பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/807

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீற்றணி, விளிம்பு விளைவு 787

இதையே ஆறியபிறகு குடித்துவர உடல் வலிமை பெறும். இது பசியைத் தூண்டும். இதன் இலை, வேர் முதலியவற்றை அரைத்து மோரில் கலக்கிக் கொடுத்துவரின் மஞ்சட்காமாலை, மேகநோய் போகும். உப்பு நீங்கும். இதன் இலையும், வேரும் நீங்கலாக மற்றத் தண்டுகளை எடுத்துச் சாறு பிழிந்து விளக்கெண்ணெயில் கலந்து கண்காச நோயுடையோர்க்குக் கண்ணில் விடலாம். இதன் வேரைக் கழுநீரில் அரைத்துக் கலக்கிப் பெரும் பாட்டிற்குக் கொடுக்கலாம். வேரைப் பச்சையாக 17.5 கிராம் எடுத்துப் பாலில் கலக்கிக் கொடுக்க, காமாலை நோய் நீங்கும். இதன் வேர்-3.5 கிராம், கடுக்காய்த் தோல் 7 கிராம். மிளகு 10.5 கிராம் புளித்த மோரில் அரைத்துக் கலக்கி மூன்று நாள் வார்க்க குழந்தை மீண்டும் சாம்பல், மண் இவற்றைத் தின்னாது. கீழாநெல்லிச் சமூலத்தைப் பாலில் அரைத்துப் பாலில் கலக்கி உண்டு வந்தால் சோகை, காமாலை, பாண்டு, உடல் வெளுப்பு, வாதபித்தம் இவை தீரும். இரத்தம் பெருகும், கண் குளிரும். கீழாநெல்லிச்சாறு, கிலுகிலுப்பைச்சாறு, தேன், தாய்ப்பால் வகைக்கு 17.5 கிராம் வெள்ளுள்ளி, காந்தம், சுக்கு வகைக்கு 3.5 கிராம் இவற்றை அரைத்து ஒன்றாகக் கலந்து கொடுக்கப் புறவீச்சுத் தீரும். கீழாநெல்லிச் சமூலம் 1 பிடி, சீரகம் 3.5 கிராம் ஆகியவற்றை அரைத்து எருமைத் தயிரில் கலக்கி 3 நாள் கொடுக்க இரத்தம் போல நீர் இறங்குவது தீரும். கீழாநெல்லி 3 பங்கும். ஈருள்ளி 1 பங்கும் சேர்த்திடித்துச் சாறு பிழிந்து 500 மி.லிட்டர் வீதம் 3 நாள் கொடுக்கப் பித்தச்சோகை. வீக்கம் நீங்கும். சே. பிரேமா கோ. அர்ச்சுணன் - நூலோதி. சிறுமணவூர் முனிசாமி முதலியார். மூலிகை மர்மம், பிராக்ரஸிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1930. கீற்றணி, விளிம்பு விளைவு குறுகிய நெருக்கமான ஒளிபுகும் கீற்றுகளையுடை யதும் அதில் படும் ஒளியை விளிம்புவிளைவுக் (diffrac- tion) கற்றைகளாக்கி அக்கற்றைகளின் குறுக்கீட்டால் நிறமாலையைத் தோற்றுவிக்கக்கூடியதுமான ஓர் ஒளியியல் கருவி கீற்றணி (grating) ஆகும். இதில் ஆக்கக் குறுக்கீட்டுப்பாங்கம் ஏற்படும் திசை, விளிம்பு விளைவுக்கு உட்படும் அலைகளின் நீளத்தைப்பொறுத் தது. ஆகையால், படுகற்றையிலுள்ள வெவ்வேறு அலைநீள ஒளிக்கூறுகள் பலநிலை நிறமாலைகளாக நேர்சுற்றையின் இருபுறத்திலும் தோன்றும். கீற்ற அ.