பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/786

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766 கீட்டோபுருஃபென்‌

766 கட்டோபுருஃபென் முடிச்சையும் இணைத்த வண்ணம் நரம்புகள் உள்ளன. ணைக்கும் கீட்டோனேத்தாக்கள் யாவும் இரு பாலிகள் (bisexual) ஆகும். உடலின் அடிப்பகுதியில் வலப்புறம் ஒன்றும், இடப்புறம் ஒன்றுமாக இரட்டை அண் டகங்கள் உள்ளன. அண்டகங்களுக்குக் கீழே வால் பகுதியில் இணை விந்தகங்கள் உள்ளன. நன்கு முதிர்ந்த விந்தணுக்கள் விந்துப்பைகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. சிறு வகைப்பாட்டியல். கட்டோனேத்தா ஒரு தொகுதி. இதில் ஏறத்தாழ 50 இனங்கள் விளக்கப் பட்டுள்ளன. இந்த 50 இனங்களும் 6 பேரினங்களைச் பெரும்பாலான இனங்கள் சார்ந்தவை. சஜிட்டா பேரினத்தைச் சார்ந்தவை. டீரோ சஜிட்டா, ஸ்பேடல்லா, யூக்ரோனியா, ஹெலிரோக் ரோனியா, குரோனிட்டா என்பன ஏனைய ஐந்து பேரினங்களா கும். கீட்டோனேத்தா தொகுதியைச் சார்ந்த பல்வேறு னங்களும், பல தரப்பட்ட கடல் நீரில் வாழ்கின்றன. சில மித வெப்ப மண்டலக் கடலில் வசிக்கின்றன. வேறு சில வெப்ப மண்டலக் கடல் நீரை விரும்பு கின்றன. சில குளிர் நீரில் மட்டுமே காணப்படு கின்றன. ஒரு குறிப்பிட்ட கடல் நீரில் வாழும் கீட்டோனேத்தா இனங்களைக் கொண்டு அந்தக் கடல் நீரின் தோற்றம், காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம், கடலியல், கடற்புவியியல் பற்றிய அனைத்து விளக்கங்களையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இவ்வாறாகக் கீட்டோனேத்தாக்கள் கடல் பற்றிய நீரியல் மற்றும் நீர்ப்புவியியல் தொடர்புடைய விவரங் களை அறியப் பெரிதும் உதவு கின்றன. கீட்டோனேத்தாக்கள் யாவும் கடல்வாழ் மிதவை உயிரிகள்: ஸ்பேடெல்லா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சில இனங்கள் மட்டுமே ஆழ்கடல் கரையில் வசிப்பன. இவற்றிற்குப் பேதிஸ்பேடெல்லா என்று பெயரிட்டு ஒரு தனிப் பேரினத்தையே சிலர் உருவாக்கியுள்ளனர். அம்புப் புழுக்களின் உடல் மென்மையும், எலும்பு போன்ற கடின உறுப்புகள் இன்மையும் காரணமாகக் கீட்டோனேத்தாக்களின் புதை படிமங்கள் அரிய வாயின. மேலும் இவ்வுயிரிகள் மிதவை உயிரிகளாக வாழ்வதால் புதை படிமங்களாகும் வாய்ப்பு மிகவும் ஒரே ஒரு குறைவு. இருப்பினும் புதை படிமக் கண்ணாடிப் புழு உண்டு. அதன் பேரினப் பெயர் அமிஸ்கிலியாவாகும். இதை நடுக்கேம்பிரியன் படிவு களிலிருந்து கண்டெடுத்தனர். கீட்டோபுருஃபென் முகமது ஹபிபுல்லா இது மூட்டுவலி, தலைவலி ஆகிய நோய் நிலைகளில் பயன்படுத்தப்படும் அழற்சி எதிர் மருந்து. கீட்டோ புருஃபென் முதன்மையாக அழற்சி எதிர்ப் பண்பு கொண்டது. இதற்கு ஓரளவு வலிநீக்க இயக்கமும் காய்ச்சலை எதிர்க்கும் இயக்கமும் உண்டு. இது புரோப்பியானிக் அமில வழி வந்த மருந் தாகும். ஆஸ்ஃப்ரிள், இபூபுருஃபென் ஆகியவற்றைப் போன்று இதுவும் ஒரு ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர் மருந்து. இயங்கும் விதம். இது புரோஸ்ட்டகிளான்டின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் இயங்குவதாகக் கருதப்படுகிறது. புரோஸ்ட்டகிளான்டின் உடலில் வலி மற்றும் அழற்சி ஏற்பட முக்கிய காரணமாக உள்ள ஒரு பொருள். கீட்டோபுருஃபென், உடலில் உள்ள பிரடிகைனின் என்னும் பொருளையும் ஒடுக்கு கிறது. உள் உறிஞ்சல் மற்றும் வெளியேற்றம். வாய்மூலம் தரும்போது இது விரைவாகவும் முழுமையாகவும் உள் உறிஞ்சப்படுகிறது. பிளாஸ்மாவில் இம்மருந்தின் பெரும் அளவு இரண்டு மணி நேரத்தில் கிடைக்கிறது. பிளாஸ்மாப் புரதங்களுடன் இது அதிக அளவில் இணைகிறது. குளுக்கானிக் அமிலத்துடன் இணை வுறுவதன் மூலம் கல்லீரலில் வளர்சிதை மாற்றம் அடைந்து சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. பயன்கள். மூட்டுவாத அழற்சியில் இது நல்ல பலன் அளிக்கிறது. இம்மருந்தை 150 மி.கி. அளவி லும் இபூபுருஃபென் எனப் பரவலாகப் பயன்படுத்தப் படும் மருந்தை 1.2 கிராம் அளவிலும் மூட்டுவாத அழற்சி கொண்ட நோயாளிகளுக்கு நாளும் கொடுத்தபோது வலியைக் குறைப்பதிலும், வீக்க மடைந்த மூட்டின் பரப்பைக் குறைப்பதிலும் இது இபூபுருஃபெனைவிடச் சிறப்பாக இயங்குவதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. எலும்பு மூட்டு அழற்சியின் தோற்ற நோயிலும் இது சிறந்த பயன் தருகிறது. நாள் ஒன்றுக்கு 50-100 மி.கி. வீதம் நான்கு வேளை தரும்போது, அதே அளவில் இன்டோமெத்தாசின் எனும் திறன் வாய்ந்த அழற்சி எதிர் மருந்து தரும் பலனுக்கு இணையாக இது இருப்பதாகவும் ஆனால் இன்டோ மெத்தாசினைவிடச் விளைவுகளை சற்றுக் ஏற்படுத்துவதாகவும் குறைவான பக்க அண்மையில் வெளியிடப்பட்ட சில ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன. வேண்டாத விளைவுகள். இது இரைப்பை உறுத் தலைப் பரவலாக ஏற்படுத்துகிறது. எனவேதான் இம்மருந்தைத் தரும்போது. இதை வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது என்றும் உணவுடன் சேர்த்தே உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் கள் வலியுறுத்துகின்றனர். இரைப்பைக் குடல் இரத்த ஒழுக்கையும் இம்மருந்து ஏற்படுத்தக்கூடும். எனவே,