748 கினியாக் கோழி
748 கினியாக் கோழி படக்கூடும். இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம்: வெளிக்காதுக் குழாயில் அழுக்கு அடைதல். நடுச் செவிப் பகுதியில் சீழ்பிடித்தல், மூக்கு, தொண்டைப் பகுதிகளிற் சளி பிடிப்பதன் விளைவாகத் தொண்டை நடுச்செவி இணைப்புக் குழாய் அடைபடுதல், தலையி லடிபடுவதன் விளைவாக உட்காதின் பகுதிகளில் இரத்தம் கசிதல், உட்காதுப் பகுதிகளில் நீர் மிகுதல். பிற நோய்களைத் தணிக்கக் கொடுக்கப்படும் ஸ்ட்ரெப்டோமைசின், ஜென்டாமைசின், ஆஸ்ஃப்ரின் போன்ற சில மருந்துகளால் உட்காதிலுள்ள நிலையுணர் பொறிகள் பாதிக்கப்படுதல், சமநிலை யுணர் பொறிகளுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் பல் வேறு காரணங்களால் இரத்த ஓட்டம் குறைவு படுதல், கள், சாராயம் முதலியவற்றை உட்கொள்ளு தல். சமநிலையுணர்வு நரம்பிலும், அதன் போக்கி லும் வளரும் பல்வேறு கட்டிகள் போன்ற பல நோய் களின் போக்கில் கிறுகிறுப்பு ஏற்படலாம். சம் சமநிலையுணர்வு நரம்பும். கேள்வியுணர் நரம்பும் அடுத்தடுத்து உள்ளமையால் பெரும்பாலும் கிறுகிறுப்பு உணர்வுடன் காதில் இரைச்சல். கேள்வி யுணர்வுக் குறைவு ஆகிய நோய்க்குறிகளும் தோன்றக் கூடும். இவ்வாறு பல்வேறு வகை நோய்களின் போக்கில் கிறுகிறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளமையால். தக்சு மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும். குறிப்பாக, மூளை நரம்பியல் மருத்துவர்களும் காது-மூக்கு-தொண்டை மருத்துவர்களும் கிறு கிறுப்பைப் பற்றி நன்கு ஆராய்ந்து அறிவுரை வழங்க இயலும். எளிய கிறுகிறுப்புக்கு அடிப்படையான காரணத்திற் கேற்ப அதற்கான மருத்துவமும் வேறுபடும். வெளிக் காதிலுள்ள அழுக்கை நீக்குவது போன்ற முறையே சிலருக்குத் தேவைப்படலாம். சிலருக்கு மூளை நரம்பை ஒட்டிக் கட்டிகளை நீக்கும் அறுவை முறை போன்ற கடுமையான முறைகளும் தேவைப் படலாம். இடைப்பட்ட நிலையில் பெரும்பாலா னோர்க்கு மருந்துகள் மூலமே அளிக்க முடியும். தீர்வு கிறுகிறுப்பை நீக்கும் மருந்துகளில் பெரும்பா லானவை ஹிஸ்ட்டமின் எதிர்ப்பு மருந்துகளாகவும். ஹிஸ்ட்டமின் போன்ற மருந்துகளாகவும், இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட் டத்தை மிகைப்படுத்துபவையாகவும் உள்ளன. வற்றுள் பெரும்பாலானவை ஓரளவு தூக்கத்தைக் கொடுக்கவல்லவை. எனவே, இம்மருந்துகளை கொள்ளும் நோயாளிகள் விரைவுந்துகளை ஓட்டுதல், பெரும் பொறிகளை இயக்குதல் போன்ற செயல் களைத் தவிர்த்தல் வேண்டும். இதில் கவனக் குறை வாக இருந்தால் மருந்து விளைவிக்கும் தூக்கக் கலக் கத்தில் பெரும் விபத்துக்குள்ளாக