க.8-50 அ கீற்றணி, விளிம்பு விளைவு 787 ணியை வடிவமைக்கும்போது விளிம்பு விளைவு ஏற் படுத்தும் கீற்றுகளின் அளவு வடிவம் ஆகியவற்றைச் சீரமைப்பதாலும், படுகதிரைத் தக்க திசையில் விழச் செய்வதாலும் ஒரே நிறமாலையை மட்டும் ஏற் படுமாறு செய்யலாம். இவ்வாறு செய்து பெறுகிற நிறமாலையின் நிறமாலைத் தூய்மையும் பொலிவும் (brightness) முப்பட்டக நிறமாலையை விஞ்சி யிருக்கும். கீற்றணிகளில் முப்பட்டகங்களைவிட அகலமான படுகற்றையை அனுமதிக்க முடிவதால் வீணாகும் ஒளி குறைந்து, உள்ளார்ந்த நிறப்பிரிகை யும் (dispersion) மிகுந்த பிரிதிறனும் (reso- Aving power) ஏற்படுகின்றன. தனி ஒரு முப்பட்ட சுத்தின் நிறமாலை நெடுக்கத்தைவிடக் கீற்றணி நிற மாலையின் நெடுக்கம் மிகுதி. கீற்றணியின் நிறப் பிரிகை பல்வேறு அலைநீளங்களுக்குச் சீரானதாகவே இருக்கும். பெரும் நிறமாலை வரைவிகளில் கீற்றணி கள் துல்லிய அளவீடுகளுக்காகவும், பகுப்பாய்வு களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒளி கடத்தும் கீற்றணிகளில் (transmission gratings) குறுகிய ஒளிபுகும் கீற்றுகளும் ஒளிபுகா மறைப்புகளும் அடுத்தடுத்துச் சீரான இடைவெளி களில் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கும். இதில் படும் ஒளிக்கற்றை, பலநிலைக் குறுக்கீட்டு விளைவுக் குட்படுவதால் நிறமாலை வரிசைகள் தோன்று கின்றன. இவ்வகைக் கீற்றணிகள் எளிய நிறமாலைக் காட்டிகளிலும், நிறமாலை அளவிகளிலும் பெரும் பான்மையாகப் பயன்படுகின்றன. இவை புறஊதா, அகச்சிவப்புக் கதிர்வீச்சுகளைக்கடத்தும் திறமற்றவை யாதலால் கட்புலன் ஒளிப்பகுதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கோடு இடும் எந்திரங் களால் சீராகக் கோடுகள் கீறப்பட்ட முதன்மைக் கீற்றணிகள் தொடு வார்ப்பட முறையில் (contact moulding) தயாரிக்கப்படுகின்றன. சமதள மீட்சிக் கீற்றணி (plane reflection grating) குழித்தள மீட்சிக் கீற்றணி (concave reflection gra- ting) ஆகியனவும் பெரும்பாண்மை நிறமாலைவரைவி களில் பயன்படுத்தப்படுகின்றன. இவை கோடிடப் பட்ட முதன்மை வகையாகவோ முதன்மைக் கீற்றணி யிலிருந்து தயாரிக்கப்பட்ட உலோகப் பூச்சுடைய போலியாகவோ இருக்கும். இப்போலிகள் செயற் பாட்டிலும் உறுதியிலும் முதன்மைக் கீற்றணிக்கு ஒப்புடையனவாகவே உள்ளன. கீற்றணித் தயாரிப்பு. பளபளப்பாக்கப்பட்ட ஆடித் தளத்தில் கூரிய வைர ஊசியைக் கொண்டு துல்லிய மாகவும் சீராகவும் கோடிடக்கூடிய எந்திரத்தால் ஆழமில்லாத கீற்றுகளை உண்டாக்கி, கீற்றணி தயாரிக்கப்படுகிறது. 150nm 1000nm வரையுள்ள அலைநீளங்களை அளக்க மீட்டருக்கு 200000 1200000 கீற்றுகள் வரை கீறப்படுவதுண்டு. வெற்றிட ஆவியாக்கல் மூலம் கண்ணாடிப்பரப்பில் பதிக்கப் பட்ட அலுமினிய மென்படலத்தின் மீது கீற்றுகள்