பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/757

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக்கால்‌ 737

கிளைக்கால் 737 பகுதிகள். இது நடுப்பகுதி, அக்ரோமிய நுனி மார்பு நடு எலும்பு நுனி என்னும் பகுதிகளைக் கொண்டது. இதில் பல பரப்புகள் காணப்படுகின்றன. மேற்பரப்பில் டிரபெசியஸ், ஸ்டெர்னோமாஸ்டாய்டு, மார்புப் பெருஞ்சதை, தோள் பட்டைத் தசை ஆகியவை இணைந்துள்ளன. கீழ்ப்பரப்பில் மேற்கூறிய தசைகளைத் தவிர காறை அடித்தசையும், விலா எலும்பு - காறை எலும்புப் பந்தகமும் காணப்படுகின்றன. அக்ரோமிய நுனியில் அக்ரோமிய-காறை எலும்பு மூட்டின் உறைப் பந்தகம் இணைக்கப்பட்டுள்ளது. மார்பு நடு எலும்பு நுனியில் காறை எலும்பு களிடைப் பந்தகம், உறைப் பந்தகம், மார்பு நடு எலும்புக் காறை எலும்பு மூட்டின் இணைப்புத் தகடு ஆகியவை காணப்படுகின்றன. பெண்சுளில் காறை எலும்பு குட்டையாகவும் மெல்லியதாகவும் வளைவு குறைந்து, காணப்படுகிறது. காறை எலும்பு முறிவு வெளிப்புறத்தில் மூன்றில் ஒரு பகுதியும், உட்புறத்தில் மூன்றில் இரண்டு பகுதியும் சந்திக்கும் இடத்தில் ஏற்படுகிறது. கிளைக்கால் வழவழப்பாகவும் கதிரேசன் இரண்டு ஹைட்ராக்சி தொகுதிகளை இருவேறு கார்பன் அணுக்களில் கொண்ட கரிமவேதிச் சேர் மங்கள் கிளைக்கால்கள் (glycols) எனப்படுகின்றன. இவை பொதுவாக அலிஃபாட்டிக் வகையினவாகவும், நீள்தொடர் சேர்மங்களாகவும் உள்ளன. கிளைக் கால்கள், டைஆல்கள், டைஹைட்ரிக் ஆல்கஹால்கள், பாலிகிளைக்கால்கள் என்று வேறுபெயர்களாலும் சுட்டப்படுகின்றன. இவை a, நீ,7... கிளைக்கால்கள் என ஹைட்ராக்சி தொகுதியின் இருப்பிடத்திற் கேற்ப வகைப்படுத்தப்படும். கிளைக்கால்கள் சாதாரணமாக நீரில் கரைவனவாகவும், நீர் உறிஞ்சும் தன்மை கொண்ட பாகு போன்ற நீர்மங்களாகவும் உள்ளன. எத்திலீன் ஆக்சைடைப் பல்லுறுப்பாக்கல் வினைக்குட்படுத்தித் தயாரிக்கப்படும் பாலி எத்திலீன் கிளைக்கால்கள் (பாலி கிளைக்கால்கள்) அதிக மூலக் எடையைக் கொண்டிருந்தபோதும் நீரில் கரைகின்றன. ஆனால் புரோப்பிலீன் ஆக்சைடி லிருந்து பெறப்படும் பாலிபுரோப்பிலீன் கிளைக்கால் மூலக்கூறு எடை அதிகரிக்கும்போது நீரில் குறை வாகக் கரைகிறது. கூறு பெயரிடும் முறை. அல்க்கீனை ஹைட்ராக்சிலேற்ற வினைக்குட்படுத்தித் (hydroxylation) தயாரிக்கப் படும் கிளைக்கால்கள். அல்க்கின் பெயருடன் கிளைக்கால் பின்னொட்டுச் சேர்த்துச் சாதாரண மாகக் குறிக்கப்படும். - அ.க.8-47 HOCH,CH,OH எத்திலீன் கிளைக்கால் (CH,),COH CH,OH 1 ஐசோபியூட்டேன் கிளைக்கால் B.y....கிளைக்கால்கள் அவற்றையொத்த பாலி மெத்திலீன் கிளைக்கால்களைப்போல் பெயரிடப்படு கின்றன. HOCH,CH,CH, OH - ட்ரைமெத்திலீன் கிளைக்கால் HOCH,CH,CH,CH,CH,OH IUPAC முறைப்படி, பென்ட்டா மெத்தி லீன் கிளைக்கால் அல்க்கேன் பெயருடன் டைஆல் (diol) என்னும் பின்னொட்டுடன் ஹைட் ராக்சி தொகுதிகளைக் குறிப்பிட எண்களும் பயன் படுத்தப்படுகின்றன. (எ.கா.) - CH CHOHCH,OH CH3 CH, புரோப்பேன் - 1,2-டை ஆல் HOCH, CH,CHCH,CHCH,OH - 2, 4 டைமெத்தில் ஹெக்சேன்- 1,6-டை ஆல் வினைகள்.கிளைக்கால்கள் ஆல்கஹ்ால்களைப் போலவே எஸ்ட்டராக்கம் (esterification), ஈத்தர் ஆக்கம் (etherification), உப்பு உண்டாக்குதல் போன்ற வினைகளில் ஈடுபடுகின்றன. இவை அமிலங் களுடன் வினைப்பட்டு நீள்தொடர் பாலிஎஸ்ட்டர் பல்லுறுப்பிகளைக் கொடுக்கின்றன. இவை தொழில் துறையில் மிகவும் பயன்படும் செயற்கை இழைகள், நெகிழிகள் (plastics) போன்றவை தயாரிக்க உதவுகின்றன.டைஐசோசயனேட்டுகளுடன் கிளைக் கால்கள் (முக்கியமாக பாலிபுரோப்பிலீன் கிளைக் கால்கள்) வினைபுரிந்து பாலியூரத்தேன்களைத் தருகின்றன. இவை செயற்கை நுரை மெத்தை களைத் தயாரிக்கவும், மீட்சியுறக் கூடிய நெகிழிகள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன. T 1,2 டைஆல்கள். எத்திலீன் கிளைக்காலும்,1,2 புரோப்பிலீன் கிளைக்காலும் இவ்வகைக் கிளைக் கால்களில் முக்கியமானவையாகும். எப்பாக்சைடுகள், குளோரோஹைட்ரின்கள், 1,2 டைகுளோரைடுகளை நீராற்பகுக்கும்போதோ - கீட்டோ அல்லது ஹைட்ராக்சி ஆல்டிஹைடுகள் அல்லது கீட்டோன் வினையூக்க ஒடுக்குதலுக்குட்படுத்தும் போதோ 1,2 டை ஆல்கள் கிடைக்கின்றன. எத்திலீன் ஆக்சைடை நீராற்பகுத்தோடெலூரியம் ஆக்சைடைப்பயன்படுத்தி எத்திலீன், ஆக்சிஜனையும், நீர்ம நிலைமையில் வினைப்