பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/804

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 கீழ்‌ முதுகு வலி

784 கீழ் முதுகு வலி தடை ஏற்படுகிறது. மூட்டுகளில், பந்தகங்களில் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டு மூட்டின் அசைவைத் செய்யக் கூடும். இந்நிலையில் மூட்டுகளின் பகுதிகள் ஒன்றோடொன்று சேர்ந்துவிடுவதால் மூட்டை அசைக்க முடியாத நிலை ஏற்படும். இது பெரும் பாலும் முதுகு முள்ளெலும்பு, இடுப்பு மூட்டு ஆகிய வற்றைப் பாதிக்கும். ஆகவே குனிந்து நிமிர முடியா மலும், பக்கவாட்டில் முதுகை வளைத்துத் திருப்ப முடியாமலும் போய்விடும். மூச்சு விடும்போது விலா எலும்புகள் இயல்பாக ஏறி இறங்கும் நிலையை இழந்து மூச்சு விடுவதிலும் துன்பம் ஏற்படும். எக்ஸ் கதிர்ப் படம் மூலம் இந்நோயை அறிய முடியும். இந்நோயுற்றோருக்கு வலிபோக்கி மாத்திரைகளுடன் நோய் முற்றிய நிலையில் செயற்கை மூட்டுகள் பொருத்தீக் குணமாக்க முடியும். எலும்பு மென்மை. பெண்களுக்கு இறுதி மாதவிடாய்க்குப் பிறகும், ஆண்களுக்கு முதிய வய திலும் ஏற்படும். எலும்பு மென்மை ஆகும் நிலையில் வலி ஏற்படக் காரணம், எலும்பில் நுண்ணிய எலும்பு முறிவுகள் ஏற்படுவதே ஆகும். ஆனால் இவ்வலி பொதுவாக ஓய்வு எடுத்த நிலையில் குறைந்துவிடும். குறையவில்லையெனில் மைலோமா நோயா இரண் டாம் நிலைப் புற்றுத் தோன்றியுள்ளதா என்று இரத்த ஆய்வு மூலமும், பாஸ்ஃபரஸ், புரதம், கால் சியம், இரத்தச் சிவப்பு அணுப் படிவ நிலை முதலி யவை மூலமும் அறிதல் வேண்டும். மருத்துவமாக வலியைக் குறைக்க இரும்புச் சத்து உதவும். ஆஸ்டியோ மலேசியா என்னும் நோய் சைவ உணவு உண்பவர்க்கும், முதிய வயதில் சத்துணவு இன்றிக் காஃபி, கஞ்சி மட்டும் குடிக்கும் பெண்களுக்கும் வரக் கூடும். எலும்புக் கட்டிகள். தீங்கற்ற எலும்புக் கட்டிகள் பொதுவாக வலியைத் தாரா. ஆகவே இக்கட்டி சாதாரண ஏற்பட்டு ஏறத்தாழ ஓராண்டாவது வலியுடன் இருந்த பின்னரே மருத்துவ அறிவுரைக்கு மருத்துவரிடம் வருவர். இக்கட்டியை எக்ஸ் கதிர் மூலம் எலும்பு அழிவைக் கொண்டு அறிய முறியும். கட்டியை அறுவை மூலம் அகற்றினால் போதும். எக்ஸ் கதிர் மருத்துவம் இக்கட்டிகளுக்கு ஏற்றதன்று. ஏனெனில் இக்கட்டியே புற்றாக மாறி விடக்கூடும். மூளை, தைராய்டு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கீழ்க் கோளம் போன்றவற்றில் புற்றுநோய் இருந்து இரண்டாம் நிலைப் புற்றாக இரத்தம் மூலம் முதுகு எலும்பில் பரலி அவ்வெலும்பு நசுங்குவதாலும், ஓடிவதாலும் கீழ் முதுகு வலி ஏற்படும். புற்றுக் கட்டிகள் முள்ளெலும்பில் இருப்பின், நோயாளி மல்லாந்த நிலையில் இருக்கும்போது வலி குறைந்து காணப்பட்டு, படுத்த நிலையில் மிகுதியாகும். ஆனால் இதற்கு