774 கீழ்ச் சிவப்பு நிரலியல்
774 கீழ்ச் சிவப்பு நிரலியல் மேற்கூறிய விகிதத்தின் மாறிலியைக் கண்டறிந்தால் அதைப் பயன்படுத்தி வேறொரு வகை மூலக்கூற்றின் உறிஞ்சு தன்மையை அறியலாம். ம் அலைக்குறுக்கீட்டு அளவி முறைகள் (interferometric methods). ஃபூரியர் வழி உருமாற்றமுறை (FTS, எனப்படும் இம்முறையில் பட்டகங்கள் பயன்படுத்தப் படுவதில்லை. சாதாரணக் கீழ்ச்சிவப்பு நிரவியல் அமைப்பில் நிரலைத் தொடர்ச்சியாகப் பெறுவதற்கு ஒவ்வோர் அதிர்வெண்ணிலும் உறிஞ்சல் நிகழ்கிறது. FTS முறையில் அனைத்து அதிர்வெண் அலைகளும் ஒரே சமயத்தில் ஓர் அலைக் குறுக்கீட்டு அளவி வழி யாகச் செலுத்தப்படுகின்றன. இவ்வளவி இவ்வதிர் வெண்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வெளி யீட்டுக் குறியீட்டை உருவாக்கித் தருகிறது. குறுக் கீட்டு அளவியில் ஒளிக் குறுக்கீடு நிகழும் தன்மையைப் பொறுத்து மின் வெளியீடு அமைகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட அளவறி தொடர்பு குறுக்கீட்டு வரை படம் (interferogram) எனப்படும். இவ்வரைபடத்தை அதிர்வெண் சார்பான நிரலாக மாற்றுவதற்குச் சிக்கலான கணக்கீடுகள் தேவையாகும். இதை விரை வாகவும் செம்மையாகவும் செய்து முடிப்பதற்கென ஓர் எண் கணிப்பொறி இணைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் கட்ட வரைபடம் (block diagram) படம் 3இல் காட்டப்பட்டுள்ளது. ஒரு தோற்றுவாயி லிருந்து அனைத்து அதிர்வெண்களும் கொண்ட கீழ்ச் சிவப்பு ஒளிக்கற்றை உருவாக்கப்பட்டு ஒரு கற்றைப் பிரிப்பி (beam separator) மீது செலுத்தப்படுகிறது. இக்கற்றையில் ஒரு பாதி அசைக்கக்கூடிய தளக் கண்ணாடி மீதும்மறுபாதி நிலைத்த தளக் கண்ணாடி மீதும் பாய்ச்சப்படுகின்றன. இவ்விரு தனிக்கற்றை களும் மீண்டும் கற்றைப்பிரிப்பி மீது மோதுகின்றன. இந்நிலையில் இருகற்றைகளும் வெவ்வேறு தொலைவு பயணம் செய்துள்ளன. இத்தொலைவு வேறுபாடு மாற்றியமைக்கவல்லது. மீண்டும் இணைக்கப்பட்ட கற்றை, மாதிரிப் பொருளின்மீது பாய்ச்சப்படுகிறது. மாதிரிப் பொருளினூடே சென்று வெளிவரும் ஒளிக் கற்றை ஓர் உணர்கருவியால் மின் குறியீடாக மாற்றப் பட்டுப் பெரிதாக்கப்பட்டுக் கணிப்பொறியை அடை கிறது. கணிப்பொறிக்குக் கட்டளையிடத் தொலைத் தட்டெழுத்துப் பொறியொன்று உள்ளது. பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிறப் பிரிகை (dispersive) வகை நிரலிலிருந்து குறுக்கீட்டு அளவி முறை பின்வரும் வகைகளில் வேறுபடுகிறது. குறுகிய வரம்பிலடங்கும் கீழ்ச்சிவப்புக்கதிர் ஒளியின் அனைத்து அதிர்வெண் கூறுகளையும் முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. இதனால் புற மின்னோட்ட மிகைக்கலப்புக் (noise) குறைகிறது. இதற்கு அடிப் படையாக இரு கருவிகளுக்குமிடையே இரு அடிப் படை வேறுபாடுகள் உள்ளன. குறுக்கீட்டு அளவியில் ஒரே நேரத்தில் ஒளிக்கற்றையின் அனைத்து அதிர் வெண்களும் பயனாகின்றன. ( இதைச் சேர்த்தனுப் புகை ஆதாயம் என்பர்). நிரல் காட்டியின் நுழைவு மற்றும் வெளிமுனை ஆகியன மிகச் சிறியவையாக உள்ளமையால், தோற்றுவாயிலிருந்து வந்து சேரும் ஒளிஅச்சின் திண்மக் கோணம் (solid angle) குறைவாக இருக்க வேண்டும். குறுக்கீட்டு அளவியின் அமைப் பில் இந்த உச்சவரம்பு தேவையில்லாமையால் உள்ளீட்டுக் கதிர்கள் எந்தத் திண்மக்கோணத்திலும் நுழையலாம். பிரித்துணர்திறன் பத்து மடங்கு கூடுத லாக்கப்படும்போதும் புற மின்னோட்ட மிகைக் கலப்புக் கூடுதலாகாது பணிபுரியும் அமைப்பே குறுக் கீட்டு அளவியாகும். 15 D R CR MM M T A படம் 2.Q - ஒளித்தோற்றுவாய், S - மாதிரிப் பொருள் கலம், M - ஒரு நிற வடிகட்டி,C-ஆடி,R- ஒப்பீட்டு வெற்றுக்கலம், D - ஓட்டும் அமைப்பு, T . உணர்கருவி, A- மிகைப்பி (பெருக்கி), CR - குறிதாள் பதிவி