பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கறி உப்பு

54 கறி உப்பு நிலை மாற்றங்களைவிடப் பெருமளவில் நடை பெறுவதுசார்புக் கொள்கையால் ஏற்படும் குறிப்பிடத் தக்க விளைவு ஆகும். அத்தகைய விளைவுகள் HILAC -இல்செய்யப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப் பட்டுள்ளன. லாம்ப் நகர்வு {Lamb shift). லாம்ப் என்பார். டிராக்கின் ஹைட்ரஜன் கொள்கை மாற்றி அமைக் கப்பட வேண்டும். எனக் கூறினார். இது அணுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. லாம்ப் குறிப்பிட்ட மாற்றம் ஒற்றை எலெக்ட்ரான் அணுக்களின் ஆற்றல் நிலைகளில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த மாற்றம் லாம்ப் நகர்வு எனப்பட்டது. இந்த நகர்வு அயனியின் அணு எண்ணைப் பொறுத்து மாறுந்தன்மை உடையது என்பது குளோரின், ஆர்கான் ஆகியவை வரை உள்ள ஒற்றை எலெக்ட்ரான் அயனிகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. லாம்ப் நகர்வு இரட்டை எலெக்ட்ரான் அயனி களிலும் ஏற்படுகிறது என்பது ஆக்சிஜன் வரையுள்ள அயனிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கற்றைப் படல் இடையீடு (beam foil interaction) இக்கிளர் வூட்டு நிகழ்ச்சிக்குக் காரணமான அடிப்படைக் கொள்கை இதுவரை சரியாக அறியப்படவில்லை. கிளர்வுறு ஆற்றல் நிலைகளின் சார்பு, துகள் தொகை (relative population) துகள்களின் ஆற்றல்,அயனியின் அணு எண் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட ஓர் அடிப்படைச் சமன்பாட்டைப் பெற ஆய்வுகள் நடைபெறுகின்றன. வெ.ஜோசப் நூலோதி. C.N Banwell, Fundamentals of mole- cular Spectroscopy, 3rd Edition, Tata McGraw-Hill Company Limited, New Delhi, 1983. கறி உப்பு வெந்நீரில் கறி உப்புப் பற்பத்தைக் கொள்ள, கபம் மீறி அதனால் வரும் தலையிடிப்பு, உன்மத்தம், பெரும்பாடு, மகோதரசூலை, மூர்ச்சை ஆகியவை போகும். மிளகுத்தூள், கடுகுத்தூள் ஆகியவற்றை வகைக்குச் சம எடை கலந்து அதில் 1 கிராம் மேற் கூறிய பற்பம் கலந்து வெந்நீரில் கொள்ள, வாத பித்தம் இவற்றால் உண்டாகும் வல்லைசக்தி, ஈளை, இருமல். பாண்டு, விக்கல் இவை தீரும். கறி உப்புப் பற்பத்தைத் தேனில் கொள்ள, வாத மீறி அதனால் வரும் பாரிச வாயு, பிடிப்பு,உப்புசம், இரைப்பு போன்றவை தீரும். கறிஉப்புப் பற்பத்துடன் திப்பிலிப் பொடி, தேன் இவற்றைக் கலந்துதரவாதம் கபம் அல்லது பித்தத்துடன் வரும் நேத்திரவாயு, மாலைக்கண். புழுவெட்டு, புளிச்சக்கண், சன்னி. பித்தக்காரகம், சயம் போன்றவை தீரும். புளித்த பசுவின் மோரில் மேற்கூறிய பற்பத்தைக் கொள்ள பித்தம் மீறி அதனால் வரும் கை கால் எரிவு, வாய் நீர்ப்பெருக்கு, பிரமயம் கண் புகைச்சல் தீரும். தூய்மை செய்த கறி உப்பு 280 கிராம் படிகாரம் 210 கிராம் பொடித்து, 280 கிராம் கடலைப் புளிப் புச் சேர்த்து :வாலையிலிட்டு வடித்தால் திராவகம் இறங்கும். இதில் 5 துளி நீரில் கலந்து கொடுக்க மந்தாகினி, துர்ப்பலம், வாதநோய், செரியாமை முதலிய நோய்கள் தீரும். கறி உப்பை நீரிலிட்டு அரைத்து, நச்சுக் கடிவாயின் மீது பற்றிட்டு அனலில் காட்ட நச்சுவேகம் குறையும். உப்பை நீரில் கரைத்து, அத்தெளிநீரைத் தேள் கடிக்குக் கண்ணில் சில துளிகள் விட நஞ்சு நீங்கும் உப்பு 4மி.லி. எடுத்து 546மி. லி. வெந்நீரில்கரைத் துக் கொப்பளிக்க, தொண்டைக் கட்டு, தொண்டை வீக்கம், பல்ஈரல் வீக்கம் முதலியவை நீங்கும். உப்பை 35 கிராம் எடுத்துத் துணியில் முடிந்து, கொதிக்கும் எண்ணெயில் தோய்த்துத் தாங்கக்கூடிய சூட்டில் ஒற்றடமிட வீக்கமும் அதனால் உண்டாகும் வலியும் தணியும். மேலை நாட்டு முறைப்படி ஊழிநோயில் நாடி காணப்படாதவர்களுக்கு உப்பை அளவுடன் நீரில் கரைத்து இரத்தக்குழாய் வழியாக உட் செலுத்துவதுண்டு. பாதத்திலுள்ள ஆணி, முள் முதலியவற்றை எடுத்துவிட்டு அவ்விடத்தில் உப்புப் பொடியை வைத்தால், அதனால் ஏற்படும் நச்சுத் தன்மைகள் வாரா. உப்பையும்,புளியையும் சம அளவு நீரில் கரைத் துக் கொதிக்க வைத்து, குழம்புப் பதத்தில் எடுத்து இளஞ்சூட்டில் அடிபட்ட வீக்கம், சுளுக்கு இவற்றிற் குப் பற்றிட இரத்தக்கட்டு கரைந்து வலி நீங்கி விடும். காதிலேனும், குதத்திலேனும், ஈ, எறும்பு, அட்டை புகுந்து கொண்டால் அவற்றை வெளிப்படுத்த உப்பு நீரைப் பாய்ச்சுவதுண்டு. உப்புக் கரைத்த நீரை ஆசனவழியில் செலுத்த, கீழ்க்குடலிலுள்ள கிரிப் பூச்சிகள் வெளிப்படும். காடிக்காரம் உண்டவர் களுக்கு உப்பை நீரில் கரைத்துக் குடிக்கச் செய்ய, அதனால் உண்டாகும் நஞ்சு முறியும். மீன், மாமிசம், காய்கறி இலை அழுகிக் கெடா மல் இருப்பதற்கு உப்பைச் சேர்த்துப் பாடம் செய்வர். 2.6 லிட்டர் கறிஉப்பில் எருமைமோர், வரிக்குமட்டிச் சாறு வகைக்கு 2.6 லிட்டர் இந்துப்பு, வெடியுப்பு. சவுட்டுப்பு. வளையலுப்பு வகைக்கு 3.5 கிராம் வீதம் நீராகாரத்தில் கொள்ள அனைத்துக் குன்மங் களும் தீரும். கலியாண முருக்கஞ் சாற்றிலாவது, அகத்திச் சாற்றிலாவது சோற்றுப்பைக் சீமை கூட்டிக்