நேரிடலாம். லோகமுத்துக்கிருஷ்ணன் -5. உட் கினியாக் கோழி து கேல்லிபாமிஸ் என்னும் பறவை வகுப்பில், நூமிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஆஃப்ரிக்கப் பறவையாகும். கினியா நாட்டில் முதன் முதலில் காணப்பட்டமையால் இப்பறவைக்கு இப்பெயர் வந்தது. சில அறிவியலறிஞர்களால் கினியாக்கோழி ஃபேசியானிடே என்னும் குடும்பத்தின் கீழ் சேர்க்கப் பட்டுள்ளது. கினியாக் கோழிகளில் 7-10 வரை சிற்றினங்கள் உள்ளன. இவற்றில், நூமிடா மெலியாக்கிரிஸ் . ( Numida melegris) இறைச்சிக்காக வீட்டில் வளர்க்கப்படுகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் இப்பறவையைத் தெய்வங் களுக்குப் பலியிட்டனர். சுவைமிக்க இதன் றைச் சியை விரும்பி உண்டனர். பின்னர் அரிதாகிப் போன இப்பறவை இனம் 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியரால் மீண்டும் கொண்டு வரப்பட்டது பண்ணைகளில் இப்பறவை காவலுக்குப் பயன் படுத்தப்படுகிறது. சிறு ஒலி கேட்டாலும் விழித்துக் கொண்டு பெருங்குரல் எழுப்பும். கோழி, வாத்து போன்றவற்றோடு சண்டையிடும் இயல்பு கொண்ட மையால் இவற்றை ஒன்றாக வளர்க்க முடியாது. நூமிடா மெலியாக்கிரிஸ் என்னும் இனக்கோழி தன் தலையில் கவசம் போன்ற கொம்புப் புடைப்பைக் கொண்டிருக்கும். இவற்றில், ஆண், பெண் இனவேறு பாடு மிகுதியாக இல்லை. ஏறக்குறைய இரண்டும் ஒரே தோற்றமுடையவை. பொதுவாக, 50 செ.மீ. உடல் நீளம் கொண்டவை. இறகுகளற்ற முகம், சிவந்த அலகு, தாடி போல் தொங்கும் நிலநிறத்தோல், குனிந்த தோற்றம் இவற்றை உடையவை. ஊதா நிறம் கலந்த சாம்பல் நிறமான அழகான சிறகுகளின் ரிசையில் முத்துப்போன்ற வெண்புள்ளிகள் தோன்றும். சிலவற்றில் வெண் புள்ளிகளுக்குப் பதிலாக வெண்மையான வரிகள் இருக்கும். கினியாக் கோழிகளில் முத்து, வெண்மை, லாவண்டர் நிறமுடையவையும் உண்டு. எழுப்பும். பெடை சேவலும் பெடையும் ஒரே தோற்றம் கொண்டி ருந்தாலும், சேவலில் கொண்டையும் தாடியும் பெரியவையாக இருக்கும். 'கீச்'... எனனும் ஒலி 'கம்பா... கம்பா' என்பது போலப் ஈரசையொலி எழுப்பும். ஆக்ரிலியம் வல்சரினம் (Acryllum vulcerinum) என்னும் கினியாக் கோழி இனமே மிக அழகிய வண்ணத்தையும் பெரிய உடலமைப்பையும் உடையது. இவ்வகைக் கினியாக் கோழி கிழக்கு ஆஃப்ரிக்காவில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. இவை நீண்ட கழுத்தும் வல்லூறு போன்று நீல நிறத்திலமைந்த இறகுகளற்ற தலை யமைப்பும் கொண்டவை. கினியாக்கோழிகள் பூச்சி கள், விதைகள் போன்றவற்றை உணவாகக் கொள் கின்றன. இவை நன்றாகப் பறக்கக்கூடிய தன்மை பெற்றிருந்தாலும், துன்பம் ஏற்படும்போதும், அச்