பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/764

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 கிளையலை வேகமாற்றி

744 கிளையலை வேகமாற்றி அலை எழுப்பி வெளி ஓட்டம் உறுதியான வட்டக் காடிப்பூட்டி நீள்வட்ட உள்ஓட்டம் : அ நெளியும் காடிப்பூட்டி கோளப் பொதிகை உறுதியான வட்டக் காடிப்பூட்டி படம் - 1. (அ) சுழற்சி - சுழற்சி கிளையலை வேகமாற்றி (ஆ) சுழற்சியிலிருந்து சுழற்சிக்கு மாறும் உண்மையான கிளையலையாக்கியின் கட்டமைப்பு போது. ஏறக்குறைய செங்குத்தான பேரச்சுக் காண்ட (major axis) ஒரு நீள்வட்ட வடிவம் (ellipse) தோன்றுகிறது. ஏறக்குறைய கிடைமட்டக் கோடு போலத் தோன்றும் சிறு அச்சுக் கோட்டின் (minor axis) இரு பகுதிகளிலும் காடிப்பூட்டியின் பற்கள் விலகுகின்றன. அலைஎழுப்பி சுழலும்போது, நெளியும் காடிப்பூட்டியின் அச்சுகளும், காடிப்பூட்டி யின் பற்களும் சேர்ந்து விலகும் பகுதிகளோடு தொடர்ந்து சுழல்கின்றன நெளியும் காடிப்பூட்டியின் பற்கள் நிலையான காடிப் பூட்டியின் பற்களைவிடக் குறைவாக உள்ளமையால் அலைஎழுப்பி ஒரு சுற்றுச் சுற்றும்போது நெளியும் காடிப்பூட்டி ஒரு சுற்றில் 2/132 என்னும் அளவில் அலை எழுப்பிக்கு எதிராகச் சுழல்கிறது. ஆகவே வேகக்குறைப்பு 2: 132 (1:66) என்னும் விகிதத்தில் உள்ளது. காடிப் பூட்டிகளின் பற்களை அதிகப்படுத்தினால் வேகக் குறைப்பும் கணிசமாக அதிகரிக்கும். ஆனால் பற்களை அதிகப்படுத்தும்போது நெளியும் காடிப்பூட்டியின் பற்கள் நிலையான காடிப் பூட்டியைவிட இரண்டு பற்கள் எப்போதும் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். படம்1 ஆஇல் உள்ளவாறு உண்மையிலேயே செய்யப்பட்ட அலை எழுப்பியில் நீள் வட்டவடிவ உள் (inner race) ஓட்டத்தை உடைய ஒரு மணிதாங்கி (ball bearing) பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள் ஓட்டத்தைச் சுற்றும்போது அது வெளி ஓட்டத்தை (outer race) நெளியச் செய்து அதன் வெளிப்பற்களை, நிலையான காடிப்பூட்டியின் உள் பற்களுடன் பேரச்சுக் கோட்டின் வழியே இணைக் றது. சிறிய இடத்தில் அதிக விகிதத்தை உற்பத்தி செய்தல், ஒரு தொகுப்பில் (unit) 1000:1 என்னும் உறுதியான விகிதத்தில் வேகக்குறைப்பு அல்லது அதி கரிப்பை ஏற்படுத்தல், பற்களின் தேய்மானம் மிகவும் குறைவாயிருத்தல், சமன் செய்யப்பட்ட தாங்கியின் சுமை, மிகவும் குறைந்த பின்னடிப்பு (back lash), 400:1 என்னும் பற்சக்கர விகிதத்தில் உள்ள செயல் திறன், சுழற்சியிலிருந்து சுழற்சிக்கு, சுழற்சியிலிருந்து நீள்மைக்கு, நீள்மையிலிருந்து நீள்மைக்கு மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மை ஆகியவை இந்தக் கருவி யின் சிறப்புகளாகும். -டி. இந்திரன்