கினோலின் 749
கினோலின் 749 சுறுத்தப்படும்போதும் ஓடுவதையே பெரிதும் விரும்பு கின்றன. கினியாக் கோழிகள் சாதாரணமாக 3-4 கிலோ எடையுள்ளவை. பொதுவாக இவை ஒருதாரப் பழக்கம் கொண்டவையாகவே காணப்படுகின்றன. பெண் பறவை நிலத்தின் சிறு குழிகளில் 10-15 முட்டைகள் இடும். பெடை அடை காக்கும்போது சேவல் காவலாக நிற்கும். முட்டை 1-1.25 அவுன்ஸ் எடை உள்ளதாகவும் கூரான முனைகளுடன் கூடிய ஒடு போர்த்தப்பட்டதாகவும் மஞ்சள் வெளுப்பு நிறத்தில் சிறிய பழுப்புப் புள்ளிகள் கொண்டதாகவும் இருக்கும். அடைகாக்கும் காலம் ஒரு மாதம் ஆகும். மேலும் சிவ நாள் ஆகக்கூடும். குஞ்சு வெளிவந்தவுடன் தாயுடன் ஓடக்கூடிய அளவிற்கு வலிவுள்ளதாக இருக்கும். தாய், குஞ்சுகளைப் பேணிக் காப்பதில்லை. ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவுகள் செக்கோஸ்லவாகியாவில் கிடைத் துள்ளன. ஐரோப்பாவில்தான் முதன் முதலில் தோன்றியிருக்கக்கூடும். தற்போது ஆஃப்ரிக்காவில் அபிசீனியா முதல் நேபாளம் வரையிலும் மடகாஸ்கர் ஜான்சிபார் தீவுகளிலும் இவ்வினக் கோழிகள் பரவி யுள்ளன. . ஜி.எம். நடராஜன் நூலோதி. Salim Ali and S. Dillon Ripley. Hand Book of the Birds of India and Pakistan, Oxford University Press, New Delhi, 1983. கடல் மணலிலிருந்து எட்டேனியம், ரூட்டைல் ஆகிய கனிமங்கள் சேகரிக்கப்படுகின்றன. ம. மோகன் கினின் இது தென் அமெரிக்கக் காடுகளில் மலிந்திருக்கும் சிங்கோனா மரத்தின் பட்டையில் கிடைக்கும் அல்க்கலாய்டு ஆகும். கினினின் சிறப்பான பயன் மலேரியா நோயைத் தீர்ப்பதேயாகும். மலேரியா நோயைப் போக்க உதவிய ஒரே வேதி மருந்துப் பொருள் (chemotherapeutic agent) கினின் ஆகும். பின்பு நிகழ்த்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் வாயி லாகப் பிரைமாகுவின், குளோரோகுவின் ஆகியன கினினைவிட உயர்ந்த வேதி மருந்துகள் என்பது தெளிவாகியது. CH,O OH CH- -CH=CH, கினியா வளைகுடா மேற்கு ஆஃப்ரிக்கக் கரையோரப் பகுதியில் லோப்பஸ் முனைக்கும் பாமஸ் முனைக்கும் இடையிலுள்ள கினியா வளைகுடா அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். குறுகிய கண்டத்திட்டைச் கொண்ட போதும் சில பகுதிகளில் (சியெரா லியோன் முதல் பிஜாகோஸ் தீவுக்கூட்டங்கள், போர்ச் சுக்கீசிய கினியா ) இது ஏறத்தாழ 160 கி.மீ. வரை அகன்றுள்ளது. கசமான்ஸ் வோல்ட்டா, நைகர் ஆகிய ஆறுகள் இங்குக் கலக்கின்றன. ஃபெர்னாண்டோப் ப்ரின்ஸ், செயின்ட்தாமஸ் அநொபென் ஆகியவை இங்குள்ள முக்கிய தீவுகள் ஆகும். . இங்குள்ள முக்கிய நீரோட்டம் 400-480 கி. மீட்டர் தொலைவு கடலிலுள்ள கினியா நீரோட்ட மாகும். இவ்வளைகுடாவின் பகுதியிலுள்ள உவர்ப் பியம் இங்கு பெய்யும் மழையாலும், ஆறுகள் கொண்டு வரும் நன்னீராலும் மிகவும் குறைவாகவே உள்ளது. மத்தி, டூனா,கூனிறால் ஆகிய மீன்கள் பெருமளவில் கிடைக்கின்றன. சியெரா லியோன் பகுதியிலுள்ள 1820 இல்பெல்லெட்டியரும் காவெண்ட்டுவும் சிங்கோனா மரப்படையிலிருந்து கினினை முதன் முதலாகப் பிரித்தெடுத்தது முதல் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கும் மேலாக கினின் மலேரியா மருத்துவத்தில் பயன்படுகிறது. கினின் மூலக்கூறின் வடிவமைப்பைப் பி. ராபே என்பார் கண்டுபிடித் தார். 1944 இல் உட்வர்டு, டோரிங் ஆகியோர் கினினைத் தொகுப்பு முறையில் ஆய்வகத்தில் தயாரித்தனர். எனினும், பொருளாதார அடிப்படை யில், சிங்கோனா மரப்பட்டையிலிருந்து பெறுதலே சிறந்த முறையாகும். கினின் கினோலின் 20 மே. ரா. பாலசுப்ரமணியன் இது பிரிடின் சேர்மத்தின் 2,3ஆம் இடங்களில் பென்சின் கரு ணைந்த அமைப்பைக் கொண்ட சேர்மமாகும். கினோலினும் அதையொத்த சேர்மங்