கறிவேப்பிலை (தாவரவியல்) 57
போட்டு 0.33 மி.லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து, சிறிது சர்க்கரை இட்டுக் கொடுக்க, செரி யாமைவாயு நீங்கும். கறிவேப்பிலை (தாவரவியல்) சே. பிரேமா சமையலிலும், உணவுப் பண்டங்களிலும், பலவகை யான பலகாரங்களிலும் பச்சைக் கறிவேப்பிலையை மணத்திற்காக அனைவரும் பயன்படுத்தி வரு கின்றனர். பழங்காலத்திலிருந்தே கறிவேப்பிலையை நாளும் உணவில் பயன்படுத்தி வந்தனர். இது கரு வேப்பிலை, கறிவேம்பு, கரிப்பிலை, காட்டு வேப்பிலை எனவும் குறிப்பிடப்படும். இதன் இலை ஒருவித நறுமணத்தைத் தரும். து ஒரு சிறு மரமாகும். இதை அழகுக்காகவும் வளர்ப்பதுண்டு. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையப்பகுதியிலும் திருநெல்வேலி மாவட்டத்தின் கோவில்பட்டிப் பகுதியிலும், தோட்டங்களில் பெரு மளவில் பிற பயிர்களுடன் இதை வளர்த்து அவ்வப் போது இடுப்பளவு உயரத்திற்கு வந்தவுடன் நுனிப் பகுதியை வெட்டித் தழைப்பகுதியை மட்டும் பெருக்கிக் குறைந்த பரப்பளவில் உயர் விளைச் சலைப் பெற்று வருகின்றனர். தழைக்காகத் தனிப் பயிராகவும் வளர்ப்பதுண்டு. னப் இதன் தாவரவியல் பெயர் முர்ரேயா கோயினி கியை Murraya Koenigii) என்பதாகும். இது ரூட்டேசி என்னும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. கறிவேப்பிலை விதை மூலமாக பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகள் ஓரளவு நிழலுள்ள பகுதியில் நன்கு முளைக்கின்றன. ஆறு மாத வயதுடைய கறிவேப்பிலை நாற்றுகளை 45 க.செ.மீ. குழிகளில் 3×3 மீட்டர் வெளியில் நடலாம். குழியில் போதிய அளவு தொழு உரம் இட வேண்டும். செடி பசுமையாக வளரத் தொழு உரம் உதவும். நட்ட ஒன்பதாம் மாதத்தில் ஏறக்குறைய 500 கி. தழையைப் பறிக்கலாம். 6 மாதத்திற்கு ஒருமுறை 15 கி.கி, தொழுஉரம், 100 கி. யூரியா, 200 கி .சூப்பர், 50கி. பொட்டாஷ் கலந்து வைக்க வேண்டும். வளர்ந்த மரங்களிலிருந்து மாதம் லைகளைப் பறிக்கலாம். சராசரியாக டை ஒருமுறை ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 100 கி.கி தழை கிடைக்கும். உள்மரக்கட்டை அழுகல் (sap rot) என்னும் நோயை ஃபோமெஸ் பெக்டினஸ் என்னும் பூசணமும்,நாற்றில் கழுத்தழுகல் நோயை ரைசோக் டோனியா சொலானி என்னும் பூசணமும் உண்டாக்கு கின்றன. கறிவேப்பிலை (தாவரவியல்) 57 மரம். இது ஏறக்குறைய 6 மீட்டர் உயரம் வளரும்.15-40 செ.மீ. குறுக்களவு கொண்டிருக்கும். இந்தியாவெங்கும் காணப்படும் இம்மரத்தை அந்த மான் தீவுகளிலும் காணலாம். இம்மரம் சமவெளியி லும், மலைப்பகுதிகளிலும் 1500மீ உயரம் வரை வளருகிறது. இதன் பட்டை சுரும்பழுப்பு அல்லது கறுப்பு நிறமாக இருக்கும். இலைகள் ஒற்றைப்படை ஓரிறகுக் கூட்டிலை (imparipinnate) அமைப்பைக் கொண்டவை. 30 செ.மீ. நீளமாக, 9-25 சிற்றிலை கள் மாற்றடுக்கத்தில் இருக்கும். சிற்றிலைகள் முட்டை அல்லது ஈட்டி வடிவில் இருக்கும். அடிப்பகுதியி லுள்ள சிற்றிலைகள் சிறியனவாகவும், ஏறக்குறைய வட்ட வடிவமாகவும் இருக்கும். சிற்றிலைகள் 1.9 5.0 செமீ. நீளத்திலும் 1.00-2.5 செ.மீ. அகலத் திலும் கூரான நுனியைக் கொண்டிருக்கும். இலை மேல் பரப்பு மழமழப்பாகவும் கீழ்ப்பரப்பு மென்மயிர் பெற்றும் இருக்கும். எலுமிச்சையில் உள்ளது போன்று இதன் இலையிலும் மணமுள்ள சுரப்பிகள் உண்டு. பூக்கள் கிளைகளின் நுனியில் பல பிரிவுகளிலுள்ள சமதள மஞ்சரியாக (corymbose cyme) வெள்ளை யாக, நறுமணம் கொண்டிருக்கும். பூக்களின் மணம் மல்லிகைப் பூவை ஒத்திருக்கும். புல்லி வட்டம் 5 பிரிந்திருக்கும். அல்லி இதழ்கள் 5 தனித்தனியாகப் பிரிந்திருக்கும். இவை வெண்மையாக இருக்கும். மகரந்தக் கோரங்கள் 10 தனித்தனியாக இருக்கும். சூலகத்தில் இரண்டு அறைகள் உண்டு. அறைக்கு ஒன்று அல்லது இரண்டு சூல்கள் இருக்கும். கனிகள் முட்டை வடிவிலோ, உருண்டையாகவோ 0.6-1.00 செ.மீ. குறுக்களைவைக் கொண்டிருக்கும். இது சதைக் கனியாகும். பிஞ்சு பச்சையாகவும், காய் . இளஞ்சிவப்பாகவும், பழுத்த பின் கறுப்பாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் பெரும்பாலும் இரண்டு விதைகள் இருக்கும். இதன் மரக்கட்டை ஒரு கனஅடி 19.5 22.7 கி.கி எடையுடன் இருக்கும். மரக்கட்டை சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடனிருக்கும். சத்துக்கள். கறிவேப்பிலையில் 6.1% புரதமும், 1.0% கொழுப்புச் சத்தும், 4.0% தாது உப்புகளும், 6.4% நார்ப்பொருளும்,18.7% மாவுப் பொருள்களும் (corbohydrates), 8.30 மி.கி கால்சியமும், 57 மி.கி பாஸ்ஃபரஸும், 7 மி.கி இரும்புச் சத்தும் உள்ளன. இதில் கரோட்டின் (4 மிகி) 100 கிராம்), நிக்கோட் டினிக் அமிலம் (203 மி.கி) நியாசின் ஆகிய உயிர்ச் சத்துக்களும் உள்ளன. தயாமினும் ரிபோஃபிளேவினும் இதில் இல்லை. மேலும் 221 மி.கி மக்னீசியமும் 81 மி.கி கந்தகமும் 198 மி.கி குளோரினும் உள்ளன. கறிவேப்பிலையில் வைட்டமின் A ஓரளவு மிகுதி யாகவே உள்ளது. இதிலுள்ள இதிலுள்ள கால்சியமும் மிகுதி