பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறிப்பலா 55

கரைத்து அல்லது அரைத்துப் படைகளின் மீது தடவி னால் உதிர்ந்து போகும். கறி உப்பு 2.6 லிட்டர். பூநீறு 2.6 லிட்டர், வெடியுப்பு 1.3 லிட்டர் இவற் றைத் தனித்தனியே நீரில் கரைத்து வைத்து மறுநாள் தெளிவை இறுத்துக் கலந்து அதில் 17.6 கிராம் பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டுக் காய்ச்சி வேளை ஒன்றிற்கு ஒரு லிட்டர் நீராகாரத்தில் கொடுக்க, குன்மம் தீரும். . சே.பிரேமா , நூலோதி. சிறுமணவூர் முனிசாமி முதலியார், மூலிகைமர்மம், பிரோக்ரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1930; முருகேச முதலியார் க.ச. குணபாடம், தமிழ் நாடு அரசு அச்சகம், இரண்டாம் பதிப்பு, 1951. கறிப்பலா இதன் தாவரவியல் பெயர் ஆர்ட்டோகார்பஸ் கம்யூனிஸ் (Artocarpus communis). இது மோரேசி (Moraceae) குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாயகம் பாலினேசியா எனக் கருதப்படுகிறது. பாலி னேசியாவில் இது இன்றியமையாத உணவுப் பயிராகவும், காய்கறியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பாலினேசியாவிலும் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் காணப்படும் இப்பழங்களைச் சிலரே உண்கின்றனர். டச்சுக்காரர்கள் மூலமாக இந்தியாவிற்குள் வந்த தாகக் கருதப்படும் இம்மரம் 210-32°C வெப்பமுள்ள பகுதிகளிலும், ஆண்டுக்கு 1500-2500 மி.மீ. மழை பொழியும் இடங்களிலும் நன்கு வளர்கிறது. காற்றின் ஈரப்பதம் 70-80% இருக்கும் இடங்களிலும் நீர் தேங்காத அனைத்து வகை மண்ணிலும் இதைப் பயிர் செய்யலாம். ஆனால் செம்புரை மண்ணும் செம்மண்ணும் மிகவும் ஏற்றவை. தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதியிலும், கர்நாடக கேரள மாநிலங் களின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் பெருமள வில் பயிரிடப்படுகிறது. இளமரத்திற்கு நிழல் மிகவும் இன்றியமையாதது. இம்மரம் ஏறத்தாழ 20 மீட்டர் உயரம் வளரும். வெட்டப்படும் போது இதன் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெண்மையான பால் (latex) வெளிவரும். கறிப்பலாவின் அடிமரம் தன்மையுடையது. நேராக வளரும் குச்சிகள் (twigs) தடிப்பாக, மென்மையான மயிரைப் பெற்றிருக்கும். இவற்றின் இலைகளில் இலையடிச் செதில்கள் (stipules)இருந்த இடங்களும், பட்டைத் துளைகளும் (lenticles) தெளி வாகத் தெரியும். இலை மொட்டுகள் 10-12 செ. மீ. நீளத்தில் கூம்பிய கப்பல் போன்ற இலையடிச் செதில்களால் மூடப்பட்டிருக்கும். தண்டின் இலைகள் திருகு முறையில் (spiral) அமைந்திருக்கும். இலைகள் கறிப்பலா 55 தடிப்பாகவும் தோல் போன்றும் 20-40 செ.மீ. அளவில் உறுதியாக இருக்கும். இலையின் மேற்பரப்பு பளபளப்பாகவும் அடர் பச்சை நிறமாகவும் அடிப் பரப்பு வெளிர்பச்சை நிறத்தில் சொர சொரப்பாகவும் ஆப்பு வடிவமாகவும் இருக்கும். இலை நரம்பு தடித்தும் இலைக்காம்பு 3.5 செ.மீ. நீளத்துடன் தடித்தும் காணப்படும். இலைகளின் கோணத்தில் மஞ்சரி தோன்றி யிருக்கும். ஆண் மஞ்சரி, குண்டாந்தடி (club shaped) வடிவில், 4-8 செ.மீ. நீளமுள்ள தடித்த மஞ்சரித் தண்டிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும். பூக்கள் மிகச் சிறியனவாக ஒரே ஒரு மகரந்தத்தாளைக் கொண்டிருக்கும். இரண்டு அறைகளைக் கொண்ட மகரந்தப்பை வெளியே வந்திருக்கும். பெண் மஞ்சரி, மஞ்சரித்தண்டில் நீள்சதுரமாகவோ, உருண்டை யாகவோ, பச்சை நிறத்தில் 3,5 செ. மீ. அளவில் இருக்கும். புல்லி வட்டம் இணைந்து குழாய் போல் அமைந்திருக்கும். சூலகத்தண்டு குறுகலாகவும், சூலகப்பை இரண்டாகக் கிளைத்துப் புல்லிவட்டத்தி லிருந்து நீட்டிக் கொண்டும் இருக்கும். காய், கூட்டுக்கனி (multiple fruit) ஆகும். நீள் சதுர உருண்டை வடிவில் 10-30 செ. மீ. குறுக்களவு கொண்டு. மஞ்சள் கலந்த பச்சை நிற மேல் தோலைப் பெற்றிருக்கும். இதில் விதையில்லாத, விதையுள்ள வகை உண்டு. சில இடங்களில் மேல் தோலின் மீது சிறிய முள் இருக்கும். விதை கறிப்பலா