பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/815

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குக்குறுவான்‌ 795

முடையன. மார்ச்-மே மாதம் வரை இனப்பெருக்கத் தில் ஈடுபடுகின்றன. இந்தியக் குயில்கள் தவிர ஆசியக் குயில் வகை என்னும் ