734 கிளுவைப் பறவை
734 கிளுவைப் பறவை குறிக்கப்படும். இதன் இலை மரப்பட்டை முதலியன மாங்காயைப் போன்ற மணத்தைத் தருவதால் இதை மலைமா என்கின்றனர். தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம். கர்நாடகம் ஆ ஆகிய மாநிலங்களில் இது காணப்படு கிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர்,திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் குறிப்பாகக் காணலாம். கிளுவையில் கம்மிஃபோரா முகுல் (commiphora mukul) என்னும் தாவரவியல் பெயர் கொண்ட, குங்கிலியக் கிளுவை வகையும் உண்டு. படர்வேலியாகப் பயிராக்கப்படும் கம்மிஃபோரா பெர்ரி (commiphora berryi ) என்பதைப் பறக்கிளுவை, இந்தியன் பால்சம் என்பர். இது தன்னிச்சையான காட்டுச் செடியாக வறண்ட காடு களில் வளர்ந்திருப்பதைக் காணலாம். வளரியல்பு. இதன் இலைகள் கைவடிவக் கூட்டி லைகள். இதில் 3-7 சிற்றிலைகள் இருக்கும். பூங் கொத்துகளில் இருபால் பூக்களும், ஒருபால் பூக்களும் கலந்து காணப்படும். சிறு பூக்கள் சுவடாகக் கிளைத்தல் முறையில் சிறுசிறு கொத்துகளாக முள்ளில் தோன்றியிருக்கும். புல்லி இதழ் சாதாரண மாக 4 அல்லது 5 இருக்கும். அல்லி இதழ் 4 அல்லது 5 இருக்கும். மகரந்தத் தாள்கள் 8-10 உள்ளன. சூலகம் 3-5 அறைகளைப் பெற்றிருக்கும். ஒவ்வோர் அறையிலும் இரண்டு சூல்கள் இருக்கும். கனி உள்ளோட்டுச் சதைக்கனி வகையைச் சேர்ந்தது. பொருளாதாரப் பயன்கள். இது ஓர் அழகிய மரமா கையால் சாலை ஓர மரமாக வளர்ப்பதுண்டு. தடிமனான அடிமரத்தைசு கொண்டிருக்கும் இதைப் போத்து மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். பட்டாணியளவில் இருக்கும் இதன் காய்கள் உண்ணத் தகுந்தவை. இக்காய்களை ஊறுகாய் செய்வதுண்டு. மரப்பிசினைச் சிதைத்து வடித்துக் கரும்பழுப்பு நிற மான எண்ணெய் தயாரிக்கலாம். மரப்பிசினைச் சாம்பிராணி போலத் தீயிலிட்டுப் புகை உண்டாக்க லாம். கிளுவைப் பறவை கோ. அர்ச்சுணன் அன்சரிஃபார்மிஸ் வகுப்பில் அனாட்டிடே குடும்பத் தில், அனாட்டினே துணைக் குடும்பத்தில் அனாஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்த 38 சிற்றினங் களும் ஏனைய பேரின வகையைச் சேர்ந்த 5 சிற்றினங்களும் பொதுவாகக் கிளுவைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை ஆறு, குளம் மற்றும் நன்னீர் நிலைகளில் வாழ்கின்றன. தங்களுடைய முக்கிய உணவாக நீர்த்தாவரங்களையே உட்கொள்ளு கின்றன. ஆழமற்ற நீர்ப் பகுதிகளில் உள்ள நீர்த் தாவரங்களை நீருக்குள் மூழ்கி, தங்களுடைய அலகால் 13 வெளியே இழுத்து வந்து உண்ணுகின்றன. சிலசமயம் இறகுகளை விரித்த வண்ணம் பறந்து தானியங் களையும், புழு, பூச்சிகளையும் ரையாக உண்ணு கின்றன. இவற்றின் அலகு தட்டையாகவும், அகலமா கவும் இருக்கும். பின்விரல்கள் மெல்லிய சவ்வினால் மூடப்படாத பண்பு. உண்மையான வாத்துகளிட மிருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டுகின்றது. நீரின் மேல் நன்கு மிதந்து நீந்தக் கூடியவை. இவ்வாறே நீரினின்று குதித்து மேலெழுந்து வேகமாகப் பறக்கக் கூடியவையும் ஆகும். பறக்கும் போது. பறப்பதற்குத் தேவையான உயரத்தை எட்டும் வரை ஒலியுடன் சிறகுகளை விரைவாக அடித்துக்கொள்ளும். பொதுவாகக் கூட்டங்கூட்டமாக நெருங்கியே பறந்து செல்லும், உலகம் முழுதும் பரவியிருந்தாலும், புவியின் வடபகுதியில் காணப்படும் நன்னீர் நிலை களில் மிகுதியாக வாழ்கின்றன. வலசை போகும் தன்மை கொண்டவை. சைபீரியா போன்ற பகுதிகளி லிருந்தும் இந்தியாவிற்கு வலசை வருகின்றன. ஆண் ளுவை இனச் சேர்க்கைக்குப் பிறகு சில காலம் பறக்காமலிருக்கும். ஏனைய காலங்களில் தம் வலிவான இறகு அமைப்பால் எப்போதும் பறந்து கொண்டே இருக்கும். இனச்சேர்க்கைக்குப் பின்னர் ஆண் கிளுவை, பெண் கிளுவையைப் போலவே தோற்றம் கொண்டிருக்கும். பெண் கிளுவை, ஆண் கிளுவையைவிடச் சிறியதாகவும், அடிக்கடி உரக்கக் கத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். கிளுவைகள் (dabbling duck) நன்னீர் நிலைக ளுக்கு அருகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும். நீர்ப் பகுதிக்கு ஒட்டியவாறு புற்களால் பின்னப்பட்டு ஓரம் கட்டப்பட்ட சிறு சிறு பள்ளங்களைத் தங்களுடைய கூடுகளாக அமைத்துக்கொள்கின்றன. பெண் கிளுவை தன் மார்புப் பகுதியினின்று வீழும் மெல்லிய இறகு களைக் கொண்டு கூட்டிள் அடிப்பகுதியை மென்மை யாக்கிக் கொள்ளும். தன்னுடைய சிற்றினத்தைச் சேர்ந்த அல்லது. வேறு சிற்றினத்தைச் சேர்ந்த. ஒன்றிற்கும் மேற்பட்ட கூடுகளில் 6-12 முட்டைகளை இடும். பெண் கிளுவைகளே அடை காக்கின்றன. முட்டைகள் கொத்தாக இடப்படும். முட்டைகளிலிருந்து குஞ்சுகள் 20-25 நாளில் வெளி வரத் தொடங்கும். குஞ்சுகள் இரண்டு வார காலத்தில் நன்கு வளர்ந்து பறக்கத் தொடங்கும். ஓர் ஆண்டில் இனப்பெருக்கம் செய்வதற்கேற்ற முதிர்ச்சியைப் பெறுகின்றன. அனாஸ் ரூப்ரிபெஸ் (Anas rubripes), அனாஸ் ஸ்ட்ரெப்பிரா (Anas strepera) அனாஸ் குர்கூடுல் (Anas querquedule) அனாஸ் பிளேவிரோஸ்டிரிஸ் {Anas plavirostris). அனாஸ் ஈனட்டா (Anas Aenata) அனாஸ் பென்னிலோப் (Anas penelope }. .