கீரைகள் 769
யிலும் தண்டிலும் ஹைடிரோசயனிக் அமிலம் உள்ளது. இதன் இலைகளும் வேர்ப்பகுதியும் மருந்துக்கு உதவு கின்றன. இதன் இலை குடிநீர்ப்பசியை உண்டாக்கும். உடலைத் தேற்றும். இலை, வேர், பட்டைகளின் இலைச்சாறு சாறு செரிமான மருந்தாகிறது. உதவுகிறது. வேர்ப் புண்களைக் கழுவுவதற்கு பட்டையை அரைத்துப் பின்னைக்காயளவு பாலில் கலக்கி, காலையில் மட்டும் 3 நாள் தரக் கழிச்சல் உண்டாகும். தூக்கம் நன்கு வரும். வெறிநோய் போகும். இதன் வேரைப் பாம்பு, நாய்க்கடி நஞ்சு நீங்குவதற்குத் தரலாம் எனக் கூறப்பட்ட போதும் உறுதியான முடிவு தெரியவில்லை. தண்டைச் சுரண்டிப் பசை நீக்கி, கித்தார் போன்ற யாழ் வகை சைக்கருவிகள் செய்யலாம். கோ. அர்ச்சுணன் நூலோதி. K. R. Kirtikar and B.D. Basu, Indian Medicinal Plants, Lali Mohan Basu, Allahabad, 1935. கீரைகள் இவை பெரும்பாலும் அமராந்தேசி குடும்பத்தைச் சேர்ந்த அமராந்தஸ் என்னும் பேரினத்தில் அடங்கும். அமராந்தஸ் பேரினம் சிறு செடிகளைக் கொண்டது. வை தனி இலைகள் கொண்ட ஒரு பருவச் செடிகள். மாற்று இலையடுக்கம் கொண்டவை. காம்புள்ளவை, பூக்கள் மிகச் சிறியவை, இலைக் கோணங்களில் கூட்டமாகக் காணப்படுபவை. ஒரே மஞ்சரியில் இருபால் மலர்கள் கலந்து இருக்கும். பூவடிச் செதில்களும் பூக்காம்புச் செதில்களும் உண்டு. இதழ்கள் இரண்டு முதல் ஐந்து; இணையாதவை அல்லது சிறிது இணைந்தவை, நிறமற்றவை. ஒழுங் கானவை, மகரந்தத் தாள்கள் எண்ணிக்கையில் இதழ்களுக்குச் சமமானவை. இணையாதலை. மகரந்தப்பை இரண்டு அறைகள் கொண்டது. சூல்பை ஓர் அறையுடையது, மேல் மட்டமுடையது. ஒற்றைச் சூல் கொண்டது. அடித்தள ஒட்டு முறை கொண்டது. சூலகத்தண்டு குட்யைானது. சூலகமுடி இரண்டு முதல் மூன்று வரை இருக்கும். கனி ஒரு விதை கொண்ட அட்ரிகிள். விதை நேரானது, தட்டையானது அல்லது வளைவானது. வட்டக் கரு கொண்டது. முளைசூழ்தசை உள்ளது. இச்செடிகள் வெப்ப, மிதவெப்ப நாடுகளில் வளரக் கூடியவை. கீரைகள் இலைக்காய்கறிகள் ஆகும். சமையலுக்கு ஏற்ற காய்கனிகளாக இவற்றின் லைக்காம்பு, தண்டு அ. க. 8- 49 லை இலைக்கொழுந்து, இளந் கியவை பயனாகின்றன. இலைகளில் நீர் கீரைகன் 769 இருப்பு மிகுதியாக உள்ளது. இவற்றின் சக்கை உணவுப் பாதையைத் தூய்மை செய்யப் பயன்படு கிறது. இவற்றில் கனிமங்களும் மிகுந்துள்ளன. உடல் எளிதாகச் செரிக்கும் காரணத்தாலும், எளிதில் கிடைப்பதாலும். நலத்திற்கு ஏற்றதாக இருப்பதாலும் கீரை வகைகள் உணவில் சேர்வது நல்லது. கீரை விதைகளை வெல்லப்பாகுடன் சேர்த்து உருண்டையாக்கி, எள்ளுருண்டை போல் செய்ய லாம். அமராந்தஸ் சிற்றினங்களும் பயன்களும் அமராந்தஸ் காஞ்ஜெடிகஸ். (A. gangeticus L.) (முளைக்கீரை, தண்டுக்கீரை). முதிர்ந்த தாவரம் தண்டுக்கீரையாகவும், இளந்தாவரம் முளைக்கீரை யாகவும் பயனாகின்றன. அனைத்து இந்திய மாநிலங் களிலும் பயிரிடப்படுகிறது. மேலும் இது தன்னிச்சையாகவே எங்கும் வளர்கிறது. இது நேராசு வளரக்கூடிய செடி. மலர்கள் இலைக் கோணங்களில் கூட்டமாகக் காணப்படுவதோடு நுனி மஞ்சரியாகவும் உருவாகும். இலைகள் நீள் காம்புகளுடன் 7.5 செ.மீ. முட்டை வடிவமாகவும், பெரியனவாகவும் 12.5 செ.மீ. வரை நீளமும், 7.5 செ.மீ. வரை அகலமும் கொண்டு இருக்கும். மலர் இதழ்கள் முள்ளுடன் இருக்கும். அமராந்தஸ் பாலிகோனாய்டி (A. polygonoides Rox (சிறு கீரை.) இது இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலும் காணப்படுகிறது. பயிரிடப்படுவதோடு தரிசு நிலங்களில் தானாகவும் வளர்கிறது. தண்டுக்கீரை போல் நிமிர்ந்து வளராமல் தரையின் மேல் படிந்து வளரும் தன்மையுடைய சிறிய செடியாகும். இலைகள் நுனி அகன்று அடி குறுகித் தலைகீழான முட்டை வடிவில் இருக்கும். 2.5 செ.மீ. வரை நீளமுள்ளவை யாயிருக்கும். சிறிய மலர்கள் இவைக்கோணங்களில் காணப்படும். அமராந்தஸ் டிரிஸ்டிஸ் (A. Tristis) (அறுகீரை) இலைகள் அறுக்கப்படுவதால் அறுகீரை எனப்பெயர் பெற்ற இது மருவி அரைக்கீரை என்னும் பெயரைப் பெற்றுள்ளது. செடியின் அடிப்பகுதியிலிருந்து பல கிளைகள் தோன்றுகின்றன. இச்செடியும் வணிக முறையில் பயிரிடப்படுகிறது. இக்கீரை விதைகளி லிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. அமராந்தஸ் விரிடிஸ் (A. viridis L.) (குப்பைக் கீரை ) இது வெற்றிடங்களிலும், குப்பை மேடுகளிலும், தன்னிச்சையாக வளரக்கூடிய பயிரிடக்கூடிய சிற்றினம். இச்சிறு செடியின் இலைகள் முட்டை வடிவாகவோ ஏறத்தாழ முக்கோண வடிவமாகவோ இருக்கும். 7.5 செ.மீ. வரை நீளமும் 5 செ.மீ. வரை அகலமும் இருக்கும். இலைக்காம்புகள் 12.5 மி.மீ. நீளம் உள்ளவையாக இருக்கும். மலர்கள் நுனி மஞ்சரியில் இருக்கும்.