788 கீற்றணி, விளிம்பு விளைவு
788 கீற்றணி, விளிம்பு விளைவு வரையப்படுகின்றன. அகச்சிவப்பு நிறமாலைக்கான கீற்றணிகள் தங்கம், வெள்ளி, செம்பு, காரியம், வெள்ளீயம் ஆகியவற்றுள் ஒன்றாலான ஆடியில் செய்யப்படுகின்றன. கீற்றணிகள் சரியான பிரிதிறனுடன் செயற்பட வேண்டுமாயின் அவற்றின் கீற்றுகள் நேரானவையாக வும், இணையானவையாகவும் சம இடைவெளியில் அமைந்தனவாகவும் இருத்தல் வேண்டும். இடை வெளிகள் அளக்கப்படும் அலைநீளத்தில் பத்தில் ஒரு கூறாதல் வேண்டும். சீற்றணி இடைவெளியில் உள்ள பிழையும் கீற்றுகளின் வடிவப்பிழையும் விளிம்பு விளைவுக்கு உட்படும் ஒளியின் அலைநீளத்தில் நூறில் ஒரு கூறேயாயினும் இவற்றால் ஒளிச்சிதறலும் தவறான உருத்தோற்றங்களும் தோன்றும். மாய் கீற்று அமைப்பில் சம தொலைவுகளில் தொடர்ந்து ஏற்படும் குறைபாட்டால் நிறமாலையில் ஏற்படும் பிழை ரௌலண்டு மாய உருத்தோற்றம் என்றும், சம தொலைவுகளில் பிழை உடைய கீற்று களின் கூட்டுறவால் ஏற்படும் பிழை லைமன் உருத்தோற்றம் என்றும், ஒழுங்கற்ற கீற்றுகளால் துணைவரிகள் தோன்றுகின்றன என்றும் கூறப்படும். இப்பிழைகள் கீற்றணியின் பிரிதிறனைப் பெரிதும் பாதிக்கும். வெவ்வேறு கீற்றுகளிலிருந்து வெளிப்படும் ஒளி அளவு சமமில்லாததால் இலக்குப்பாங்கம் (target pattern) என்னும் குறைபாடு தோன்றுகிறது. இக்குறைபாடு (கீறும் வைர ஊசி திசைமாறுவதால்) கீற்றுகளின் வடிவ வேறுபாட்டால் ஏற்பட்டுக் குழிவுக் கீற்றணிகளுக்குட்படும். கீற்றணிகளில் கீற்றுகள் உள்ள அகவம் 50மி.மீ. 100 மி.மீ, 150 மி.மீ அளவுகளில் பொதுவாகக் கிடைக்கும். இவற்றிலிருந்து கிடைக்கும் நிறமாலை யின் வீழ்ச்சித்தொலைவு 0.5மீ-4.5மீ வரையில் இருக்கும்.பகுப்பாய்வுக்கான பெருங்கருவிகளில்பயன் படுத்தப்படும் கீற்றணிகளில் கீற்றுகள் உள்ள அகலம் 150-250 மி.மீ. வரையிருக்கும். நிறமாலை வீழ்ச்சித்தொலைவு வரை இருக்கும். தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பெரிய கீற்றணி 3-15மீ களின் பிரிதிறன் 4 பச்சை நிறப்பகுதியில் 0.9 . 10" க்கு மிகுதியாகவும், குற்றலைப்பகுதிகளில் 1.5X 108 க்கு மிகுதியாகவும் உள்ளன. இக்கீற்றணிகளின் பிரிதிறன் பெரும்பான்மையான குறுக்கீட்டு அளவி களின் பிரிதிறனுக்கு இணையாக உள்ளது. மேலும் இவை விரைந்து படமெடுக்க வசதியானவையாகவும், எனிதாகச் சீரமைக்கக்கூடியனவாகவும், எளிய கணக் கீடுகளைக் கொண்டனவாகவும், நிறப்பிரிகைக் குறுக் கீடு இல்லாமல் அதிக நெடுக்க அலைநீளங்களை ஒருங்கே படமாக்கத் தக்கனவாகவும் க உள்ளன. கீற்றணியின் பண்புகள். & கோணத்தில் கீற்றணி