பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்று ஈன முடியாமை 61

கூட்டத்துக் கறையான்களையும் காப்பாற்றுகின்றன இவற்றிற்கு நாசூட் எனப்பெயர். இந்த நால்வகைப் பிரிவுகளைத் தவிர, குட்டை யான இறக்கைகளைப் பெற்றுள்ள ஆண், பெண் கறையான்களும் உண்டு. இப்பெண் கறையான்கள் கறையான் அரசி போல முட்டையிடும் தன்மையன. தீடீரென்று கறையான் அரசி இறந்து விட்டால் இவை முட்டைகளிட்டு இனப்பெருக்கம் செய்யும். சில கறை யான் புற்றுகளில் இறக்கைகள் வளராத ஆண், பெண் பூச்சிகளும் காணப்படும். கறையான்கள் தரைக் கடியிலுள்ள வளைகளிலும், தரையிலிருந்து 30.அடி வரை உயரமுடைய புற்றுகளிலும் வாழ்கின்றன. சில கறையான்கள் புற்றினுள் பூஞ்சையைப் (fungus) பயிரிட்டு இளவுயிரிகளுக்கு ஊட்டமிக்க உணவாக அளிக்கின்றன. பெண் கறையான்புற்று வேலைக்காரக் கறையான் ஆண் . கன்று ஈன முடியாமை 61 கறையான்கள் உரித்த தோல், கழிவுப்பொருள்கள் முதலியவற்றை உண்டு வாழ்கின்றன. கறையான் களின் குடலி லுள்ள ஒற்றைச் செல் உயிரிகள் செல்லுலோஸை எளிதில் செரிக்கச் செய்கின்றன. உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் பெண் கறையான்களின் வயிற்றுப் பின் பகுதியில் சுரக்கும் நீர்மத்தை நக்கியும் சில பூச்சிகளின் வாயி லிருந்து சிந்தும் உமிழ்நீரை உண்டும் கறையான்கள் வாழ்கின்றன. கரும்பு, கடவை, கோதுமை; பருத்தி, தென்னை போன்ற பயிர்களுக்கும் கறையான்கள் பேரழிவை விளைவிக்கின்றன. மேலும் நெல், காலிஃபிளவர், முட்டைகோஸ், பட்டாணி போன்ற வகைகளுக்கும் அழிவை ஏற்படுத்துகின்றன, கறையான் கட்டுப்பாடு. பயிர்களில் கறையான் பாதிப்பைக் கட்டுப்படுத்த விதைக்கு முன் அல்டரின் பவுடர் 5%.ஹெப்டக்ளோர் 5% மாவுடன் கலந்து ஒரு ஹெக்டேருக்கு 25 கி.கி என மண்ணில் கலக்க வேண்டும். கரும்பு நட்டுச் சுற்றியுள்ள பள்ளங்களில் குளோர்டேன் 1.25 கி.கி இட்டுக் கறையான்களிட மிருந்து காப்பாற்ற முடியும். வீடுகளில் பயன்படுத்தும் மரப்பொருள்களைக் (நிலைச் சட்டம், சன்னல் சட்டம்) கட்டட அடி மட்டத்திலிருந்து கற்காரை அல்லது இரும்பால் பிரிப் பதன் மூலம் கறையான்களின் தாக்கத்திலிருந்து பாது காக்கலாம். NOW கு.சம்பத் நூலோதி. E.O. Essig, College Entomology, Satish Book Enterprise. Moti Katra, Agra, 1982; K.K. Nayar, T.N. Ananthakrishnan and B.V. David General and Applied Entomology. Tata Mc Graw-Hill Publishing Company Ltd, New Delhi, 1983. படம் 3. கறையான் புற்று கறையான்கள் பொதுவாக மரம், கம்பளி, துணி, தாள், சருகு, இறந்த உயிரிகளின் உடல், பிற பிரிவுக் கன்று ஈன முடியாமை தாய்ப் பசு அல்லது எருமை கருத்தரித்து நிறை சினைப் பருவம் அடைந்து கன்றை ஈனும் தருணம் வரும்போது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டியும் கன்று ஈன இயலாத நிலையோ, மிகவும் கடினத்துடன் செயற்கை முறைகள் தேவைப்படும் நிலையோ காணப்பட்டால் அந்நிலை கன்று ஈன முடியாமை (dystocia) எனப்படும். இந்நிலை அனைத்துப் பாலூட்டிகளிடமும் காணப்படுகிற கன்று ஈன முடியாமை எனும் நிலை குறி* கறவை இனங்களில் முதன் முதலில் சினை