56 கறிவேப்பிலை (சித்த மருத்துவம்)
56 கறிவேப்பிலை (சித்த மருத்துவம்) யில்லாத வகையில் இளம் மஞ்சள் அல்லது வெள்ளை நிற உள் சதையும். விதை உள்ள வகையில் உண்ணும் சதைப்பகுதி குறைந்து கொட்டைகள் மிகு எண்ணிக் கையிலும் காணப்படும். கொட்டைகள் பழுப்பு நிறத்துடன், உருண்டையாகவோ, தட்டையாகவோ இருக்கும். ஆண் பூக்கள் தோன்றிய 10-15 நாளில் மகரந்தத்தூள்கள் வெளியாகின்றன. பெண் பூக்கள் வெளிவந்த மூன்று நாள் வரையே மகரந்தத்தூள் களை ஏற்கும் திறன் கொண்டிருக்கும். மகரந்தச் சேர்க்கை இல்லாமலும் காய்கள் உண்டாகலாம். ஆனால் அவை உருவில் மிகச் சிறியவையாக இருக்கும். இந்தியாவில் கையால் மகரந்தச்சேர்க்கை செய்ததில் பெருமளவில் காய்கள் உண்டாவதுடன் அவை பெரிய அளவாகவும் இருப்பது அறியப் பட்டுள்ளது. விதைகளைப் பழத்திலிருந்து எடுத்து உடனே விதைக்க வேண்டும்; இல்லாவிடில் விதைகளின் முளைப்புத்திறன் குறைந்து விடுகிறது. விதையில்லாத வகை, வேர்க்கன்றுகள் வேர்ப்பதியன்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வேர்ப்பலா சாகுபடி செய்ய 50 × 50 × 50 செ.மீ. அளவுள்ள குழிகளைத் தோண்டி 10-13 இடைவெளியில் கன்று களை நடவு செய்யலாம். கன்றுகள் லிரைவில் வளர்ந்து 3-6 ஆண்டுகளில் காய்களைத் தரும். மஞ்சரி வெளிவந்த 60-90 நாளில் காய்களை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த மரங்களிலிருந்து ஆண்டுக்கு 1-4.5 கிலோ எடையுள்ள ஏறத்தாழ 700 காய்களை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப் பட்ட காய்களை நீண்ட நாள் சேர்த்து வைக்க முடிவ தில்லை. காய்களை மென்மை அழுகல் நோய் (soft rot disease) தாக்கி அழுகச் செய்யும். இந்நோய் ரைசோபஸ் ஆர்ட்டோகார்ப்பி (rhizopus artocarpi) என்னும் பூசணத்தால் உண்டாகிறது. இதைக் கட்டுப் படுத்த 0.25% தாமிர ஆக்சிகுளோரைடு மருந்துக் கலவையைப் பயன்படுத்தலாம். கறியாகப் பயன்படுத்தப்படும் இப்பலா இனிப்புப் பலாவைப் போன்று உருவில் சற்றுச் சிறியதாக இருக்கும். இது ரொட்டி போன்று சுவையுடன் இருப்பதால் இதை ரொட்டிக்கனி (bread fruit) என்பர். கறிப்பலாவின் மேல்தோலைச் சீவியபின் சிறு துண்டுகளாகச் செய்து சமைத்து உண்ணலாம். சிலர் முழுக்காயை வேகவைத்து, மேல்தோலை நீக்கிப் பின் துண்டுகளாக வெட்டி ரொட்டி போல் வறுத்தும், பிஸ்கட் செய்தும் உண்பர். நூறு கிராம் கறிப்பலாவில், 1.5 புரதம், 0.2 கொழுப்பு, 2.1 நார்ப்பொருள், 15.8 மாவுப்பொருள், 40 மி.கி. கால்சியம், 30 மி. கி. பாஸ்பரஸ், 0.5 மி.