பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/785

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீட்டோனேத்தா 765

விதத்தையும் தொகுதியை (phylum) சரியாகக் குறிப்பிட்டார். அடுத்து லூக்கார்ட் என்பார் கீட்டோனேத்தா என்னும் உருவாக்கினார். கிராஸி என்பார் சஜிட்டாவின் உடற்கூறு, திசுவியல், கருவியல் முதலிய விவரங்களை நன்கு பயின்றபின். கீட்டோனேத்தா தமக்கெனத் தனித்தகவமைப்புகள் கொண்ட ஒரு தனித் தொகுதி என்பதை நிறுவினார். தற்போது ஏறத்தாழ 50 இனங்களும் பல சிறப்பினங் களும் அறியப்பட்டுள்ளன. முள்கள் போன்ற முடி நிறைந்த தாடைகளை யுடையதால் கீட்டோனேத்தா என்னும் பெயர் பெற்றது.உடல், ஒளி ஊடுருவும்படியாக உள்ளதால் இவற்றைக் கண்ணாடிப்புழுக்கள் என்றும் குறிப் பிடுவர். கீட்டோனேத்தாக்கள் ரு பக்கச் சமச் சீர்மையுடன் குடல் உடல் அறை கொண்ட கடல்வாழ் மிதவை உயிரிகளாகத் திகழும் இரு பாலிகள் ஆகும். இவ்வுயிரிகளின் அம்பு வடிவமான உடலைத் தலை, உடல். வால் எனப் பகுக்கலாம். தலையிலேயே பற்றும் முள்கள் உள்ளன. அம்புப் புழுக்களுக்குக். கழிவு நீக்க மண்டலமும் இரத்த ஒட்ட மண்டலமும் இல்லை. இப்புழுக்கள் சுடல் நீர்ப்பரப்பில் பல்வேறு ஆழங் களில் மிதந்தும், நீந்தியும் வாழ்கின்றன.உலகின் அனைத்துக் கடல்களிலும், குறிப்பாக வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலக் கடல் நீரில் நிறைந்து காணப்படுகின்றன. மேற்கிந்திய நாடுகளான அரேபிய செங்கடற்கரை, கிழக்கு ஆஃப்ரிக்கா, இந்தியா. தாய்லாந்து. ஆஸ்திரேலியா, ஹவாய்த் தீவுகள், பாலினேசியா, பல பசிபிக் தீவுக் கூட்டங்களில் மிகப் பெருமளவில் அம்புப் புழுக்கள் காணப்படுகின்றன. இச்சிறு உயிரிகள் வேகமாக நீந்தி, பிற சிறிய உயிரி களான கோப்பிப்பாடுகள் சிறுமீன்களின் ள உயிரி கள் அம்புப்புழுக்கள் இறால் இன இள உயிரிகள் முதலியவற்றைப் பிடித்து உண்கின்றன. மீன்கள், சிலவகைப் புழுக்கள், ஜெல்லி மீன்கள் முதலிய பெரும் விலங்குகளுக்குக் கீட்டோனேத்தாக்கள் இரையாகின்றன. கண்ணாடிப் புழுக்கள், தங்கள் இரையை நோக்கி விரைந்து சென்று வேட்டையாடி உண் கின்றன. இவ்வாறு விரைவாக நீந்த, அம்பு வடிவ உடல் சிறந்த தகவமைப்பாகும். கீட்டோனேத்தாக் களின் உடல் நீளம் ஏறத்தாழ 40-100 மி.மீ. வரை காணப்படுகிறது. நீர்ப்பரப்பின் மேல் மிதக்கும் கண்ணாடிப் புழுக்களின் உடல், ஒளி ஊடுருவும் படியாகவும். நிறமற்றதாயும் உள்ளது. கடலின் ஆழமான பகுதியில் சிவப்பு, ஆரஞ்சு பழுப்புப்போன்ற வண்ணமுடன் உள்ளது. அம்புப் புழுக்களின் தலை, உடல், வால் ஆகிய முப்பகுதியிலும் ஓர் இணை குடல் உடல் அறை உள்ளது. ஆனால் முதிர்நிலைக் கீட்டோனே த்தாக் கீட்டோனேத்தா 765 களின் தலையில் உள்ள உடலதை ஏறக்குறைய மறைந்து விட்டது எனலாம். இதற்குக் காரணம் தலையில் உள்ள முடி போன்ற முள்களை இயக்க நன்கு அமைந்துள்ள தசைகள்தாம். தலையில் உள்ள முடிபோன்ற முள்கள், தாடைகள் போல் இரையை உறுதியாகப் பிடிக்கப் பயன்படுகின்றன. 7. படம் 2. அம்புப் புழுவின் வெளித்துருத்திய தலை (வயிற்றுப்புறத் தோற்றம்) 1. பின்பக்கப் பல் 2. முன்பக்கப் பல் 3. பற்றும் முள்கள் 4. வாய் வழிக்குழி 5. வாய் 5. தொண்டைக் குமிழ் 7. குடல் 8. குடல் பக்கப் பிதுக்கம். தலையையும். தாடைகள்போல் செயல்படும் முள்களையும் உடற்சுவரின் குழிபோன்ற மடிப்பின் உள்ளே இழுத்துக் கொள்ள ஓர் அமைப்பு உள்ளது. இரையைத் தாக்கும்போது, தலையும் தலையுடன் கூடிய முள்தாடைகளும் விரைவாக வெளியில் துருத்து கின்றன. தலையின் கீழ்ப்புறத்தில் தாடைகளுக்கு மையத்தில் வாய்த்துளை உள்ளது. உடம்பின் நடுப் பகுதியான உடலில் ஒன்று அல்லது இரண்டு ணை பக்க விசிறிகளும், வால் பகுதியில் குறுக்குவாட்டில் ஒரு வால் விசிறியும் உள்ளன. நீந்தும்போது இந்த விசிறிகள் உறுதுணையாக உள்ளன. முதுகுப்புற வயிற்றுப்புற நீள்வாட்டத் தசைப்பட்டைகள் மாறிச் சுருங்கி நீள்வதால் நீரைக் கிழித்துக் கொண்டு விரைவாக முன்னேறி நீந்த முடிகிறது. மாறி கீட்டோனேத்தாக்களின் உணவுப்பாதை ஒரு நீண்ட குழாயாகும். சிலவற்றில் உணவுப் பாதையின் தொடக்கத்தில் ணை பக்கப் பிதுக்கங்கள் உள்ளன. உடற் பகுதியில் வயிற்றுப் புறத்தில் ஒரு பெரிய நரம்பு முடிச்சு உள்ள ளது. மூளையையும், இந்த நரம்பு