பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/797

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்ச்‌ சிவப்பு நிரலியல்‌ 777

லாக கீட்டோனிலுள்ள -CH,-தொகுதிக்குப் பதி எதிர்மின் சுமை கூடுதலான ஆக்சிஜனைக் கொண்டிருப்பதால் எஸ்ட்டரின் நிரல் 30 செ.மீ கூடுதலான அலை எண்ணில் தோன்றுகிறது. பிற கார்போனைல் சேர்மங்களைப் போலவே, நிறைவுறாப் பிற அரோமாட்டிக் எஸ்ட்டர்களின் நிரல் அதே மூலக்கூறு எடை மற்றும் சங்கிலி அமைப்புக் கொண்ட நிறைவுடைய எஸ்ட்டர்களின் நிரலைவிட செ.மீ. -I குறைவான அலை எண்ணில் அமைகிறது. காட்டாக, வடிவ மாற்றியங்களான (isomers) எத்தில் பென்சோயேட்டும், மெத்தில் ஃபீனைல் அசெட்டேட் டும்) C = 0 இழுவகை அதிர்வு (stetching vibration) அவை எண்களில் வேறுபடுகின்றன. 30 கீட்டோ மற்றும் ஈனால் வடிவங்களின் சமநிலைக் கலவையாக உள்ள எத்தில் அசெட்டோ அசெட்டேட் எனும் சேர்மத்தின் நிரலில் கீட்டோ அமைப்புக்கான 1724 செ.மீ -1 அலை எண்ணும், எஸ்ட்டர் கார் போனைல் தொகுதிக்கான 1748 செ.மீ -1 எண்ணும், ஈனால் தொகுதிக்கே உரிய ஹைட்ரஜன் பிணைப்புக்கான 1650 செ.மீ -1 அலை எண்ணும் நிரல் பட்டைகளைக் காட்டுகின்றன. CH H,C-C C-OCH 11 0 அலை ஹைட்ரஜன் பிணைப்புற்ற ஈனால் வடிவம் (5:1650 செ.மீ -1) திண்மநிலை அல்லது மீச்செறிவுற்ற கரைசல் நிலையில் ஒரு கார்பாக்சிலிக் அமிலத்தின் கார் போனைல் தொகுதி உறிஞ்சல் அச்சேர்மத்தின் இரு படியிலிருந்தே (dimer) தோன்றுகிறது. C.H.- O...H-O O-H...O C-CH பென்சாயிக் அமில இருபடி இக்கரைசலை மேன்மேலும் கரைப்பானைச் சேர்த்து விளாவுகையில் இரு பட்டைகள் தெரிகின் றன. இவற்றுள் ஒன்று ஒருபடிக்கும், மற்றொன்று இருபடிக்கும் உரியவை. இருபடியிலுள்ள ஹைட்ரஜன் பிணைப்புக்குத் தனி அலை எண்ணில் உறிஞ்சல் நிகழ்கிறது. கார்பாக்சலேட் உப்புகள் அவற்றின் தூய அமிலங்களின் உறிஞ்சல் நிலைகளில் ஒளியை உறிஞ்சுவதில்லை. மாறாக, மற்றோர் அலை எண் கீழ்ச் சிவப்பு நிரலியல் 777 பகுதியில் இரு அலை எண்களில் உறிஞ்சுகின்றன. இவையிரண்டும் கார்பாக்சலேட் அயனியின் இரு இழுவகை அதிர்வுகளிலிருந்து (சமச்சீர்மையுற்ற மற்றும் சமச்சீர்மையற்ற) தோன்றுகின்றன. கார் பாக்சிலிக் அமில நீரிலிகளும் தோற்றுவிக்கின்றன. பட்டைகளைத் அமைடுகள் யாவும் C=0 இழுலகை அதிர்வுக் குண்டான உறிஞ்சலைக் காட்டுகின்றன என்றாலும், இவ்வுறிஞ்சல் அலை எண் அமைப்பின் திரள் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது.N - மெத்தில் அசெட்டமைடு எனும் சேர்மம் ஆவிநிலையில் 1713 செ.மீ-' இலும் நீர்த்த குளோரோஃபார்ம் கரைசலில் 1700 செ.மீ-1 இலும் தூய நீர்ம நிலையில் 1650 செ.மீ -1 இலும் உறிஞ்சுகிறது. இதற்குக் காரணம் திண்ம நீர்ம நிலைகளில் ஹைட்ரஜன் பிணைப்பு இடம் பெறுதலும், கரை அது இல்லாதிருத்தலுமேயாகும். உறிஞ்சல் அலை எண்ணின் செறிவுச் சார்பு மூவிணைய அமைடு களில் (teritary amides) தோன்றுவதில்லை. ஏனெனில், இங்கு ஹைட்ரஜன் பிணைப்பு இடம் பெறுவதில்லை. அமைடுகளைப் போன்றே அமின்களிலும் N-H பிணைப்புக்கு உரிய உறிஞ்சல்கள் தென்படுகின்றன. இருவகைச் சேர்மங்களிலும் மூவிணைய நிலையில் (taritary state) இவ்வுறிஞ்சல் காணப்படுவதில்லை; ஏனெனில் ட்ரை அமீன்களிலும் ட்ரை அமைடுகளிலும் N-H பிணைப்பு இல்லை. அல்க்கீன்களில் C=C இழுவகை அதிர்வுகளைவிட CH இழுவகை அதிர்வுகள் கூடுதலான ஒளியை உறிஞ்சு வதால் அல்க்கீன்களைக் கீழ்ச்சிவப்பு ஒளியைப்பயன் படுத்தி ஆராய்தல் எளிதன்று. நான்கு ஹைட்ரஜன் அணுக்களும் பதிலீடு செய்யப்பட்ட அல்க்கீன்களை முழுதுமாக இவ்வாய்வு முறையிலிருந்து ஒதுக்க வேண்டிவரும்; ஏனெனில், C-H அதிர்வுகள் இம்மூலக் கூறுகளில் இடம் பெறவில்லை. சமச்சீர் அமைப்பில் C = C (அசெட்டிலீன் வகைப் பிணைப்பு) மிகவும் மெலிதாக உறிஞ்சுகிறது. மூலக்கூறின் நடுப்பகுதி யிலுள்ள C=C பிணைப்பை இழுப்பதால் அம்மூலக் கூறின் இருமுனைத் திருப்புத்திறன் மாறுவதில்லை. எனவே ஒளி உறிஞ்சலும் மிகக் குறைந்தே உள்ளது. மாறாக, C=C பிணைப்பு மூலக்கூறின் ஒரு முனையில் அமைந்திருப்பின் உறிஞ்சல் கணிசமாகும். CEN முப்பிணைப்பும் C=C முப்பிணைப்பு உறிஞ்சும் அலை எண் பகுதியிலேயே உறிஞ்சினாலும் உறிஞ்சலின் முனைப்புக் கூடுதலாகிறது. அரோமாட்டிக் சேர்மங்கள் நான்கு அலை எண் களில் ஒளி உறிஞ்சுகின்றன. பாலிஸ்டைரீன், பென் சோயிக் அமிலம், ஃபீனைல் அசெட்டிலீன், பென்சோ நைட்ரைல், டைஃபீனைல் ஆகிய அரோமாட்டிக் சேர்மங்கள் யாவும் இவ்வுறிஞ்சல்களைக் கொண் டுள்ளன. இவ்வுறிஞ்சல்கள் நிரலில் இடம் பெறாதி .