பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/762

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 கிளையலைப்‌ பகுப்பாய்வி

742 கிளையலைப் பகுப்பாய்வி ஒவ்வோர் ஆக்கக் கூறையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தனிப்படுத்துகிறது. இயங்கு சுருள் அளவி, எண்ணுரு காட்டுந் திரை, வரைகோட்டுப் பதிவுசெய்யும் கருவி, x-y வரைகோடு வரைவி, எதிர்மின்முனைக் கதிர்க் குழல் போன்ற கருவிகளைக் கொண்டு இந்தப் காட்டும் அளவீடுகளை வெளிக் பகுப்பாய்வி காணலாம். கிளையலை ஆக்கக் கூறுகளின் அதிர் வெண்களையும் ஆற்றல் நிலைகளையும் நுட்பமாகக் கண்டுபிடிக்கிற வகையில் இந்தக் கருவியில் அளவு குறிக்கப்பட்டிருக்கும். படியமைப்பு வடிப்புப் பகுப் பாய்வி (stepped filter analyser) என்னும் வகையில் பகுப்பாய்வு செய்ய வேண்டிய குறிப்பலை சேர்ந்தாற் போல ஒரு பட்டைக்கடத்து வடிப்பான் வரிசையில் செலுத்தப்படும். அந்த வரிசையில் உள்ள ஒவ் வொரு பட்டைக் கடத்து வடிப்பானும் வெவ்வேறு மைய அதிர்வெண்ணைக் கொண்டிருக்கும். துலக்கி யின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாக வடிப்பான்களில் வெளியீடு செலுத்தப்படும். அளவுகாட்டியில் ஒவ் வொரு வடிப்பான் அதிர்வெண்ணுக்கும். நேரான குறிப்பலை மட்டம் காட்டப்படுகிறது. இந்த முறை, வேலைச் சுமை மிகுந்தது. பெருஞ் செலவு பிடிப்பது. எனவே இம் முறையைச் செம்மைப்படுத்தி அதே விளைவைப் பெறலாம். மட்டும் பயன் அதற்கு இரண்டு வடிப்பான்களை படுத்தினால் போதும். வடிப்பான் உறுப்புகளின் மதிப்புகளை மாற்றி அவற்றின் இசைவு அதிர்வெண் களை மாற்றலாம். இரண்டு வடிப்பான்களின் அதிர் வெண்களும் ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தப் படுகின்றன. இம்முறையில் ஒரு வடிப்பானின் அதிர் வெண் மாற்றப்படுகையில் மற்ற வடிப்பான் அளவீடு களை எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. கலக்கிப்பிரிப்புப் பகுப்பாய்வி (heterodyne analyser) என்னும் வகையை வழக்கமாக அலைப் பகுப்பாய்வி எனக் குறிப்பிடுவர். இது ஒரு கலக்கிப் பிரிக்கும் வானொலி ஏற்பியின் தத்துவத்தில் செயல் பட்டுப் பகுப்பாய்வு செய்ய வேண்டிய குறிப்பலையை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாறிலியான அதிர்வெண் ணுடையதாக மாற்றி அந்த அதிர்வெண்ணில் வடி கட்டலை நிகழ்த்துகிறது. வடிப்பான் அதிர் வெண்ணை மாற்றுவதற்கு மாறாக இசைவிப்பு அலைவியின் அதிர்வெண் மாற்றப்படுகிறது. பட்டை அகலம், வடிவம் போன்ற தன்னியல்புக கள் மாறாம் லிருக்கிற ஒரு வடிப்பானைக் கொண்டு அளவீடு களை எடுக்க முடிவது இம்முறையின் நன்மை ஆகும். ஒரே ஒரு வடிகட்டி மட்டுமே தேவைப்படுவதால் இந்த வகைப் பகுப்பாய்வி மாறு வகை அல்லது படியமைப்பு வகைகளைவிடப் பொதுவாக அதிகத் தேர்வுத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. நிற மாலைப் பகுப்பாய்வி என்பது தானாகவே வீசும் கலக்கிப் பிரிப்புப் பகுப்பாய்வி வகையைச் சேர்ந்ததே ஆகும். 