பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/756

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 கிளேவிக்கிள்‌

736 கிளேவிக்கின் இவ்வினையின் இயங்கு முறைக்கான சான்றுகள். வினையுறு மெத்திலீன் (active methylene) தொகு தியை உள்ளடக்கிய சேர்மங்கள், எத்தாக்சைடுடன் டியூட்டிரியம் சுமந்த எத்தில் ஆல்கஹாலின் (C, H,OD) முன்னிலையில் ஹைட்ரஜன்-டியூட்டீரியப் பரிமாற்றம் அடைகின்றன. இதன் விளைவாக டியூட் டீரியம் ஏற்றப்பட்ட கார்பன் நேர்மின் அயனியும் டியூட்டிரியமற்ற கார்பன் நேர்மின் அயனியும் சம நிலையிலுள்ளன. -CH,CO-+EtO = EtOH + CHCO- EIOD - CHDCO - + Eto- ஒளி சுழற்றும் பண்புடைய எஸ்ட்டர்களை இவ் வினைக்குட்படுத்தும்போது அவை எத்தாக்சைடு அயனியால் சுழிமாய் கலவையாக (recemic mixture) மாறுகின்றன. கிளெய்சன் வினையில் இடைநிலைப் பொருளாகக் கார்பள் நேர்மின் அயனியாக இருந் தாலன்றி இந்த இடவலம்புரிச் சமநிலையாக்கல் (racemisation) நிகழ வாய்ப்பில்லை. H R-C-COOCH¸ C,H,O- - H+ - H + R R-C-COOC, H₂ +H சுழிமாய் கலவை CH, C–CH,– COOC,H, 1! O(I) CH,-C = CH COOCH 6. (II) எனவே, இயங்குமுறையின் இறுதிக் கட்டத்தில் நிலை வலப்புறம் தள்ளப்படுகிறது. மேலும், அசெட்டிக் அமிலத்தால் (II) அயனி அகற்றப்படுகை யில் இச்சமநிலை மேலும் வலப்புறம் சாய்கிறது. ஐசோ இவ்விளக்கத்திற்குச் சான்று, எத்தில் பியூட்ரேட்{CH,), CHCOOC,H,கிளெய்சன் குறுக்க வினைபுரிவதில்லை. ஏனெனில், இவ்வினை நிகழ்ந்தால் தோன்றக்கூடிய விளைபொருளான CH3 CH, CHCOC CH, CH, COOC,H. என்னும் தீ - கீட்டோ எஸ்ட்டரில் எஸ்ட்டர் தொகுதிக்கு அடுத்த இருக்கையில் திறன் சேர் ல்லை. ஹைட்ரஜன் எத்தில் அசெட்டோ அசெட்டேட் தொகுப்பில் இறுதிக் கட்டத்தில் நிலவும் சமநிலை இங்கு இல்லை; எனவே வினைக்கு ஊக்கம் இல்லை. சோடியம் ட்ரை ஃபீனைல் மெத்தில் போன்ற மீக் காரங்களைப் பயன்படுத்தினால் இவ்வினையை நிகழ்த்தலாம். -மே. ரா. பாலசுப்ரமணியன் சம இவ்வினை ஒரு மீள் வினையாதலால், நிலையின் இருக்கை வலப்புறம் தள்ளப்படுவதற்கு (அதாவது இறுதி வினை விளைபொருளின் விளைச்சல் கூடுதலாவதற்கு) உந்துகோலாக ஒரு காரணி இருந்தாக வேண்டும். இவ்வகையில் கீழ்க்காணும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விட எத்தில் அசெட்டேட்டை விட எத்தில் ஆல்க ஹால் வலிவுமிக்க அமிலமாதலால் இயங்கு முறையின் முதல் கட்டத்தில் சமநிலை வலப்புறம் தள்ளி யுள்ளது. ஆனால், எத்தில் அசெட்டோ அசெட்டேட் (pKa = 10.68) எத்தில் ஆல்கஹாலை (pKa 15.5) வலிவுமிக்க அமிலமாகும். இதன் விளைவாக எத்தில் அசெட்டோ அசெட்டேட் அதனுடைய ணை உப்பு மூலவடிவிலேயே (conju- gate base), அதாவது, அதன் நேரயனியாகவே உள்ளது. கிளேவிக்கிள் கிளேவிக்கிள் எனப்படும் காறை எலும்பு (clavicle) ஒரு நீண்ட "f" போன்ற அமைப்புடையது. மற்ற வகையான எலும்புகளிலிருந்து இது கீழ்க்காணும் வகையில் மாறுபடுகிறது: இதில் கூழ்மக் குழிவு இல்லை; படலத்தின் மூலம் எலும்பாக மாறுகிறது; கிடைமட்டத்தில் உள்ள இந்த எலும்பு தோலுக்கு அடியில் காணப்படுகிறது. பணிகள். தோள் பட்டை தொங்கி விடாதவாறு இது பாதுகாக்கிறது. கையை எளிதில் ஆட்ட உதவு கிறது. கொரகோ-காறை எலும்புப் பந்தகம் வழியாக மேற்கையின் பளு உடலுக்குச் செல்கிறது. தோள் பட்டை வளையத்தின் முக்கிய பகுதியான இது, கையைத் தோள் பட்டைக்கு மேலாக உயர்த்த உதவுகிறது.