பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 கிளாக்கோமா

718 கிளாக்கோமா துள்ளது. கிளர்வூட்டிய கரியின் புறப்பரப்பில் ஆக்சிஜன் மிகுந்துள்ளமையை அறிவதற்கு, அக்கார் பன் மாதிரியை டையசோமெத்தேனுடன் வினைப் படுத்தலாம். கீழ்ச் சிவப்புக் கதிர்களைக் கொண்டு ஆய்வு நிகழ்த்தலாம். மே.ரா. பாலசுப்ரமணியன் நூலோதி. James S. Mattson and Harry Mark, Activated Carbon, Marcell Dekker, New York, 1971. கிளாக்கோமா பார்வை நரம்பு இழைகள் கெட்டுப்போகும் அள விற்குக் கண் உள் அழுத்தம் அதிகரிப்பதையே கிளாக்கோமா (glaucoma) எனலாம். அழுத்த அளவி கொண்டு காணும்போது, இயல்பு அழுத்தம் 21 மி.மீ. உள்ளது. விளைவால் பாதரசமாக தன் கோளாறுகளும் ஏற்படும். தவக் கண்முன் ரசம் உற்பத்தியாவதிலும், செலவாவ திலும் சமநிலை இல்லையெனில் கிளாக்கோமா உண்டாகிறது. குறிப்பிட்ட நைவுகள் எதுவுமின்றிக் கிளாக்கோமா தோன்றினால் அதை முதல் நிலைக் கிளாக்கோமா என்பர். கடும் அழற்சி, புற்றுநோய் ஆகியவற்றால் ஏற்படுவது இரண்டாம் நிலைக் கிளாக் கோமா எனப்படுகிறது. முதனிலைக் கிளாக்கோமாவின் வகைகள் கோணம் மூடிய கிளாக்கோமா. இங்கு அழுத்தம் மிகையாக உள்ளது. முன்கண் அறை ஆழமற்று இருக்கும். கருவிழி அடிப்படலம் ( iris) நீர்மம் வெளி வரும் கோணத்தை அடைப்பதால் தேக்க நிலை உண்டாகிறது. எளியு கிளாக்கோமா. கோணம் நாட்பட்டு மூடியிருப்பதாலோ எவ்வகை அடைப்புமின்றியோ இது தோன்றுகிறது (திறந்த கோண கிளாக்கோமா). மேற்கூறிய இரு வகைகளிலும் நோயின் பரவல் மெதுவாகவும், நாட்பட்டும் காணப்படுகிறது. கண் சார்ந்த அறிகுறிகள் காலங்கடந்தே தோன்றுகின்றன. மூன்றாம் வகையில், பிறவியிலேயே வெளியேறு கோணம் அடைப்பட்டுள்ளது. இதைப்புஃப்தாலமாஸ் (Buphthalamos) என்பர். இங்கு, குறை வளர்ச்சிக் கண் கோளம் துருத்துவதால் கண் எருதைப்போன்றுள்ளது. முனைப்புடன் கோணம் மூடப்பட்ட கிளாக் கோமாவில் திடீரென்று கண் ள் அழுத்தம் மிகக் கூடும். இது மன உளைச்சலுள்ள பெண்களில் பெரும் பான்மையாகக் காணப்படுகிறது. தொலைப் பார்வை யுள்ளவர்களும், பிறவி ஊனமுடைய பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இரு கண்களும் பாதிக்கப்படுகின்றன. இந்நோய் திடீரென்று தோன்றுகிறது. கண்ணில் வலி தோன்றுகிறது. இந்த வலி கண் நரம்பின் முக்கி ளைப் பிரிவைப் பாதிக்கிறது. நோயாளி களைப்படை கிறார். குமட்டலும், வாந்தியும் உண்டாகின்றன. பார்வை குறைகிறது. சிலபோது பளிங்குப் படலம் வீங்குகிறது. அழுத்தம் மிகையாகும்போது நடு விழித்திரைச் சிரை அடைபடுகிறது அல்லது பார்வை நரம்பு பாதிக்கப்பட்டுப் பார்வை இழப்பு உண்டாகிறது. மருத்துவம். முதலில் கண் பாவையைச் சுருக்க வேண்டும். இதனால் கருவிழிப் படலம் முன் அறை யின் கோணத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது. சில நிமிடங்களுக்கு ஒரு தடவை பைலோகார்பின் சொட்டு கள் போடப்படுகின்றன. இத்துடன் இசெரினையும் eserine) அளிக்கலாம். தல வெப்பமளித்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து நிலைமை சீரடைகிறது. தொடக்கத்திலேயே கண் அழுத்தம் 50 மி.மீ. பாத ரசத்திற்கு மேலாக இருந்தால் பாவைசுருக்கி மருந்து களையும், அசிடசோல் அமைடையும் பயன்படுத்த லாம். 250 மி.கி.அலகில் சிரை வழியாகவோ, தசை வழியாகவோ செலுத்திய பின்னர், மாத்திரையாகக் கொடுக்கலாம். சிலபோது வாய் மூலம் கிளிசராலோ (1.5 கிராம்/கிலோ எடை}, சிரை வழியாக மானி டாலோ (250 மி.லி./2% கரைசல் / 30 நிமிடங்களில் கொ காடுக்கலாம். . இத்தகைய மருந்துகள் அளித்தும் சீரடையா விடில் கருவிழிப் படலத்தின் ஒரு பகுதியை அகற்றி மருத்துவம் அளிக்கலாம். அண்மைக்காலமாக லேசர் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சில மாற்றங்களுடன் இரண்டாம் நிலைக் கோணம் மூடிய கிளாக்கோமாவுக்கும் எளிய கிளாக்கோமா வுக்கும் மருத்துவம் அளிக்கலாம். எளிய கிளாக்கோமாவுக்குப் பைலோகார்பின் சொட்டுகள், எகோதையோபேட் அயடைட், நடு நிலை அட்ரினலின் டைமோலால், அசிடசோல் மைடு, புரோப்டுனால் ஆகியவை பயனளிக்கின்றன. சைக்ளோகிரையோ உறைவு, டிரெபெகுலாவை அகற்றுதல் போன்ற மருத்துவம் கையாளப்படுகிற பிறவி ஊனக் கிளாக்கோமாவுக்கு கோனியோடமி என்னும் அறுவை செய்யப்படுகிறது. மு.ப. கிருஷ்ணன் கிளாசியஸ் - கிளேப்ரான் சமன்பாடு கிறது. இது திண்மம், நீர்மம், வளிமம் போன்ற நிலைமை களுள் நிலவக்கூடிய சம நிலையை விளக்கும் சமன்