ஒளியூட்டப்படும்போது அலைநீளமுள்ள ஒளியை m = d (sina +sing) என்னும் சமன்பாட்டுக்குட் பட்டு நீ கோணத்தில் திருப்பும். இச்சமன்பாட்டில் m என்பது நிறமாலை வரிசை எண் (order of spectrum); d என்பது கீற்றணி மாறிலி: அதாவது கீற்றணியில் அடுத்தடுத்த கீற்றுகளுக்கிடையேயுள்ள தொலைவு ஆகும். நேர். எதிர்க் குறிகள் செங்குத்துத்திசைக்கு இடப்புற வலப்புற நிறமாலை வரிசைகளைக் குறிக் கின்றன. கீற்றணியால் ஒளிப்படத்தட்டில் விழும் பிரிகை நிறமாலையின் நேர்கோட்டுப் (linear dispersion) நிறப்பிரிகைக் கோணத்தைக் கீற்றணியி லிருந்து படத்தட்டு வரை தொலைவால் பெருக்கக் கிடைக்கும். கோண நிறப்பிரிகை ds da = 1 (sina/cos +tan 8). கணக்கீட்டின்படி கீற்றணியின் பிரிதிறன் MN ஆகும். இதில் N என்பது கீற்றணியில் உள்ள மொத்தக் கீற்றுகளின் எண்ணிக்கை ஆகும். M, N ஆகியவை ஒன்றுக்கொன்று எதிர் விகிதத் தொடர்புடையன என்பதால் கீற்றணியின் பிரிதிறன் கீற்று எண்ணிக் கையை நேரடியாகச் சார்ந்திருப்பதில்லை. கீற்ற ணியில் இருந்து வெளியேறும் கற்றையின் இரு ஓரக்கதிர்களுக்கிடையே ஏற்படும். பாதை வேறு பாடு அலைநீள எண்ணிக்கையைச் சார்ந்துள்ளது. பிரிதிறன் போலவே பிரிப்பு வரம்பு (resolving limit) என்னும் அளவும் கீற்றணியின் நுட்பத்தை அளவிடக்கூடியதாகும். கீற்றணியால் பிரித்தறியக் கூடிய மிகச்சிறிய அலைவெண் வேறுபாடே பிரிப்பு வரம்பு எனப்படும். இம்மதிப்பு மிகக்குறைந்த அலை நீளங்களைத் தவிர ஏனைய அலை நீளங்க களுக்கும், கொடுக்கப்பட்ட படுகோணத்தில் மாறா மதிப்பு உடையதாக இருக்கும். படுகற்றையில் உள்ள ஒளி கீற்றணியில் பெறப் படும் வெவ்வேறு நிறமாலைகளில் பகிர்ந்தளிக்கப் படுவது கீற்றுகளின் ஓரங்கள் (sides of groves) உள்ள வடிவத்தையும் இடத்தையும் அமைப்பையும் கீற்றிடைவெளிக்கும் அலைநீளத்துக்குமுள்ள தொடர் பையும் பொறுத்ததாகும். d à என்றானால் கீற்றுகளின் ஓரங்களில் ஏற்படும் ஒளி மீட்சியே ஒளிப்பகிர்வைக் கட்டுப்படுத்துகிறது. கீற்று களின் ஓரங்கள் படும் ஒளியில் பெரும்பான்மையை மீட்சியுறச் செய்யுமாறு அமைப்பதால் கீற்றணியை மிகுதியாக ஒளிரச் செய்யலாம்.ஈஷலட். ஈஷல் கீற்றணிகளில் கீற்றுகளின் வடிவம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் படுகற்றையின் ஒளியில் 80%ஐ ஒரு குறிப்பிட்ட நிறமாலையில் ஒரு குறிப்பிட்ட அலைநீள சுடர்வீசச் செய்யலாம். ஒளியில் சாதாரண சுடர்வீசுமாறு கீற்றணிகள் சேர்ந்து • அமைக்கப்படுகின்றன. பல் கீற்றணி நிறமாலைக் காட்டிகள். இவை பொதுவாக ஓர் ஒளிபுகும் பிளப்பு (slit), அதினின்று வரும்