726 கிளி மீன்கள்
726 கிளி மீன்கள் பருவத்தில் இவை வெளிர் நிறமாகவும், பின்னரே கறுப்பு நிறமாகவும் மாறுகின்றன. மேலும் இவற்றின் நிற வேறுபாடுகள் பால் வேறுபாட்டையும் பருவ காலத்தின் வேறுபாட்டையும் சார்ந்திருக்கும். இவை கழிமுகப் பகுதிகளிலும், காயல்களிலும், கடற்கரைப் பகுதிகளிலும் காணப்படும். வேகமாக ஓடவும் பறக்கவும் கூடிய இவை தேவையேற்படின் நன்றாக நீந்தவும் செய்கின்றன. பகல் நேரத்தில் உணவு தேடும் இவை ஒத ஏற்றத்தின்போது கடற் கரையை அடுத்த பாறைகளிலும் மணல் மேடுகளிலும் கூட்டமாக அமர்ந்திருக்கும். கடற்கரையில் காணப் படும் நத்தை, கிளிஞ்சல், புழு, பூச்சி வகைகளை உணவாகக் கொள்கின்றன. இனப்பெருக்கத்தில் ஈடுபடாத காலங்களில் இவை பெருங்கூட்டமாகச் சேர்ந்து காணப்படும். கூடு களைத் தரையிலுள்ள சிறிய பள்ளங்களில் அமைக் கின்றன. சூழ்நிலையின் நிறத்தையே எதிரொளிப்பது போல் அமைந்த அல்லது கறுப்பு நிறப்புள்ளி களுடைய இரண்டு அல்லது நான்கு முட்டைகளை ஒரே சமயத்தில் இடுகின்றன. ஆண். பெண் இரண்டுமே அடைகாக்கும் பணியைச் செய்கின்றன. பொரிக்கப்பட்ட குஞ்சுகள் ஏறத்தாழ ஒரு வாரத் திற்கு அவற்றின் பெற்றோர்களால் உணவூட்டப்படு கின்றன. குளிர் காலத்தில் இந்திய நாட்டுக் கடற் கரைக்கு வலசை வரும் இப்பறவைகளைத் தென் னிந்தியக் கடற்கரைகளில் பரவலாகக் காணலாம். ம.அ. மோகன் கிளி மீன்கள் கடலில் வாழ்கின்ற பலவகை மீனினங்களில் ஒன்று கிளிமீன் அல்லது தத்தை மீன் எனப்படும். இம்மீன் பெர்சிபார்ம்ஸ் என்னும் வரிசையையும், ஸ்கேரிடே குடும்பத்தையும் சார்ந்துள்ளது. இக்குடும்பம் 7 பேரினங்களையும், 60-80 இனங்களையும் கொண் டுள்ளது. இருப்பினும் ஸ்கேரஸ், இந்தியாவில் கலோ ஹிப்போஸ்கேரஸ், லெப்டோஸ்கேரஸ், டோமஸ் என்னும் 4 பேரினங்களைச் சார்ந்த மீன் களே கிடைக்கின்றன. இம்மீன்கள் மேற்கு இந்தியப் பெருங்கடலிலும், இலங்கை - தென்கிழக்கிந்தியக் கடல் பகுதிகளிலும் பரவி இருக்கின்றன. மண்ட பத்திலும் மன்னார் வளைகுடாவிலும் இம்மீன்கள் பெருமளவில் கிடைக்கின்றன. கருங்கடல், பெர்சியன் வளைகுடாப் பகுதிகளில் ம்மீன்கள் காணப்பட வில்லை எனத் தெரிகிறது. சிறு கிளிமீன்களின் நிலையான வாழ்விடம் முருகைப் பாறை (reefs) ஆகும். பகலில் இம்மீன்கள் கூட்டமாகப் பாறையின் மீது உலாவிக்கொண்டும், இரவு நேரத்தில் பாறைப் புதர்களில், மறைவிடங் களில் மறைந்துகொண்டும் வாழ்கின்றன. சில மீன்கள் இரவு நேரங்களில் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகப் பசை போன்ற பொருளை உமிழ்ந்து உறைபோல் அமைத்துக்கொண்டு அதனுள் வாழ்கின்றன. உருவ அமைப்பு. சற்றுப் பருத்த உடலைக் கொண்ட இம்மீனின் புறப்பகுதி முழுதும் சைக்ளாய்டு