பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/805

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்‌ முன்னிலையசைவு 785

அடி ஆய்வுகள். நோய்களைப் பிரித்தறியப் புரதம், கால்சியம், பாஸ்ஃபரஸ், இரத்தச் சிவப்பணு படிதல் போன்ற இரத்த ஆய்வுகள் உதவும். இடுப்பு எக்ஸ் கதிர்ப் படம் எடுத்தால் முள்ளெலும்பு அமைப்பு. அழற்சி, முள்ளெலும்பு இடைத்தட்டு அளவு, முதுகெலும்பு, திரிக எலும்பு இணைப்புப் போன்ற வற்றை அறிய முடியும்; இவற்றைத் தவிர எக்ஸ் கதிர் உள்தளப்படம் மூலம் தண்டுவட நெருக்கத்தை அறிய முடியும். தண்டுவட வரைபடம் மூலம் தண்டுவடக் கட்டி முள்ளெலும்பு இடைத்தட்டுப் த்தட்டுப் பிதுக்கம், தண்டுவட நெருக்கம் முதலியவற்றை அறியலாம். மின் தசை வரைபடம் மூலம் நோய் வெளிப்படை யாகத் தெரியும் முன்னரே கெண்டைக்கால் தசையின் நரம்புப் பாதிப்பை அறிந்து கொள்ளலாம். முள்ளெலும்பு இடைத்தட்டு வரைபடம் மூலம் இடைத்தட்டுப் பிதுக்கத்தை அறிந்து கொண்டு அதன் மேல் பகுதி முள்ளெலும்பு இணைப்பையும் அறிய முடியும். சிரை நாள வரைபடம் மூலம் பக்க வாட்டு முள்ளெலும்பு இடைத்தட்டுப் பிதுக்கத்தை அறிய முடியும். கீழ் முன்னிலையசைவு சு.நரேந்திரன் உயர் தாவரங்கள் பாதுவாக இடம் விட்டு இடம் பெயர்வதில்லை. ஆனால் அவற்றின் உறுப்புகளான பகுதிகள் வேர்,தண்டு, இலை, மலரின் அசைவுகளை வெளிப்படுத்தும். இவ்வசைவுகளைத் தூண்டப்பட்ட அசைவு (இவ்வகை அசைவுக் குரிய காரணி தாவரங்களுக்குப் புறத்தே அமைந் திருக்கும்). தன்னிச்சையசைவு (spontaneous move. ment) என வகைப்படுத்தியுள்ளனர். ஆட்டோனமஸ் (autonomouS) அசைவு என்றும் பெயருண்டு. இதற்குக் காரணமான தூண்டுதல் தாவரத்தினுள்ளே அமைந்திருக்கும். தூண்டப்பட்ட அசைவை மேலும் மூன்றாகப் பிரித்துள்ளனர். அவற்றில் ஒன்று முன்னிலையசைவு என்பதாகும். இதற்கு நாஸ்ட்டிக் அசைவு என்பது கலைப் பெய ராகும். இங்கு உறுப்புகளின் அசைவுக்கும், அசைவுக்கு காரணமாகத் தூண்டுதல் அமைந்துள்ள திசைக்கும் தொடர்பில்லை. தூண்டுதல் எத்திசையிலிருந்து வந்தபோதும் தாவரப்பகுதியில் அசைவு தோன்றும். முன்னிலையசைவின் தூண்டுதல் பரவுதலால் . நிலை ஏற்படும். அசைவின் திசை என்பது அந்தப் பகுதியின் அமைப்பைப் பொறுத்ததேயன்றி, தூண்டுதல் அமைந்துள்ள திசையைப் பொறுத்தது அன்று. முன்னிலையசைவு நிகழும் உறுப்புகள் எப் போதும் தட்டையாக மேல் - கீழ்ப் பரப்புகளைக் க.8-50 கீழ் முன்னிலையசைவு 785 கொண்டிருக்கும். அதாவது மேலிருந்து கீழ் அல்லது கீழிருந்து மேல் என ஒரே போக்கில் நடைபெறும். பொதுவாகத் தாவரங்களில் பக்கக் கிளைகள், பக்க வேர்கள், இலைகள் முதலியவற்றில் மலரிதழ்களின் முன்னிலை அசைவைக் காணலாம். இவ்வசைவுக்கு இருகாரணங்கள் உண்டு. 