பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/767

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுகிறுப்பு 747

நூலோதி. W. E. Ford, Dana's Text Book of Mineralogy. John Wiley & Sons, New York, 1955. கிஸோமிஃபின் இது முட்டையின் அண்ட வளர்ச்சியைத் தூண்டும் வேதிப் பொருள்களில் முக்கியமானதாகும். எத்தில் ஸ்டில்பீஸ்ட்ரால் என்னும் பொருளுடன் தோடர்பு கொண்ட கிளோமிஃபின், ஈஸ்ட்ரோஜ னுடன் போட்டியிட்டு ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளுடன் இணைவதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் எதிர்ப்பியாகச் செயல்படுகிறது. மேலும் இம்மருந்து, மூளையில் ஹைபோதலாமஸில் நிகழும். கோனடிய ஸ்டிராய்டு களின் எதிர்மறை விளைவுகளைத் தடுத்துக் சுருக் குமிழ் (follicle) ஹார்மோன் வெளிப்படுதலைத் தூண்டுகிறது. அப்போது மாதவிடாய்ச் சுழல் நிகழ்ச்சி யால் வளர் அண்டம் அமைவதுடன் பெண், கருவுறும் வாய்ப்பையும் பெற முடியும். வேதி மருந்தின் பயன்கள். தைராய்டு சுரப்பி நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற குறிப்பிடத்தக்க நோய் எதுவுமில்லாத நிலையில், இம்மருந்து அண்ட வளர்ச்சி அடையாத முட்டைகளுடன் கூடிய மாத விடாய்ச்சுழல் கொண்ட மலட்டுப் பெண்களிடையே மாதவிடாய்ச்சுழற்சியை அண்ட வளர்ச்சி கொண்ட முட்டைகள் கொண்டதாக மாற்றி அவர்களின் மலட்டுத் தன்மையையும் நீக்க உதவுகிறது. மருந்தின் அளவு. சாதாரணமாக இம்மருந்து, நாளும் 50 மி.கிராம் அளவில். மாதவிடாய் தொடங்கிய 2 அல்லது 3 நாள் தொடங்கி 5 நாளுக்குத் தொடர்ந்து கொடுக்கப்படலாம். இரத்த நீர்மத்தின் புரோஜஸ்ட்ரோன் அளவு, மருத்துவம் முடிந்த 12-14 நாள் சென்ற பின் முட்டைகள் கரு வளர்ச்சி அடைந்துள்ளனவா என்பதைச் சுட்டிக் காட்டவும் உதவுகிறது. மேற்கூறிய மருத்துவம் செய்த மூன்று மாத விடாய்ச் சுழற்சியில், முட்டைகள் அண்ட வளர்ச்சி அடையாவிடில், இவ்வேதி மருந்தின் அளவை உயர்த்தி நாள்தோறும் 100 மி.கி. அளவில் அளிக்கலாம். ஒரு நாளைக்கு அளிக்கப்படும் வேதி மருந்தின் பெரும அளவு 200 மி.கிராமாகும். மேற்கூறிய மருத்துவம் தகுந்த பலன் தாராத நிலைகளில் மருத்துவம் செய்த 7 நாளுக்குப் பிறகு 5000 அ.நா.அ. (அனைத்து நாட்டு அளவு) மனித கோரியானிக் கொனடோட்ரோஃபினை ஊசிமூலம் தசை வழியே செலுத்துதல் பயன் தரலாம். திடீரென அதிகரிக்கும் இரத்த ஓட்டத்தின் காரணமாக முகம் சிவத்தல், வயிற்று உப்புசம், வயிற்று கிறுகிறுப்பு 747 வலி, அரிதாகக் குமட்டல், வாந்தி, மார்பக வலி. பார்வைக் கோளாறு போன்றவை இவ்வேதியியல் மருந்துப் பயன்பாட்டின்போது நிகழும் விரும்பத் தகாத விளைவுகளாகும். மேற்கூறிய விளைவுகள், கொடுக்கப்படும் மருந்தின் அளவைப் பொறுத்து இருப்பதும், மருந்தை நிறுத்தியபின் மறைவதும் குறிப்பிடத்தக்கவையாகும். 4 கே.என். ராஜன் நலோதி. U.I. Bodyazhina, Text Book of obstetrics,Mir Publishers. Moscow, 1983, கிறுகிறுப்பு இது கிறுகிறுப்பு அல்லது தலைச்சுற்றல் அல்லது கிர் ரென்று வருவது எனப் பல்வேறு வகையாகக் குறிப் பிடப்படும் உணர்வு வகையாகும். இவ்வுணர்வில் சூழல் நிலையாக இருக்க, தலை மட்டும் சுற்றுவது போன்ற உணர்வு ஏற்படலாம் அல்லது நிலையாக வுள்ள சூழல் சுற்றுவது போலவும் தோன்றலாம் அல்லது அனைத்துமே சுற்றுவது போலவும் தோன்றலாம். மயக்கம் என்னும் சொல் அறுதியிடப்படாமல். இக்கிறுகிறுப்பைக் குறிக்கச் சிலரால் பயன்படுத்தப் படுகிறது. இது தவறு. நினைவு தவறும் நிலையைக் குறிக்கவே மயக்கம் எனும் சொல் பயன்படுத்தப் பெற வேண்டும். கண் இருண்டு வருவது என்னும் உணர்வு வேறுவகைப்பட்டது. கபால சூழலையொட்டி உடற்பகுதியில், குறிப்பாகத் தலை இருக்கும் நிலையை உணர்ந்து கொள்வதையே சமநிலையுணர்வு எனக் குறிப்பிடலாம். இச்சமநிலை யுணர்வை அளிக்கும் உணர்வுப் பொறி உட்காதில் உள்ளது. எட்டாம் செய்தி உணர்வு இதிலிருந்து நரம்பின் ஒரு பிரிவான சமநிலையுணர்வு நரம்பின் மூலம் மூளைத் தண்டின் ஒரு பகுதியான முகுளத்தை அடைந்து அங்கிருந்து மூளையின் பிற பகுதிகளுக்குச் செல்வதால் சமநிலை பற்றிய உணர்வு ஏற்படுகிறது. இச்செய்திகளுக்கேற்ப உடலின் பல்வேறு தசைகளின் இயக்கத்தையும், இறுக்கத் தையும் சிறு மூளை உள்ளிட்ட பல்வேறு மூளைப் பகுதிகள் கட்டுப்படுத்துவதாலேயே குறிப்பிட்ட நிலையில் உடலை நிலைப்படுத்த இயல்கிறது. சம நிலை உணர்வைப் பெற்றுச் செலுத்தும் பல்வேறு நரம்புப் பகுதிகள் தவறாக இயங்கினால் சமநி யுணர்வு குழறிக் கிறுகிறுப்பு ஏற்படுகிறது. சிறுமூளை போன்ற இயக்க (இறுக்க ) கட்டுப்பாட்டு மையங்கள் தவறாக இயங்கினால் உடலின் சமநிலை சீர்கெட்டுக் கிறுகிறுப்பு, நடை தள்ளாடுதல், உட்காரக்கூட முடியாமல் விழுந்து விடல் போன்ற நிலைகள் ஏற் மலை