மாறாக க முதுகெலும்பு இடைத்தட்டுப் பிதுக்க நோயில் படுத்தால் வலி இருந்தாலும் மிகுதியாகாது. முள்ளெலும்பு நழுவல். பிறவி பிறவி முள்ளெலும்பு வாலிபப்பருவத்தில் நழுவல் நோய் கீழ் முதுகு வலி, சிலசமயம் புட்டம் மற்றும் தொடையிலும் வலியை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு ஆண்களை விட இரண்டு மடங்கு இந்நோய் மிகுதியாகக் காணப் படுகிறது. இந்நோயாளிகளுக்கு வலி மிகுதியாக ல்லாவிட்டாலும் முன்புறம் குனிய இயலாமற் போய்விடும். பக்க இவர்களின் முள்ளெலும்பு வாட்டில் வளைந்துள்ளமையால் உடல் அளவு கால அளவைவிடக் குறைந்ததாகத் தோற்றமளிக்கும். மருத்துவமாக முள்ளெலும்பின் பின்புறம் பின்புறம் அதன் பக்கவாட்டில் எலும்பை ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும். முள்ளெலும்பு நழுவல் எலும்பு அழுத்தத்தாலும் ஏற்படும். இந்நிலை பொதுவாக ஆண்களுக்கே 4-20 வயது வரை ஏற்படுகிறது. இந்நோயுற்றோரை 30 வயது வரை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். வலி தொடர்ந்த நிலையில் எலும்பு இணைப்பு அறுவை செய்ய வேண்டும். வடம் மூட்டு நழுவல் எலும்பு அழற்சியாலும் ஏற்பட லாம். அப்போது நரம்பு நெருக்கம் ஏற்படுவதால் கீழ் முதுகு வலி ஏற்படும். இந்நிலையில் முதுகுக்கு விறைப்பான பெல்ட் அணிதல் போதுமானது. கீழ் முதுகு வலி, தண்டுவட வாய்க்கால் நெருக்கத்திலும் (spinal stenosis) ஏற்படும். இந்நெருக்கம் தண்டு முழுதுமாகவோ ஒரு பகுதியிலோ ஒரு குறிப் பிட்ட இடத்திலேயோ ஏற்படும். இது பிறவியிலே பெறப்பட்டதாக இருக்கும். இந்நெருக்கத்தின் போது உடற்பயிற்சி செய்தால் உடல் தளர்வுற்றுக் காணப் படும். முள்ளெலும்பு பின்புறம் வளையும் போதும் மாடிப்படி, மலை ஏற்றம் முதலியவற்றின் போதும் வலி மிகுதியாக இருக்கும். படுத்த படுக்கையில் குறையும். தண்டுவட நோயாளி இருப்பின் வலி நெருக்கம் பிறவியில் உடல் வளர்ச்சி குறைந்த நிலை, முதுகெலும்பு அகற்றல், அடிபடுதல், புளுரோசிஸ் பேஜட் நோய் போன்ற நிலைகளில் ஏற்படும். கால் போக்க தண்டுவட உறையில் ஒன்றான அரக்கநாய்டு உறையில் அழற்சி ஏற்பட முதுகு வலியும். வலியும் சேர்ந்து வரும். தண்டுவட வரைபடத்தில் அரக்கநாய்டு உறை அழற்சி உள்ள பகுதி தடித்துக் காணப்படும். வலியை முழுதும் போதிய மருத்துவம் இல்லை என்றாலும் ஓய்வு. வலிபோக்கி மருந்து, கீழ் முதுகு விறைப்பாக்கும் மருத்துவம் முதலியவை வலியை ஓரளவு குறைக்கும். முதுகின் நடுவில் பலத்த அடிபடும்போதோ. உயரமான இடத்தில் இருந்து கீழே குதிக்கும்போதோ கீழ் முதுகெலும்புகள் நசுங்கியோ, ஒடிந்தோ போனால் கீழ் முதுகு வலி ஏற்படும். எலும்புச் சீழ். எலும்பு அழற்சி, காசநோய், கிரந்தி, பூஞ்சணம் போன்ற நோய்களாலும் கீழ் முதுகு வலி ஏற்படும்.