் அவமோசிலுள்ள ஆய்வகத் தில் முதன் முதலாக வெப்ப ணுக்கருப் பிணைவு நிகழ்த்தப்பட்டது. டோகாமாக். 1969இல் ஆர்ட் சிமோவிச் (L-Artsi- movich) என்னும் சோவியத் நாட்டு அறிவியலார் டோகாமாக் ( Tokamak) என்னும் கருவியின் மூலம் 60 லட்சம் கெல்வின் வெப்பநிலையில் 20 மைக்ரோ நொடிக்குப் பிளாஸ்மாவை அடக்கி வைத்ததாக அறி வித்தார். பின்னர் Z -கிள்ளல் மடைந்தது. முறை புத்தூக்க சி. சுப்பிரமணியன் கிளமென்சன் ஒடுக்க வினை துத்தநாக ரசக்கலவையும் அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சேர்ந்த கலவையைக் கொண்டு கார்போனைல் சேர்மங்களை அல்க்கேன்களாக ஒடுக்கும் விளை, கிளமென்சள் ஒடுக்க வினை (Clem- mensen reduction) ஆகும். e: H* R'COR² → R'CH,R2 ஆல்டிஹைடுகளுக்கு இவ்வினை ல்லை. ஆனால் பல கீட்டோன்களை யால் அல்க்கேள்களாக மாற்ற இயலும். + வினை வழிமுறை 0- 1 R - C - R + Zn +CI-=R-C-R OH R-C-R* -H₂O ZnCl ZnCl Zn Zn - உகந்ததாக இவ்வினை ZnCl R-(-R Za, *ZnCI+R-C-R Z R-Ç-R R ZnCl H+ ZnCl H' R-CH-R R-CH,-R ஆல்ஃபா கீட்டோ அமிலங்களை, கிளமென்சன் ஒடுக்க விளைக்குட்படுத்தினால் மோனோ கார்பாக் சிலிக் அமிலங்களாக மாற்றமடைகின்றன. R-CO-COOH R CH, COOH வளைய டை கீட்டோன்கள் வளைய ஆல்கேன்களா கின்றன வளைய ஹெக்சனோன் வளைய ஹெக்சேன் அசெட்டோஃபீனோன் Zn-Hg HCI எத்தில் பென்சீன் இவ்வினை பாலிஸ்டைரீன் என்னும் பல்லுறுப்பித் தயாரிப்பின் முதல் கட்டமாகும்.