பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/792

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 கீழ்ச்‌ சிவப்பு நிரலியல்‌

772 கீழ்ச் சிவப்பு நிரலியல் இந்தக் கீல் வாதத்தை பேடாக்ரா எனவும் குறிப்பர். மேற்கூறியவை தவிர மூட்டழற்சி, டோபை தோன்றலால் சிறுநீரகங்களும் பாதிக்கப்படலாம். சிறுநீரகங்களில் யூரிக் அமிலக் கற்கள் தோன்றி ஊ று விளைவிக்கலாம். மனிதனில் பியூரின்ஆக்கச்சிதை மாற்ற இறுதிப் பொருளாக யூரிக் அமிலம் அமைகிறது. இரத்தத்தில் யூரிக் அமிலம் மிகையாகும்போது. கீல் வாதம் உண்டாவதற்கு யூரிக் அமிலம் மிகையாக உற்பத்தி யாவது, சிறுநீரகத்தால் யூரிக் அமிலம் வெளிப்படுவது அல்லது குறைவது. பியூரின் கொண்ட உணவுப் பொருள்களை மிகுதியாக அருந்துவது, சிறுநீரகம் தவிர ஏனைய உறுப்புகளால் யூரிக் அமிலம் குறை வாக வெளியேற்றப்படுவது ஆகியவை காரணமாக அமையும். கோளாறுகளால் பரம்பரை பரம்பரை இந்நோய் தோன்றுவதையும் நினைவில் கொள்ள வேண்டும். யாக தீவிர கீல்வாத மூட்டழற்சியின்போது திடீரென்று தோன்றும் வலி தாங்க முடியாதபடி அமைகிறது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போதும் இந்த வலி திடீரென்று நோயாளியைப் பாதிக்கிறது. அழற்சி யடைந்து வீங்கிய விரலின் மீது, துணி பட்டாலே வலி அதிகரிக்கிறது. இவ்விதம் வலி திடீரென்று று தோன்றுவதற்கான காரணங்கள் வருமாறு: அடிபட்ட காயம், அறுவை மருத்துவம், மிகையாக மது அருந்து தல், மிகையாக உணவு அருந்துதல், மன உளைச் சல். வழக்கத்திற்கு மாறான உடல் வேலை என் பன. இந்நோய் நன்கு குணமடைந்த பின்பும் மீண்டும் தோன்றி நாட்பட்ட நிலையடையும். டோபை எனப் படும் பையூரேட் உப்புப் படிகங்கள் காதைச் சுற்றிக் காணப்படுகின்றன. விரல், கை, பாதம், முழங்சை, முழங்கால், குதிகால் ஆகியவற்றிலும் டோபைகள் தோன்றுகின்றன. இத்தகைய டோபைகள் சிலபோது ந்து புண்ணாகிச் சீழுடன் காணப்படுகின்றன. உடை . இரத்தத்தில் மிகையான யூரிக் அமிலம் (10 மி. கிராமுக்கும் அதிகமாக) இருப்பது, பாதிக்கப்பட்ட மூட்டின் மூட்டுப்பை நீர்மத்தை வெளியிலெடுத்து, உருப்பெருக்கியில் பார்த்தால். ஊசி வடிவத்தில் யூரேட் படிகங்கள் வெள்ளணுக்குள்ளே இருப்பது. டோபைகளிலிருந்து நீர்மத்தை அகற்றி யூரேட் படிகங்களைக் காண்பது ஆகியவற்றைக் கொண்டு இந்நோயை அறுதியிடலாம். மருத்துவமாக, கால் சிஸின் உடனடியாகப் பயன் தருகிறது; தேவைப்படும். போது கால்சிஸினைச் சிரை வழியாக உட்செலுத்த லாம். இண்டோமெத்தாசின், ஃபினைல்பியூட்ட சோன், கார்ட்டிகோஸ்டீராய்டுகள் ஆகியவையும் பய னளிக்கின்றன. யூரிக் அமிலக் குறைப்பு மருந்தாக புரோபன சிடைக்கையாளலாம்.அல்லோப்பூரினாலும் இரத்தத்தில் யூரிக் அமில அளவைக் குறைக்கிறது. அ.