கீச்சாங்குருவி 759
கீச்சாங்குருவி லானினே துணைக் குடும்பத்தில் இப்பறவை பாசரிஃபார்மிஸ் வகுப்பில் லானிடே குடும்பத்தில் லானியஸ் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் 25 சிற்றினங்கள் உள்ளன. கீச்சாங் குருவி கூரிய நகங்களால் பெரும் பூச்சி, பல்லி, எலி, சிறு பறவை இவற்றைக் கொன்று தின்னும். 2 கீச்சாங்குருவி (shrike) தன்னுடைய இரையைத் தான் அமர்ந்திருக்கும் கொம்பிலோ, முள்வேலியிலோ உள்ள முள்ளின் உதவியால் குத்திக் கிழித்துக் கொன்று தின்னும், எனவே, இது சொப்புக்காரப் பறவை (butcher bird) எனப்படும். கீச்சாங்குருவி முட்புதர்களாக உள்ள இடங்களில் தனித்து வாழும் தன்மையுடையது. உரத்த குரல் எழுப்பும். உடலில் சாம்பல் அல்லது வெள்ளைக் குறிகள் பல காணப்படும். வல்லூறு போன்று வேட்டையாடவல்ல இச்சாங் குருவி லானியஸ் எக்ஸ்பியட்டி (Lanlus excubity) என்னும் பெரிய சாம்பல் இச்சாங்குருவியே ஆகும். து பெருமளவில் காணப்படும் இனமாகும். இது ஓர் அடி நீள உடலையும் கறுப்பு முகத்தையும் உடையது. வட அமெரிக்காவில் காணப்படும் வானியஸ் லூடோவிசியானஸ் (Lanius Ladorician) புத்துலகச் சிற்றினம் ஆகும். இதுஅளவில் சற்றுச் சிறியதானாலும் லானியஸ் எக்ஸ்பியூட்டியை ஏனைய பண்புகளில் முற்றிலும் ஒத்தது. ஆஃப்ரிக்காலின் புதர்க் கீச்சாங் குருவி, மால்கோபீனட்டினே என்னும் துணைக் குடும்பத்தில் அடங்கும். 40 சிற்றினங்களை உள்ள டக்கியது. 16-20 செ.மீ. அளவினதாகும். ஒளிரும் இறகு அமைப்பைக் கொண்டது என்றாலும் உண்மை யான கீச்சாங்குருவி போன்று அவ்வளவு உறுதியான அலகைப் பெற்றதன்று, வால்புறம் மிக மென்மை யான இறகுகளை உடையது. முட்புதர்களில் இலை களைத் தின்று வாழும் பூச்சிகளையே உண்ணும். குளோரோபோனியஸ் மல்டி கலர் (chloropho- neus multi color) என்னும் புதர்க் கீச்சாங்குருவி அதன் பல்வேறு இனத்திற்கு ஏற்ப உடலின் அடிப் புறத்தில் சிவப்பு, மஞ்சள், கறுப்பு அல்லது வெள்ளை போன்ற மாறுபட்ட வண்ணங்களைக் கொண்டிருக் கும். டீலோபோரஸ் குவாட்ரிகலர் (telophorusquadri- color) என்னும் கீச்சாங்குருவியின் முதுகுப்புறம் பச்சை நிறத்திலும், அடிப்புறம் தங்க நிறத்திலும் இருக்கும். சிவந்த தொண்டைப் பகுதியை உடையது. சில அறி வியலார். குளோரோபோனியஸ் பேரினத்தை டீலோ போரஸ் பேரினத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். லானியேரியஸ் என்னும் ஆஃப்ரிக்கப் பேரினத்தைச் சேர்ந்த கீச்சாங்குருவிகள் 20 செ.மீ. நீளம் உடையவை. ஒரே நிறத்தில் அமைந்து வெள்ளைக் கீற்றுகளைச் சிறகுகளில் பெற்றிருக்கும். லானி யேரியஸ் லூகேரின்கஸ் (Laniarius Leucorhynchus) என்னும் சிற்றினம் கருமை நிறமானது. லானியேரியஸ் இத்தியோபிகஸ் (Laniarius aethi opicus) வெப்ப நாடுகளில் வாழும் கறுப்பு, வெள்ளை. அடிப்பகுதியில் சிவப்பு நிறம் கொண்ட கீச்சாங்குருவி யாகும். லானியேரியஸ் எரித்ரோகேஸ்ட்டா(L. erythro gaster) மற்றும் லானியேரியஸ் பார்பரஸ் (L, burbarus) கரிய தலை கொண்ட கீச்சாங்குருவியாகும். முதுகுப்