கீற்றணி, விளிம்பு விளைவு 789
ஒளியை இணைக்கற்றையாக்க ஒரு வில்லை அல்லது ஆடி, நிறப்பிரிகை ஏற்படுத்துவதற்கான கடத்து அல்லது மீட்சிக்கீற்றணி, நிறமாலையைக் குவிக்க ஒரு வில்லை அல்லது ஆடி, பார்ப்பதற்கு ஒரு கண்ணருகுவில்லை ஆகியவற்றை உறுப்புகளாகப் பெற்றிருக்கும். தொலைநோக்கிக்கு ஈடாக ஓர் ஒளிப் படக்கருவி பொருத்தப்படுமானால் இக்கருவி ஒரு நிறமாலை வரைவி (spectrograph) ஆகும். தொலைநோக்கி அல்லது ஒளிப்படக்கருவிக்கு ஈடாக ஓர் ஒளிமின்கலமோ, ஒரு வெப்பமின்னிரட்டையோ, வேறு ஏதேனும் ஒரு கதிர்வீச்சு அறியும் பொறியோ வைக்கப்படின் அது நிறமாலை அளவி (spectrometer) ஆகும். ஈஷலட் கீற்றணி. இக்கீற்றணி அகச்சிவப்பு நிற மாலைக்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் கீற்றுகளின் வடிவம், அளவு ஆகியவற்றின் மொத்தக் கதிர்வீச்சு ஒரு குறுகிய கோண இடைவெளிக்குள் செறிந்திருக்குமாறு அமைக்கப்படுகிறது. கீற்றணி செய்யும்போது பயன்படுத்தப்படும் வைரஊசி ஏறத் பக்கங்கள் உடைய வைர பட்டையான தாழ ஊசியைக் கொண்டு கீற்றுகள் இடுவதாலும் விளிம்பு விளைவைச் சிறுமமாக்கத் தக்க கீற்றிடைவெளியைத் தீேர்வதாலும் ஒரு குறிப்பிட்ட அலைநீளமுடைய கதிர்வீச்சை ஒரு குறிப்பிட்ட நிறமாலை வரிசையில் செறிவுறச் செய்யலாம். ஈவூல் கீற்றணி. மேல்நிலைக் குறுக்கீட்டைப் பயன் படுத்தி மிகுந்த நிறப்பிரிகையையும் பிரிதிறனையும் பெறுவதற்குப் படுகோணம் 45°க்கும் மேலாக இருக் கும்படி வடிவமைக்கப்பட்டவையே ஈஷல் கீற்றணிகள். ஈஷல் கீற்றணிகளின் பண்புகள் சாதாரண சமதளக் கீற்றணி, ஏறுபடியணி ஒளிமீட்சிக் குறுக்கீட்டு அளவி கீற்றணி, விளிம்பு விளைவு 789 ஆகியவற்றின் பண்புகளுக்கு இடைப்பட்டனவாகும். குறுக்கீட்டு வரிசையெண் 100--1000 வரை பயன் படுகிறது. நிறப்பிரிகைத் தடுப்பு மூலம் ஒன்றன் மீதொன்று படியும் நிறமாலைகள் (overlapping spectra) பிரிக்கப்படுகின்றன. குழிவு கீற்றணிகள். இது மிகுதியும் புழக்கத்தி லுள்ள மீட்சிக் கீற்றணியாகும். இதைக் கொண்டு அமைக்கப்படும் நிறமாலை வரைவிகளில்பிளப்பு, ஒளிப் படக்கருவி நீங்கலாகப் பிறதுணைக்கருவிகள் தேவைப் படுவதில்லை. இக்கீற்றணி குழியாடியில் கோடுகள் கீறி அமைக்கப்பட்டிருப்பதால் படுகற்றையை இணை யாக்கவும் விடுகற்றையைக் குவிக்கவும் திறன் வாய்ந்ததாக உள்ளது. கோளகக் குழியாடி அல்லது குழியாடியில் நாணுக்கு இணையாக நேர்கோடுகள் சமச்சீராகக் கீறப்பட்டுள்ளன. ஒரு பிளப்பு வழியே இக்கீற்றணியில் படும் ஒளிக்கற்றை நிறப்பிரிகையுற்று ரௌலண்ட் வட்டத்தில் குவியும். கீற்றணி மையத்தில் தொட்டுக் கொண்டும் குழிவு கீற்றணியின் வளைவாரத்தை விட்டமாகக்கொண்டும் உள்ள வட்டம் ரௌலண்ட் வட்டமாகும். பரவளையக் குழிவு கீற்றணியில் ஒளிவிலகலுக்கு உட்படா மல் நிறப்பிரிகை ஏற்படுவதால் இதைப் புறஊதர், கட்புலனொளி, அகச்சிவப்பு ஆகிய மூன்று பகுதி களிலும் கீற்றுகள் விளிம்புவிளைவு ஏற்படுத்தும் எல்லை வரை பயன்படுத்தலாம். ஆனால் இதில் உருட்சிப்பிழை தவிர்க்க இயலாததாகும். எனினும் அவற்றிற்கான துணைக்கருவிகளைக் கொண்டு உருட்சிப்பிழையைக் குறைக்கலாம். இரு குழி ஆடி களுடன் இணைந்த சமதளமீட்சிக்கீற்றணி இவ் விடர்ப்பாடுகளைக் களைகிறது. . பிளப்பு வில்லை? கீற்றணி படம் 1. ஒளிகடத்தும் கீற்றணி நிறமாலைகாட்டி கண்ணருகு வில்லை.