கு குக்குலி ஃபார்மிஸ் இது பறவைகள் வரிசையில் குக்கூஸ் (குடியேறு குயிலினம்) (Cuculidae), டுராகஸ் (Turacos) எனும் இரு தனிப்பட்ட குடும்பத்தைக்கொண்டது. அண்ட் டார்க்டிக்கா மற்றும் சில கடல் தீவுகளைத் தவிர உலக முழுதும் ஏறக்குறைய 127 குக்கூஸ் குயிலினம் காணப்படுகிறது. இருபது மிசோஃபெஜிட் இனம் ஃபிரிக்க க மித வெப்ப மண்டலத்தில் மட்டும் காணப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி மரங்களில் வசிப்பவை, தென் மேற்கு ஐக்கிய நாடு களின் நிலத்தில் வசிப்பவை, மெக்ஸிகோ ஆஃபிரிக்க ஆஸ்திரேலிய நிலப்பகுதியில் வசிக்கும் கோகல்ஸ் (coucals) போன்றவை இதில் அடங்கும். காஆ மிகச்சிறிய மரகதம் போன்ற பச்சை நிறமுடைய குக்கூஸ் (Chrypococcyx) 15 செ.மீ. நீளமே உடையது. நிலத்தில் வாழும் குக்கூஸ் (Carpococcyx), கோகல்ஸ் ஆகியவை 3 அடி நீளம் உள்ளன. இந்த மெல்லிய உடலமைப்பைக் கொண்ட பறவைகள் நீண்ட அழகிய இறக்கைகளையும் மிக நீளமான வாலையும் உடையவை. இவற்றின் முள் போன்ற அலகு மெல்லிய தாகக் கீழ்நோக்கி வளைந்து காணப்படும். இருப் பினும் நிலத்தில் வாழும் குக்கூஸ் கோகல்ஸ் ஆகிய வற்றில் அலகு மிகவும் தடித்து வலிமை மிக்கதாக உள்ளது. உடையன. எனிஸ் (Anis crotophaga) எனும் வகையைச் சேர்ந்த பறவையின் அலகு தடித்தும் பக்கவாட்டில் இறுகியும் உள்ளது. நிலத்தில் திரியும் குக்கூஸ் தவிர ஏனையவை குள்ளமான அழகிய கால்களை அனைத்துக் குயிலினப் பறவைகளும் சைகோடாக்டைலஸ் (zygodactylus) கால்களின் வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளன. பெரும் பாலான இனங்கள் சாம்பல் மற்றும் பழுப்பு நிறமாகக் காணப்படுகின்றன. ஆனால் சிலவகைக் குயில்கள் ஒளி பொருந்திய பச்சை, ஊதா, மஞ்சள் நிறத்தில் பொலிவுடன் தோற்றமளிக்கின்றன. 1. குயில் (ஆண்பறவை) 2. தாமரைத் கோழி
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/813
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை