கிளையலை வேகமாற்றி 743
முகப்படுத்தல் (auto correlation) போன்ற செயல் முறைகளையும் நிகழ்த்த முடியும். உருக்குலைவு காரணி அளவி (distortion factor meter) என்னும் கருவி அதிர்வெண்கள், வீச்சுகள் ஆகியவற்றின் தனிப்பட்ட மதிப்புகளை அளிப்பதில்லை. அதற்கு மாறாகத் தேவைப்படுகிற அல்லது அடிப்படைக் குறிப்பலையின் ஒரு விகிதமாகத் தேவைப்படாத அல்லது உருக்குலைந்த ஆக்கக் கூறுகளைக் குறிப் பிடுகிறது. இத்தகைய கருவிகள் ஒலியியல் கருவி களில் ஏற்படுகிற ஒலி உருக்குலைவை அளவிட உதவுகின்றன. இந்த ஒலியியல் கருவிகளில் வெளி வீட்டு ஒலிகளைப் பற்றிய விவரமான, தனித்தனி யான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை. அவை எந்த அளவுக்கு ஒலிக்குறிப் பலைகளை உருக்குலையச் செய்கின்றன என்பதைக் காட்டுகிற, உருக்குலைப்புக் காரணியை (distortion factor) அல்லது சிறப்பியல்பு எண்ணை (figure of merit) மட்டும் அறிந்தால் போதும், படம் 2 இல் இத்தகைய ஒரு கருவியின் திட்டப்படம் காட்டப் பட்டுள்ளது. தேவைப்படாத குறிப்பலை ஆற்றல் மட்டத்தை விலக்கப்பட்ட அடிப்படைச் சுரத்தின் ஆற்றல் மட்டத்துடன் ஒப்பிட்டுக் கணக்கிடக்கூடிய வகையில் மேற்கோள்ஆற்றல் ஒரு நிறுவிய பின்னர் மட்டத்தை சைவாக்கக் கூடிய விலக்கல் வடிப் பான் சுற்றில் இணைக்கப்படுகிறது. a ள்ளீடு குறிப்பை காணி சைவிக்கக்கூடிய விலக்கு வடிப்பான் படம் 2. காட்சி முகப்பு பயன்பாடுகள். இதுவரை விவரிக்கப்பட்ட மடங்கு சுரப்பகுப்பாய்விகள் (harmonic analysers) பல வகை களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒலிப்பதிவுகளும், ஒலிபரப்புகளும் நிகழ்கிற இடங்களிலிருந்து வீடுகள் வரை அனைத்து இட ங்களிலும் புழக்கத்தில் உள்ள ஒலியியல் கருவிகள் எல்லாவற்றிலும் குறிப்பலைகள் உருக்குலைக்கப்படுவது, தேவையற்ற குறிப்பலைகள் தோன்றுவது ஆகியவற்றை அளவிட இந்தப் பகுப் பாய்விகள் இன்றியமையாதவை. பேச்சொலிகளின் கிளையலை வேகமாற்றி 743 அலையுருக்களைப் பகுப்பாய்வு செய்வது எந்திரக் கரு விகளிலும் கட்டடங்களிலும் ஏற்படுகிற அதிர்வுகள், ஒத்ததிர்வுகள் ஆகியவற்றை அளவிடுவது, நிலநடுக்க ஆய்வுகளின்போது எதிரொலிகள் மீண்டு வர ஆகும் நேரத்தைக் கணக்கிடுவது ஆகியவற்றிலும் இவை உதவுகின்றன. விமானப் பொறிகளிலிருந்து வெளிப் படும் ஒலிகளைப் பகுப்பாய்வு செய்யவும், நீரில் மூழ்கி யுள்ள பொருள்களைச் சோனார் கருவிகளின் மூலம் கண்டுபிடித்துத் தொலைவைக் காணும்போது எதிரொலிகளைப் பகுப்பாய்வு செய்யவும், மனிதத் திசுக்கள் உலோக வார்ப்புகள் போன்றவற்றின் உள்ளிடக் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய உதவுகிற கேளா ஒலிக் குறிப்பலைகளை ஆராயவும் இக்கருவி கள் உதவும். கே. என். ராமச்சந்திரன் கிளையலை வேகமாற்றி க சுழல் (rotary), நீள்மை (linear) கோண (angular) நகர்ச்சிகளை, அதிக விகிதங்களில் (ratios) நேர் நகர்வாக (positive motion) மாற்றும் ஓர் இயக்க அமைப்பு முறையைக் (mechanical drive system) கிளை பலை வேகமாற்றி (harmonic speed changer) எனலாம். சுழலும் அமைப்பில் இந்த இயக்கம் மூன்று பகுதிகளை உடையது. அவை, உறுதியான வட்டக் காடிப்பூட்டி (circular spline), உள்ளீட்டு அவை எழுப்பி (input wave generator), நெளியும் தன்மை கொண்ட காடிப்பூட்டி (flexible splines) ஆகியவை யாகும். இவற்றில் ஏதாவது ஒன்றை நிலையாக்கிக் கொண்டு, உள்ளீடாகவோ (input) வெளியீடாகவோ (output) பயன்படுத்தலாம். மேலும் நிலையான இயக்கியாகவோ (fixed driver) இயக்கப்படும் உறுப் பாகவோ பயன்படுத்தலாம். காண்க: காடிப்பூட்டி படம் (1) இல் காணப்படுவதைப் போல நிலை யான உறுப்பு (fixed member } என்பது 132 உள் பற்களைக் கொண்ட நிலையான வட்டக் காடிப் பூட்டி ஆகும். யக்கப்படும் பகுதி நிலையான காடிப்பூட்டியில் உள்ள பற்களைப் போன்ற 130 வெளிப்பற்களைக் கொண்ட நெளியும் காடிப் பூட்டி யாகும். இரண்டு முட்டுக் (lobe) கொண்டதாகக் காட்டப்பட்டுள்ள இயக்கும் உறுப்பு (driving member) நெளியும் காடிப்பூட்டியில் நகரும் வட்ட அவைகளை (travelling circular waves) உற்பத்தி செய்யக்கூடியது. நெளியும் காடிப்பூட்டி நிலையான வடிவக் காடிப்பூட்டியுடன் நேர் எதிரான பகுதிகளில் இணைகிறது. அவ்வாறு ரண்டு ணையும்