கிளைத்தல் 739
(112 மீட்டர்) வளரக்கூடிய ஒன்றாகும். இதற்குக் காரணம் பக்கக் கிளைகள் அதிக வளர்ச்சியடை யாமல் முனைமொட்டு (apical bud) மிக வேகமாக வளர்வதேயாகும். இவ்வாறு தாவரங்களில் சிலவகை பெரியனவாகவும் ஏனையவை உயரமாகவும் வளர் வதற்குக் கிளைத்தலே காரணமாகும். தாவரங்களில், கிளைகள் தோன்றும் விதம் மாறு படுகிறது. உயர் தாவரங்களில் (phanerogams) கோணமொட்டுகளிலிருந்து பக்கக் கிளைகள் தோன்றுகின்றன. ஆனால் கீழ்த் தாவரங்களில் cryptogams) முளை மொட்டு இரட்டை இரட்டை மடல்களாகப் பிரியும். உயர் தாவரங்களில் கிளைத்தல் ஒரு பாதக் கிளைத்தல் monopodial branching), பலபாதக் கிளைத்தல் (sympodial branching) என இரு வகைப் படும். கிளைத்தல் 739 கூம்பு வடிவில் இருக்கும். முடியில் மையத் தண்டே ஆதிக்கம் செலுத்தும். ஒரு பாதக் கிளைத்தல் ஒருபாதக் கினைத்தல். சில தாவரங்களில் மையத் தண்டின் முனைமொட்டு நீண்டகாலம் தொடர்ந்து செயல்படுகிறது. அத்தகைய தாவரங்களில் மையத் தண்டு நெடிது உயர்ந்து காணப்படும். மையத் தண்டின் மேல் பகுதியிலிருந்து பக்கக் கிளைகள் தோன்றுகின்றன. இக்கிளைகள் மையத் தண்டை விட அளவில் சிறியனவாக உள்ளன. முதிர் கிளை கள் அடிப்பகுதியிலும் இளங்கிளைகள் மேற்பகுதி யிலும் உள்ளன. இவ்வாறு கிளைவிடும் முறைக்கு ஒருபாதக் கிளைத்தல் என்று பெயர். நெட்டிலிங்கம், சவுக்கு, ஊசியிலை மரங்கள் ஆகியவை இதற்குச் சிறந்த சான்றுகளாகும். இத்தாவரங்களில் முடி அ. க. 8-47அ பலபாதக் கினைத்தல் பலபாதக் கினைத்தல். சில தாவரங்களில் மையத் தண்டின் முனைமொட்டு குறிப்பிட்ட காலம் வரையே செயல்படுகிறது. பிறகு தாவரத்தின் வளர்ச்சி பக்கக் கிளைகள் மூலமே நடைபெறுகிறது. த்தகைய தாவரங்களில் தடித்த அடிமரம் (trunk) இருக்கும். இதன் முனையிலிருந்து பல தடித்த பக்கக் கிளைகள் தோன்றுகின்றன. இவ்விதம் கிளைவிடும் முறை பல பாதக் கிளைத்தல் எனப்படும். முடி ஏறத்தாழ நீள் வட்ட வடிவில் இருக்கும். முடியில் பக்கக் கிளைகளே . படம் 3.