பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/787

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைட்‌ 767

இதை இரைப்பை முன் சிறுகுடல் புண் உள்ள நோயாளிகள் பயன்படுத்தக் கூடாது. உடல் நீர் வீக்கத்தையும் இது ஏற்படுத்தக்கூடும். உயிருக்குக் கேடு விளைவிக்கக்கூடிய ஆஸ்த்துமா, தோல் பொரிப்பு, நமைச்சல், உடல் வீக்கம், மனச் சோர்வு, உறக்கம் வருவது போன்ற உணர்வு ஆகிய விளைவுகளை இது அரிதாக ஏற்படுத்துகிறது; மிக அரிதாக, எலும்பு மஜ்ஜை செல் அற்ற சோகை எனும் மரணத்தில் முடியக்கூடிய கடும் நோயையும் ஏற்படுத்தக்கூடும். மு. துளசிமணி நூலோதி J.T.Scott, Text Book of the Rheumatic Diseares, 5th Edition, Longman Groups Ltd, New york, 1978. கதைட் 767 கீதைட் இக்கனிமத்திற்குக் கீதைட் (goethite) என்னும் பெயர் கீதீ என்னும் தத்துவ அறிஞரின் நினைவாக இடப்பட்டது. இக்கனிமம் ரஷ்யா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் பெரும் பான்மையாகக் காணப் படுகிறது. கனிம இயல்புகள். இது செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதியில் அடங்கும். இக்கனிமப் படிக அச்சு விகிதங்கள் a (குற்றச்சு): நெட்டச்சு (b):நிலையச்சு (c) =0.9185: 1:0.6068. திண்ணிய வடிவங்களாகவும் பட்டகப் பக்கங்களில் நேரான வரி அமைப்பு. குற்றச்சு இணைவடிவப் பக்கத்துக்கு ணையாகக் காணப்படும். மேலும் சுனிமங்கள் நாரமைப்பைப் பெற்றுப் (fibrous) படலங்களாகவும், உருவங்களாகவும், முந்திரி (reniform). கல் விழுது வடிவங்களாகவும் (stalactitic) காணப்படும். இவ்வடிவங்களோடு ஆர அமைப்பையும் (radiated), மையச் சுற்று வரி அமைப்புகளையும் (concentric) கொண்டு காணப்படும். குறு அச்சு இணை வடிவுப் பக்கத்தில் (010) தெளிவான பிளவு காணப்படும். இது எளிதில் உடையக்கூடியது. கடினத்தன்மை 5 5.5. இது தெளிவற்ற வைர மிளிர்வைக் கொண்டு காணப்படும். இதன் நிறம் மஞ்சள், சிவப்பு, இருண்ட பழுப்பு ஆகியவை. சில சமயம் ஊடுருவும் ஒளியில் இரத்தச் சிவப்பு நிறத்தைக் கொண்டும் காணப்படும். கனிமத்துகள் நிறம் பழுப்புக் கலந்த மஞ்சள் முதல் மஞ்சள் நிறம் வரை பெற்றிருக்கும். இது எதிர்-ஒளி சுழற்றும் கனிமம் ஆகும். ஒளியியல் அச்சுகள் மிகுதியான நிறமாலை யைக் dispersion) கொண்டிருக்கும். அதிர் நிற தன் படம்.1 மாற்றத் தன்மை (pleochroic) மிகக் குறைவாகக் காணப்படும். ஊசிவடிவ இரும்புக்கல் ஊசி வடிவங்களைக் கொண்டு காணப்படும். சம்மட்டி பிளண்ட் - வழு வழுப்பாகக் காணப்படும் ஒரு வகைக் கீதைட் ஆகும். து பொகிமியாவில் காணப்படுகிறது. இது பொது வாகத் தூண் அமைப்பு, நார்அமைப்புகளைப் பெற்றுக் காணப்படும். உட்செறிவு. FeO(OH) IND Fe,O,H,O அதாவது இரும்பு அல்லது இரும்பு ஹைட்ராக்சைடு. இக்கனிமம் மஞ்சள் நிறக் கனிமத்துகள் நிறத் தால் ஹேமடைட் கனிமத்திலிருந்தும் படிகமைப்பில் (crystalline) லிமோனைட் கனிமத்திலிருந்தும் வேறு படுகிறது. தோன்றுமிடம். இது பொதுவாகப் படிவுப் பாறைகள், புலன் நீங்காப் படிவுகள் (residual deposit) முதலியவற்றில் லிமோனைட் கனிமத்தோடு சேர்ந்து காணப்படுகிறது. மேலும் குவார்ட்ஸ், பைரைட் ஆகியவற்றோடு சேர்ந்தும் காணப்படும். மொத் தத்தில் இக்கனிமம் லிமோனைட்டிலிருந்து உருவாகி யிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. பயன். து ஓர் இரும்புத் தாதுவாகப் பயன் படுகிறது. நூலோதி. அ.வே.உடையனபிள்ளை A.N. Winchell and H. Winchell, Elements of Optical Mineralogy, Part II, Wiley Eastern Private Ltd, New Delhi. 1968.