பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 கிளைனோஹூமைட்‌

746 கிளைனோஹூமைட் காணப் சிறுத்தும் காணப்படும். 47, XXY வகையினரிடம் விந்து சேரும் குழாய்கள் பழுதுற்று, உயிரணுக்கள் ல்லா விந்து நிச்சயமாகக் காணப்படும். விந்துக் கோளம் 2-3.5 செ.மீ.க்கும் குறைவாகவே தோன் றும். உருப்பெருக்கியின் மூலம் விந்துக் கோளத் திசுவை ஆய்வு செய்தபோது குழாய்கள் ஹையலின் பொருளால் அடைபட்டுப் புது விந்து காணப்பட வில்லை. மாறாக வீடிக் செல்கள் மிகுந்தும் பட்டன. வளர்ச்சியின் கூடுதல் இடுப்புக்குக் கீழ் உள்ள வளர்ச்சியைப் பொறுத்து அமையும். கால் களில் சுருண்ட நாளங்கள், எடை கூடுதல், மனக்குறை பாடு, சமுதாயத்துடன் ஒட்ட முடியாமை, தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய், நுரையீரல் நோய் முதலியவை வயதான காலத்தில் தோன்றும். மார் பகப்புற்று 20% நோயாளிகளிடம் உண்டாகும். மொசைக் வகையில் 47, XXY வகையைப் போல் மூளை வளர்ச்சியின்மை, விந்துக் கோளம் மற்றும் விந்து இவற்றில் பாதிப்பில்லாத மலட்டுத்தன்மை சிலரிடம் காணப்படுவதில்லை. இதனால் இந்நோ யைக் கண்டுபிடிப்பது அரிது. 30க்கும் மேற்பட்ட காரியோ வகைளான XXYY, XXXY, XXXXY போன்ற குரோமோசோம் வகைகளும். மொசைக் வகையில் X குரோமோசோமும் உருவத்தில் மாறு பட்டுக் காணப்படும். மருத்துவம். இதற்கெனத் தனியாக மருத்துவம் எதுவுமில்லை. அறுவை மருத்துவமாக மீவளர்ச்சி யுள்ள மார்பகத்தைக் களையலாம். மலட்டுத் தன் மையை மாற்ற இயலாது. மாறாக ஆன்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரான் கொடுத்து வர அரிதாக தல் தோன்றப் பல காலமாகும். மாறு மா.ஜெ.ஃபிரடெரிக் ஜோசப் Text William Boyd, A Book of நூலோதி. Pathology, Eighth Edition, Leaso Febicer, Philadel- phia, 1965; Robert G. Petersdorf & Raymond D. Adams. Harrison's Principles of Internal Medicine, 10th Edition, Mc Graw-Hill Inc,, Italy, 1974. கிளைனோஹூமைட் இது ஒரு சிலிக்கேட் கனிமம். இது ஹூமைட் வகுப்பைச் சேர்ந்தது. (ஹுமைட் வகுப்பைச் சேர்ந்த கனிமங்களில் ஒரு கனிமம் சம சிலிக்கேட் டாகவும், ஏனைய மூன்று கனிமங்கள் குறை சிலிக்கேட்டுகளாகவும் உள்ளன.) கிளைனோ ஹூமைட் (clinohumite) ஒரு குறை சிலிக்கேட் ஆகும். இது நீரும், ஃபுளோரினும் கொண்டுள்ள மக்னீஷியம் சிலிக்கேட் [Mg,Si,O (F,OH),)] கனிமமாகும். B 18 கிளைனோஹூமைட் ஒற்றைச்சரிவுத் தொகுதி யைச் சேர்ந்த கனிமம் ஆகும். இதன் அணுக்கோப்பு. இயல்பு அல்லது அடிப்படை வகையைச் சேர்ந்தது. இக்கனிமத்தின் ஓர் அணுக்கோப்பில் இரண்டு (கனிம ) கூட்டணுக்கள் உள்ளன. கிளைனோ ஹூமைட்டின் அணு அமைப்பில் அணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு முன்-பின் வாட்டத்தில் (a-படிக அச்சுத் திசையில்) 13.71 ஆகவும், பக்க வாட்டத்தில் (b - படிக அச்சுத்திசையில்) ஆகவும், கீழ் மேலாக (c - படிக அச்சுத்திசையில்) 10.29 ஆகவும் இருக்கும். இக்கனிமத்தில் முன் - பின் (a) அச்சுக்கும் குத்து (c) அச்சுக்கும் இடையேயுள்ள (3) கோணம் 100- 50 ஆகும். இதன் படிக அச்சு விகிதத்தில் களின் நீளம் 1.08:1:5.65 என்னும் உள்ளது. இக்கனிமத்தில் படிக - இரட்டுறல் பெரிதும் காணப்படுகிறது. 4.755 ஹூமைட் வகுப்பைச் சேர்ந்த கனிமங்கள் ஏறத் தாழ ஒரே வகையான தன்மைகளுடன் விளங்கு கின்றன. சில குறிப்பிட்ட தன்மைகளில் உள்ள வேறுபாட்டைக் கொண்டே இக்கனிமங்களைப் பிரித் தறிய இயலுகிறது. கிளைனோஹுமைட்டில் (010) கனிமப் பிளவு தெளிவாகக் காணப்படுகிறது. இக் கனிமம் கண்ணாடி - மிளிர்வு அல்லது அரக்கு. மிளிர்வை உடையது. இது குறை-வளை முறிவு அன்றிச் சீரற்ற முறிவையும் உடையது. இதன் கடினத்தன்மை 6 - 6. 5; ஒப்படர்த்தி 3. 1-3. 2. கிளைனோஹூமைட் இரண்டு ஒளி அச்சுகளை உடையது. இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயுள்ள (ஒளி அச்சு ) கோணம் (2V) 76° ஆகும். இதன் ளி அச்சுத் தளம் (010) படிகத் தளத்திற்குச் செங் குத்தாக அமைந்துள்ளது. இக்கனிமம் நேர் ஒளிக்குறி உடையது. கிளைனோஹூமைட்டில் X அதிர் திசைக்கும் a படிக அச்சுக்கும் இடை யேயுள்ள மறை கோணம் (X^ C) 9 இருக்கும். இதில் Z -அதிர்வுத் திசை (010) தளத்திற்குச் செங்குத்தாக அமைந்துள்ளது. இக் கனிமத்தின் ஒளி விலகல் எண்கள் &= = 1.62-1.66; 8 = 1.64 1.67; y = 1.65-1.69 . கிளைனோஹமட் பொதுவாகச் 1009 120 1 பாறைகளில் காணப்படுகிறது. பெரும்பாலும் இத னுடன்ஹூமைட் சேர்ந்து கிடைக்கிறது. இரண்டின் படிகங்களும் ஒன்றோடொன்று சேர்ந்து இணையாக! வளர்ந்துள்ளன. கிளைனோஹமைட் ஸ்பெயின். சைபீரியா, நியூயார்க், இத்தாலி முதலான நாடுகளில் கிடைக் கிறது. கிளைனோஹூமைட் கனிமத்தில் சிறிதளவு டைட்டேனியம் கலந்து இருந்தால் அது டைட்டன் கிளைனோ,ஹூமைட் எனப்படும். இந்தக் கனிமம் முன்பு டைட்டனோ - ஆலிவீன் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது. இல. வைத்திலிங்கம்