கிளைன்ஃபெல்ட்டர் கூட்டியல் 745
கிளையிணைப்பு ஒரு மின்சுற்று அமைப்பைப் பிறிதொரு மின்சுற்று அமைப்பின் முனையுடன் இணைக்கும் செயல் முறைக்குக் கிளையிணைப்பு (shunting) என்று பெயர். இவ்விணைப்பால் மின்னோட்டம் இவ்விரு மின்சுற்று களின் விடுப்புகளுக்கேற்ப (admittances) பகுக்கப்படு கிறது. மின்னோட்டத்தின் ஒரு பகுதியை மாற்றுவழி (by pass) மூலம் கருவியின் சுற்றுப்புறங்களுக்குக் கிளையிணைப்புக் கடத்துவதால், அளவிடும் நெடுக் கத்தை (range) மாற்ற இயலும். இதன் காரண மாகவே கிளையிணைப்பு அம்மீட்டர், கால்வனோ அளவி, பிற மின்னோட்டத்தை அளவிடும் கருவி ஆகியவற்றில் பயன்படுகிறது. . இசைவுச் சுற்றுகளில் (tuned circuit) இசைவுச் சிறப்பியல்புகளை மேம்படுத்த மின்தடை கிளை யிணைப்பில் பெரிதும் பயன்படுகிறது. மின்திருத்தி களின் (rectifiers) வெளியீட்டு மின்னழுத்தத்தின் நேர்திசையைச் சீராக்க (smooth) வடிப்பி மின்சுற்று கள் (filter circuits) பயன்படுகின்றன. எளிய வடிப்பி மின்சுற்று என்பது படத்தில் காட்டப்பட்டுள்ள கிளையிணைப்பு மின்தேக்கிச் சுற்றாகும். மின்தேக்கி யின் எதிர்வினைப்பின் (reactance) மதிப்புச் சுமை மின்தடையின் (load resistance) மதிப்பைவிடச் சிறிய தாக இருக்கும்படி மின்தேக்கி தேர்ந்தெடுக்கப்படு கிறது. Du D c = மின்தேக்கி வடிப்பி மின்சுற்று R கிளையிணைப்பு என்பது மின்தடை, மின்தேக்கி போன்றவற்றைப் பக்க இணைப்பில் இணைப்பது போன்றதே. ஒரு மின்தடையை (R,) மற்றொரு மின்தடையுடன் (R,) கிளையிணைப்புச் செய்யும் போது இவற்றின் தொகு மின்தடை மதிப்புக் (R) குறைகிறது. R R I 1 + R, கிளைள் ஃபெல்ட்டர் கூட்டியம் 745 R = 1 R, R, R,+R, அவ்வாறே, ஒரு மின்தேக்கியை (C) மற்றொரு மின் தேக்கியுடன் (CT) கிளையிணைப்புச் செய்யும்போது கிடைக்கும் தொகு மின்தேக்குந் திறன் (C) அவற் றின் தனித்தனி மின்தேக்குந்திறனின் கூடுதலுக்குச் சமம் (C=C,+C,) ஆகும், ஜா.சுதாகர் En Georg. John D. Ryder, Electronic Fundamen- tals and Applications, Fifth Edition, Prentice Hall of India Private Limited, New Delhi, 1983. கிளைன்ஃபெல்ட்டர் கூட்டியம் குரோமோசோம் மாறுபாட்டால் உண்டாகும் பிறவி நோயில், ஆண் போல் தோற்றமளிக்கும் நோயாளி யிடம் பெண்மைக்கு உரிய சில மாறுபாடுகள் காணப் படும், வழக்கமாக ஆணிடம் XY குரோமோசோமும். பெண்களிடம் XX குரோமோசோமும் காணப்படும். கிளைன்ஃபெல்ட்டர் கூட்டியத்தில் பெண் குரோமோ சோமாகிய X வகை இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட எண்ணிக்கையில் காணப்படுவதாலேயே இம் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக இக்கூட்டி யத்தில் காணப்படும்காரியோ வகையில் 47,XXY குரோ மோசோம்கள் காணப்படும். மற்றொரு வகையாகிய மொசைக் வகையில் 46,XY/ 47, XXY காணப்படும். கூட்டியத்தின் முக்கிய வேறுபாட்டில் ஏற்படும் கிளைன்ஃபெல்ட்டர் நோய்க்குறி ஆண்பெண் மாற்றமாகும். பார்வைக்கு ஆண்போல் தோற்றமளிக் கும் இவர்களிடம் சிறிய விந்துக்கோளமும் உயிரணுக் களற்ற விந்தும் பருத்த மார்பகங்களும் இரத் தத்தில் கொனடோடிரோபின் அளவும் கூடுதலாகக் காணப்படும். குழந்தைப் பருவத்தில் கன்னத்தில் உட்புறச் சளிப்படலத்தில் உள்ள செல்களை. வாலிபர்களிடம் ஆய்வு செய்து பார்த்ததில் 500 பேருக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. நோய்க் குறிகள். வாலிப வயது வரை வேறுபாடு மிகுதியாகத் தெரிவதில்லை. விந்தின் சேகரிப்புச் சிறுத் தும் விந்தில் உயிரணுக்கள் குறைந்தும் காணப்படும். வாலிப வயதைக் கடக்கும்போது மாறுதல்கள் தோன்றத் தொடங்கும். மார்பகங்கள் பருத்து, மலட்டுத்தன்மை மற்றும் ஆண்ட்ரோஜன் குறை பாட்டால் வரும் முகமயிர் குறைந்து மீசை, தாடி போன்றவை வளர்வதில்லை. கக்கத்திலும், உடலிலும் மயிர் குறைவாக வளர்வதுடன் ஆண்குறியின் அளவு