கதிரேசன் கீழ்ச் சிவப்பு நிரலியல் கீழ்ச் இது கீழ்ச்சிவப்பு (infrared) ஒளிக்கும் பொருளமைப்பு களுக்கும் இடையேயான இடையீடு பற்றிய ஆய்வுப் பிரிவாகும். மூலக்கூறுகளில் இடம்பெறும் அணுக்களின் இயல்பான அதிர்வெண்கள் கீழ்ச்சிவப்பு ஒளிப்பகுதியில் அமைந்துள்ளமையால் இவ்வொளிப் பகுதி, பொருள் களின் நுண்ணமைப்பைச் கண்டறிவதற்குச் சிறந்த கருவியாகிறது. சில வளிமநிலை மூலக்கூறுகள் தாலைக் கீழ்ச்சிவப்புப்பகுதியில் (far infrared) தம் சுழற்சி அதிர்வெண்களைக் கொண்டுள்ளன சிவப்பு ஒளிக்கதிர்கள் மூலக்கூற்றின் மீது படும்போது பிணைப்புகளின் சுழற்சி விரைவும், அதிர்வின் வீச்சும் கூடுதலாகின்றன. இவ்வியக்கத்திற்குத் தேவைப்படும் ஒளி ஆற்றல் (கீழ்ச்சிவப்பு ஒளியை வெப்பமாகவும் குறிப்பிடலாம்) உறிஞ்சப்படுவதால் இவ்வாற்றலுக்கு உடன் தொடர்பான அலை எண் (wave number) அம்மூலக்கூறு அல்லது பிணைப்புக்கு ஒரு சிறப்புப் பண்பாகிறது. உறிஞ்சப்படும் ஒளி ஆற்றல் பிணைப் பின் வலிவுடன் நேரடித் தொடர்புகொண்டுள்ளமை யால், மூலக்கூறு வழியே ஊடுருவி வெளிவரும் ஒளியின் அவை எண்ணை ஒளியின் அடர்த்தியுடன் (intensity) வரைபடமாக்கினால் (படம் 1) ஒளி உறிஞ்சப்படும் போதெல்லாம் வெளிவரும் ஒளியின் அடர்த்தி குன்றும், எனவே, இவ்வரைபடத்தில் இறக்கம் நேரும் இடமெல்லாம் ஒரு பிணைப்புக்கும் கீழ்ச்சிவப்பு ஒளிக்கும் இடையீடு ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். இரு ஒளியை உறிஞ்சுவதால் பிணைப்பின் நீளம் மாறுகிறது. இதன் விளைவாக மூலக்கூறின் இரு முனைத் திருப்புத்திறன் (dipolemoment) மாறுகிறது. ஒருபடித்தான ஈரணு மூலக்கூறுகளில் (homogeneous diatomic molecules) பிணைப்பு நீளத்தால் முனைத் திருப்புத்திறன் தாக்கப்படுவதில்லையாத லால் (இவ்வகை மூலக்கூறுகளுக்கு இருமுனைத் திருப்புத் திறன் சுழிமதிப்பு ஆகும்) இவ்வகை மூலக் கூறுகள் கீழ்ச்சிவப்பு ஒளியை உறிஞ்சுவதில்லை. ஒளி யின் இப்பகுதி ஒருபடித்தான மூலக்கூறுகளைப் பற்றி அறிவதற்குப்பயன்படாது. அளவு கருவியியலும் உத்திகளும், ஒரு தோற்று வாயிலிருந்து தொடர்ந்து உருவாக்கப்படும் கீழ்ச் சிவப்புக் கதிர்க்கற்றையை ஒரு குவிக்கும் ஆடிமீது பாய்ச்சி அதனின்றும் வெளிவரும் சுற்றையைச் சேர்மத்தின் மாதிரியின் மீது செலுத்த வேண்டும். சில அதிர்வெண் கொண்ட ஒளி, பொருளால் நன்கு மேலும் உறிஞ்சப்படுகிறது. சில மென்மையாக உறிஞ்சப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட கற்றை பொருளினூடே ஊடுருவிப் பாய்ந்து ஒரு நிறத்தை மட்டும் உட்புகவிடும் அமைப்பில் (monochromator) நுழைகிறது. இவ்வமைப்பு ஒரு கணத்தில் ஒரே அதிர்வெண் கொண்ட அலைகளை மட்டும்