600 SOUT வடிப்புப் பகுப்பாய்வி (parallel filter analyser). மேலே விவரிக்கப்பட்ட பகுப்பாய்விகள் வரிசை அல்லது தொடர் வகைப் பகுப்பாய்விகள் எனப்படும். அவை அனைத்து நோக்கங்களுக்கும் பயன்படுவதில்லை. அவற்றில் ஒரு முக்கியமான றை உள்ளது. எடுக்கப்படும்போது உள்ளிடு குறிப்பலை மாறாததாக இருக்க வேண் டும். அளவீடுகள் பேச்சொலி போன்ற மாறிக்கொண்டே இருக்கிற அலையுருக்களைப் பகுப்பாய்வு செய்யும் போது மெய்நேரப் பகுப்பாய்வி (real time analyser) ஒன்று தேவைப்படுகிறது. அது ஓர் அலையுருவின் அனைத்து அதிர்வெண் ஆக்கக் கூறுகளையும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல ஒருங்கே காட்ட முடியும். இணை வடிப்புப் பகுப்பாய்விகள் இத்தகைய மெய்நேரப் பகுப்பாய்விகள் ஆகும். இவற்றை விடவும் மேலானவை நடைமுறைக்கு வந்துவிட்டமையால் இவை வரலாற்றில் மட்டுமே இடம் பெறுபவையாகி விட்டன. உயர்ந்த தேர்வுத் திறனைக் குறைந்த செலவில் பெற முடியாததும், முப்பதுக்கு மேல் வடிப் பான்களைச் சேர்க்க முடியாத நுண் பிரிதிறனைப் பெற முடியாததும் இம்முறையின் குறைகள் ஆகும். நேரச் சுருக்கப் பகுப்பாய்வி (time compression analyser) என்னும் கருவி அனைத்து அதிர்வெண் ஆக்கக் கூறுகளையும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் அளவிடுகிறது. எனவே இதை ஒரு மெய்நேரப் பகுப் பாய்வியாகவே வகைப்படுத்துகின்றனர். இது கலக்கிப் பிரிக்கும் வகையின் ஒரு மாறுபட்ட அமைப்பு ஆகும். ஆனால் இதில் கலக்கிக்கு (mixer) முன்னால் ஓர் எண்குறி செயல்பாட்டுப் பகுதி உள்ளது. இந்தப் பகுதி உள்ளிடு குறிப்பலைகளைச் சேமித்து, அதன் நேரத்தைச் சுருக்கி அதன் பிறகு உள்ளிடு குறிப் பலையின் படியைத் தொடர்ந்து ஒலிக்கிறது. அதே நேரத்தில் இசைவிக்கக்கூடிய அலைவி தேவைப்பட்ட அதிர்வெண் நெடுக்கத்தில் கருவியை இசைவிக்கிறது. விரைவு ஃபூரியர் மாற்றப் பகுப்பாய்வி. நேரச் சுருக்கப் பகுப்பாய்வி சமான வகைப் பகுப்பாய்வியை மேம்படுத்த எண்ணியல் முறைகளைப் பயன்படுத்து கிறது. ஆனால் விரைவு ஃபூரியர் மாற்றப்பகுப்பாய்வி எண்ணியல் முறைகளை மட்டுமே பயன்படுத்துகிறது. இக்கருவி ஓர் அலையுருவின் ஆக்கக் கூறுகளைக் கணக்கிடும்போது ஃபூரியர் மாற்றத்தைக் கண்டு பிடிக்க ஒரு கணித வழியைப் (algorithm) பயன்படுத்து கிறது. அலையுருவின் ஒலி ஆக்கக் கூறுகளின் கட்டங் களையும் அளவிட முடிவது இக்கருவியின் சிறப்புப் பயன் ஆகும். இதில் மேலும் எண்ணியல் செயல்முறை களைச் செய்ய முடியும் என்பது மற்றுமொரு நன்மை ஆகும். விரைந்து உயர்த்தல் (zoom) தாமாய் ஒரு