கறையான் 59
கின்றன. கிராம் பாசிடிவ் செல்கள் மீது நன்கு வினைபுரிகின்றன. ஆனால் சிதல்களைப் (spores) பாதிப்பதில்லை. சில கிராம் நொடில் நுண்ணுயிர்கள் பென்சால்சோனியம் குளோரைடில் இனப்பெருக்க மடைகின்றன, இத்தகைய மருந்துகள், சோப்புகளா லும் எதிரயனிக் கறை நீக்கிகளாலும் செயலற்றவை யாக ஆக்கப்படுகின்றன. ஃபீனால்கள், ஹெக்சா குளோரோயீன், குளோர்ஹெக்சிடின் ஆகியவையும் தொற்று நீக்கிகளாகப் பயன்படுகின்றன. -மு.கி.பழனியப்பன் வ நூலோதி. S.S. Block. Disinfection, Sterilisa- tion, Preservation, Lea and Felbiger, Philadelphia, 1977. கறை படிந்த கண்ணாடி சுறை படிந்த கண்ணாடியில், சாதாரண கண்ணாடி யுடன் பல வண்ணங்களும், பல வண்ணக் கற்களும் கலந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட வடிவங்களை அல்லது படங்களைக் கட்டட ஜன்னல்களில் வடிவமைப் பதற்குக் கறைபடிந்த கண்ணாடித் துண்டுகள் பயன் படுகின்றன. இப்படங்களும் வடிவங்களும் கட்டடங் களில் அழகிய பொருள்களாகப் பயன்படுகின்றன. ஆபரணங்கள், சர விளக்குகள் அமைப்பதிலும் கறை படிந்த கண்ணாடிகள் பயன்படுகின்றன. கண்ணாடிகளில் கறை படிய வைப்பதற்கு மூன்று முறைகள் கையாளப்படுகின்றன. முதல் முறை, கண்ணாடியை உலோக ஆக்சைடுகளுடன் உருக்கிச் செய்வதாகும். இரண்டாம் முறையில் நெய்வணம் பூசப்படுகிறது. சாதாரண கண்ணாடிகளுடன் சேர்க் கப்படும்உலோக ஆக்சைடுகளின் அளவு மிகக்குறைந்த அளவில் இருந்தாலும் அவை கண்ணாடி முழுதும் வண்ணத்தைச் சேர்க்கின்றன. கண்ணாடிகளுடன் சேர்க்கப்படும் உலோகச் சேர்மங்களின் அளவு வீதம் றைவாக மங்கலாக இருக்கும்போது கறை இருக்கும். சேர்மங்களின் அளவு மிகும்போது கறை படிந்த நிறைவுற்ற கண்ணாடி எனப்படுகிறது. கு ஒளி ஊடுருவும் உலோக ஆக்சைடு கலவையை, கண்ணாடிப் புறபரப்பின்மீது இட்டு. எரியூட்டும் போது ஆக்சைடு பூச்சு, கண்ணாடியோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. ஒளி ஊடுருவும் பல திண்ம வண்ணங்களின் உதவியால் கண்ணாடிப் புறபரப்பின் மீது சித்திரங்கள் வரையப்பட்டு, அக்கண்ணாடிகள் எரியூட்டப்படும்போது இச்சித்திரங்கள் நன்றாகப் படிகின்றன. கண்ணாடிக் கைவினைஞர் ஒரு சூடான இரும்புக்கம்பியின் உதவியால் கண்ணாடிகளைப் பல வடிவங்களாக வெட்டி, இணைத்து, தேவையான கறையான் 59 வடிவமைப்பைச் செய்கிறார். இவ்வடிவமைப்பு களைத் தாங்குவதற்கு இரும்புச் சட்டங்களோ, ஜன்னல்களின் சித்திரச் சட்டங்களோ பயன்படு கின்றன.
இக்கண்ணாடிகளின் ஒளி ஊடுருவும் தன்மை யைத் தேவைக்கேற்றவாறு கட்டுப்படுத்துவதில் தற் காலக்கண்ணாடித் தொழில்நுட்பம் துணை புரிகிறது. இத்தொழில்நுட்பம் பழங்காலக் கறைபடிந்த சுண் ணாடிக் சுலையின் வளர்ச்சியாகும். உலோகச் சேர் மங்களைச் சேர்த்துச் செய்யப்படும் கறைபடிந்த கண் ணாடிகள், அழகிய பொருள்களாக மட்டுமன்றிப் பல முறைகளிலும் பயன்படுகின்றன. காட்சியகங்களில் பயன்படும் பொருள்களின் பளபளப்பு மங்கிவிடா மலிருப்பதற்கு அப்பொருள்கள் ஒருவகைக் கறை படிந்த கண்ணாடி அறைக்குள் வைக்கப்படுகின்றன. இவ்வகைக் கண்ணாடிகள் சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக்கதிர்களைப் பொருள்களின் மீது விழாதபடி வடிகட்டி விடுகின்றன, மேலும், ஒரு வகைக் கண்ணாடி கள் நகரும் திரைப்படக் கருவிகளிலும், நழுவும் படக் கருவிகளிலும் (slide projectors) வெப்ப வடிகட்டி களாக அகச்சிவப்புக் கதிர்களை வடிகட்டி விடு கின்றன. வாகனங்களில் ஓட்டுநருக்கு முன் இருக்கும் ஒரு வகைக் கண்ணாடிகள் ஓடு தளத்திற்கும் வாகனத்திற் கும் இடையே உள்ளே ஒளியின் வேறுபாட்டைக் குறைத்து ஓட்டுநருக்குத் துணை புரிகின்றன. மெருகு பூசப்பட்ட சிலவகைக் கண்ணாடிகள் சுவருக்கு, எளி தில் கழுவக்கூடிய புறப்பரப்பைக் கொடுப்பதில் பயன் படுகின்றன. ஒளிக்குறியீடுகள் கொடுப்பதிலும் (Jumi- nous signs) கண்ணாடிகள் பயன்படுகின்றன. போக்கு வரத்து விளக்குகளில் உள்ள வண்ண வில்லைகளிலும் (coloured lens) இருப்புப்பாதை சைகை விளக்கு களிலும், தடை விளக்குகளிலும் பயன்படும் கண்ணாடி களில் உலோக ஆக்சைடுகள் உருகிய கண்ணாடி யுடன் சேர்த்துச் செய்யப்படுகின்றன. கி.மு. மோகன் நூலோதி. W.A. Weyl, Coloured Glasses, Society of Glass Technology. 1951. கறையான் பூச்சியினங்களில் சம இறக்கைப் (isoptera) பூச்சி வரிசையைச் சேர்ந்த கறையான்கள் சமூக வாழ்க்கை நடத்துபவை. இவற்றில் ஏறத்தாழ 1700 இனங்கள் உள்ளன. இவை பார்ப்பதற்கு எறும்புகளைப் போலும் வெண்ணிறத்துடனுமிருப்பதால் வெள்ளை எறும்புகள் (white ants) எனப் பெயர் பெற்றன. ஆனாலும் இவை எறும்பு வகையைச் சேர்ந்தவை