1. தாவரப்பகுதிகளின் மேற் பரப்பு, கீழ்ப்பரப்புகளின் வேறுபட்ட வளர்ச்சியால் அசைவு ஏற்படும். மிகு வளர்ச்சி கீழ்ப்பரப்பில் ஏற் பட்டால் உறுப்பு மேல்நோக்கி வளையும். இதைக் கீழ் முள்ளிலையசைவு (hyponasty) என்பர். அதற்கு மாறாக உறுப்புகளின் மேற்பரப்பில் மிகை வளர்ச்சி ஏற்பட்டால் உறுப்பு, கீழ்நோக்கி வளையும். இதை மேல்நிலை முன்னிலையசைவு (epinasty) என்பர். 2. தாவர உறுப்பின் மேற்பரப்பு அல்லது கீழ்ப்பரப்பிலுள்ள திசுக்களின் சாறு அழுத்தம் வேறுபடுவதாலும் அசைவு நடைபெறுவதுண்டு. O இத்தகைய அசைவுக்கான தூண்டுதல் புறத்தே அமைந்திருக்கும். ஒளியால் தூண்டப்பட்ட முன் னிலையசைவை ஒளிமுன்னிலையசைவு (photonostic ) என்பர். ஆக்ஸாலிஸ் போர்டுலாகா பூக்களும், சூரியகாந்தி மஞ்சரியும் பகல் வேளையில் திறந்து இரவில் மூடிக்கொள்கின்றன. ஈனோத்தீரா, புகை யிலை போன்றவற்றின் மலர்கள் இரவில் திறந்து பகலில் மூடிக்கொள்கின்றன. இவற்றை ஒளி முன் னிலையசைவுக்குச் சான்றாகக் கொள்ளலாம். குங்குமப்பூ. டுயூலிப் போன்றவற்றின் மலர்கள் சூழ்நிலையின் வெப்பக் குறைவால் மூடிக்கொள்ளும். இதற்கு வெப்ப முன்னிலையசைவு (thermonasty) என்று பெயர். உயர் தாவரங்களில் குறிப்பாக மரங்களின் பக்கக் கிளைகளை மேல்நோக்கி வளையச் செய்யக் கீழ் முன்னிலையசைவே காரணமாகும். இலைக் காம்பில் ஏற்படும் கீழ் முன்னிலையசைவால் லை மேற்புற மாகச் சுருள்கிறது. பூவின் புல்லிகள் உட்புறமாக வளைந்து பிற பகுதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க, கீழ் முன்னிலையசைவே காரணமாகும். ஊசியிலை மரங்களின் பக்கக் கிளைகளில் தோன்றும் குறுக்கு வளர்ச்சி ஒரே மாதிரியாகக் காணப்படுவதில்லை. இங்குக்கீழ் முன்னிலையசைவின் காரணமாகக் கீழ்ப் பக்கம் உண்டாகும் சைலம் செல்களின் அமைப்பு வேறுபட்டுக் காணப்படும். திசுவியலார் இக் கட்டையை அழுத்தக் கட்டை (compression wood) என்பர். இம்முன்னிலையசைவுகளுக்கு வெளித் தூண்டுதல் காரணம் என்று கருதினாலும், அண்மை ஆய்வுகள் தாவரத்தில் உள்ள ஆக்ஸிஜன், எத்திலீன் போன்ற வளர்வூக்கிகளே காரணம் என்பதைத் தெளிவாக்கு கின்றன. எனவே இதை உள்தூண்டுதல் அல்லது தன்னிச்சை அசைவு என்றும் கருதலாம். கோ.கோபாலன்