கீழ்ப் பெருஞ்சிரை 781
கீழ்ப் பெருஞ்சிரை 781
- . C-Cl
இ.C-Br F. C-1 ருந்தால், அச்சேர்மம் . இருக்க முடியாது. அரோமாட்டிக் சேர்மமாக பல்வேறு வினையுறு தொகுதிகளின் சிறப்பு உறிஞ்சல் அவை எண்கள் அட்டவணை 1 இல் பட்டியலிடப்பட்டுள்ளன. இரு அணுக்களுக்கு இடைப்பட்ட தொலைவு, பிணைப்புக் கோணம் ஆகிய மூலக்கூற்றுத் துணை யலகுகளை அறியவேண்டியிருப்பின், மூலக்கூறின் நிலைமத்திருப்புத்திறனை (moment of inertia) அறிதல் தேவை. மூலக்கூறின் சுழற்சி அதிர்வெண் களிலிருந்து (rotational frequencies ) இவ்வியல்பின் எண் மதிப்பைக் கணக்கிடலாம். =2B (J+1). இங்கு J = சுழற்சி குவாண்ட் டம் எண்: B = h 4*IC . I. நிலைமத் திருப்புத்திறன். கார்பன் டைஆக்சைடு, மெத்தேன், எத்திலீன், எத் தேன் ஆகிய மூலக்கூறுகளின் கீழ்ச்சிவப்பு நிரல்களி லிருந்து அம்மூலக்கூறுகளின் வடிவமைப்புத் துணை யலகுகள் வழுவாத நுண்ணியத்துடன் (high preci- sion) அறியப்பட்டுள்ளன. இத்துணையலகுகளைக் கண்டுபிடிக்கும் வழிமுறை சிக்கலாக இருக்கும்போது, மூலக்கூறின் குறுக்களவு தெரியாத நிலையிலும் அதன் வடிவமைப்பை அறியலாம். மூலக்கூறின் சமச்சீர்மை அல்லது சமச்சீர்மையற்ற நிலை நிரலின் தன்மையைப் பாதிக்கும். இப்பாதிப்பை உற்று ஆராய்ந்தால் மூலக்கூறின் சமச்சீர்மை அளவு துலங் கும். இந்நிரலுடன் ராமன் நிரலையும் (Raman spectrum) சேர்த்து ஆய்வு செய்தல் பயன்மிக்கது. மீ படிகநிலைத் திண்மங்களின் கீழ்ச்சிவப்பு நிரல்கள் படிகங்களின் எலெக்ட்ரான் ஆற்றல் நிலைகளைத் தெளிவுபடுத்துகின்றன. பகுதிகடத்திகளிலும், கடத்திகளிலும் இவ்வாற்றல் நிலைகளைப் பற்றிய அறிவு பெரிதும் உதவும். பலபடித்தான வினையூக்கி களின் பரப்பின் தன்மையை அறிவதற்கும் கீழ்ச் சிவப்பு நிரல் பயன்படுகிறது. அளவை அமைப்பின் முதன்மை மற்றும் துணைத் தேவைகள். கீழ்ச்சிவப்புக் கதிரின் தோற்றுவாயாக நெர்ன்ஸ்ட் கனல் பரப்பி (Nernst glower) எனும் கருவி பயனாகிறது. ZrO,, Er, O. YO, ஆகியவற்றின் கலவையாலான ஒரு தடியை 1500°C. வெப்ப நிலைக்குச் (மின்சாரத்தைச் செலுத்தி) சூடுபடுத்தி அகச் சிவப்புக் கதிர் உருவாக்கப்படுகிறது. ஒற்றைநிற ஒளியைப் பெறுவதற்குப் பட்டகங்கள் பயனா கின்றன. ஆய்வுக்குட்படுத்தப்படும் பொருள்களை 800-600 600-500 500 அமைப்பில் மீ மீ புகுத்தத் தேவைப்படும் கலன்களைக் (cells) கண்ணாடியைக் கொண்டோ, குவார்ட்ஸைக் கொண்டோ தயாரித்தல் கூடாது. ஏனெனில், இவ் வகைப் பொருள்கள் கீழ்ச்சிவப்புக் கதிர்களை உறிஞ்ச வல்லவை. உலோக ஹாலைடுகள் (குறிப்பாகச் சோடியம் குளோரைடு) க்கலன்களைத் தயாரிக்கப் பயன்படும். இந்த ஹாலைடுகள் நீரில் கரையக் கூடியனவாதலால், ஆய்வுக்குட்படுத்தப்படும் பொருள் ஈரமற்றதாக இருத்தல் இன்றியமையாத் தேவையா கிறது. நிரலைப் பதிவு செய்யும் தாளை உருளை அல்லது குறிதாள் பதிவியில் சுற்றும்போது எப் போதும் ஒரே முறையில் சுற்றுவது இயலாததா கையால்,ஓர் அளவீட்டுக்கோடு சார்பு நிலையைப் calibration line) பதிவு செய்ய வேண்டியதாகிறது. இந்நோக்கத்துடன் பாலிஸ்டைரின் எனும் பலபடி யின் நிரல் கோடுகளுள் ஒன்றைச் சார்புநிலையாகக் (reference) கொள்ளுதல் வழக்கம். ஆய்வுப் பொருளைத் தனித்தநிலையில் அமைப் பில் புகுத்துவதில்லை. திண்மநிலை ஆய்வுப் பொருளை 5 மி.கி. அளவில் எடுத்துக் கொண்டு நூஜல் எனும் உயர் மூலக்கூறு எடைகொண்ட நீர்மநிலைப் பாரஃபீன் கலவையுடன் ஒரு கூழாகச் (mull) செய்து பயன்படுத்தலாம்.மாறாக, ஹெக்சோ குளோரோபியூட்டாடையின் எனும் நீர்மத்தைப் பயன்படுத்தலாம். முற்றிலும் மாறான ஒரு முறையில் 1மி.கி. அளவு ஆய்வுப் பொருளை 100-200 மி.கி. மீத்தூய்மையான பொட்டாசியம் புரோமைடுடன் நன்கு அரைத்துக் கலவையாக்கி அல்லது KBr- ஆய்வுப் பொருள் கரைசலை உறைநிலையில் உலர்த்திப் பயன்படுத்தலாம். KBr கீழ்ச்சிவப்புக் கதிரை உறிஞ்சுவதில்லையாதலால் ஆய்வுப்பொரு ளின் முழு நிரலும் எவ்வகைக் குறுக்கீடும் இன்றிக் கிடைக்கும். நூஜால் கலவையைப் பயன்படுத்தினால் நூஜால் உறிஞ்சும் அலை எண் பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் ஆய்வுப்பொருளின் நிரலில் குறுக்கீடு இராது. மே. ரா. பாலசுப்ரமணியன் நூலோதி. John R. Dyer, Applications of Apsor- ption Spectroscopy of Organic Compounds, Prentice- Hall, New Delhi, 1969. கீழ்ப் பெருஞ்சிரை வயிற்றிலும் காலிலும் உள்ள சிரை இரத்தம் கீழ்ப் பெருஞ்சிரையை (inferior vena cava) அடைகிறது.