கி. லைட்டமின் C,70 கிலோ கலோரி ஆற்றல் 9 மைக்ரோ கிராம் கரோட்டின் முதலியன அடங்கியுள்ளன. கறிப்பலாவின் இலைகள் மாட்டுக்கு நல்ல தீவன மாகும். இதன் மரப்பட்டையிலிருந்து நார் எடுக்கப் படுகிறது. மரத்திலிருந்து வடியும் பாலைத் திரட்டி. படகுகளில் நீர் உட்புகாமல் இருக்கப் பயன்படுத்து கின்றனர். இம்மரம் மிகவும் அழகான தோற்றமுடைய தாகையால் இதைப் பூங்காக்களில் விரும்பி வளர்ப்ப தோட்டங்களிலும் துண்டு. வீட்டுத் ஆங்காங்கே ஓரிரு மரங்களை வளர்க்கின்றனர். -இராபின்சன் தாமஸ் Tropical crops- நூலோதி Pursegrove, J.W. Dicors. English language Book Society, Longmans, London, 1963 : Albert F. Hill, Economic Botany, Tata McGraw-Hill publishing Company New Delhi, 1979, கறிவேப்பிலை (சித்த மருத்துவம்) இதன் இலை, பட்டை, வேர் இவற்றைக் குடிநீரிலிட் டுக் கொடுக்க, சுவையின்மை, சீதபேதியால் வரும் வயிற்றுளைச்சல், பைத்தியம் ஆகியவை நீங்கும். இதன் இலையை நிழலில் உலர்த்தி, இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றைப் பொடி யாக்கிச் சோற்றில் கூட்டி, சிறிது நெய் விட்டுக் கலந்து உண்ண,மந்தம், மந்தபேதி, மலக்கட்டு, சிரகணி, பிரமேகம் ஆகியவை நலமாகும். இலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் கூட்டித் துவையல் செய்து உணவுடன் சாப்பிட, அரோசகம், அதிசாரம், பித்த வாந்தி, பித்த சயம், செரியாமை, வயிற்றுளைச்சல் இவை நலமா கும். அரிசியுடன் இலையைச் சேர்த்து உரலிலிட்டுக் குத்தித் தேய்த்துப் புடைத்துவிட்டு, அவ்வரிசியுடன் ஒரு பழுத்துலர்ந்த மிளகாய் கூட்டிக் கருக்கி சாந்து நிறம் வரும் பக்குவத்தில், வசம்புச் சாம்பல், சிறு நாகப்பூ. அதிவிடையம் இவற்றைச் சேர்த்து நீர் விட்டுச் சுண்டக்காய்ச்சிக் கொடுக்க, செரியாமை, பேதி முதலியன நீங்கும். . மேற்கூறிய இலையிற் சிறிதும், வயதுக்குத் தக்க வாறு 1,3 மிளகும் சேர்த்து நெய்யில் வறுத்து, வெந்நீர் விட்டு அரைத்துக் கரைத்து, சிறுவர்களுக்கு நீராட் டிய பின் கொடுத்தால் மந்தம் முதலியன நீங்கிப் பசின யை உண்டாக்கும். கறிவேப்பிலை ஈர்க்கின் புறணியைத்தாய்ப்பால் விட்டு இடித்து ரசம் பிழிந்து, கிராம்பு, திப்பிலி சேர்த்து, 2-3 முறை குழந்தைகளுக் குப் புகட்ட வாந்தி நிற்கும். நல்ல பசி உண்டாகும். இதன் ஈர்க்குடன், வேப்பீர்க்கு, நெல்லியீர்க்குச் சேர்த்து, நீர் விட்டுக் காய்ச்சிக் கொடுக்க, வாந்தி உடனே நிற்கும். கறிவேப்பிலையீர்க்கு,சுக்கு,சீரகம், ஓமம் வகைக்கு 3.5 கிராம்.7.8 லிட்டர் நீரில்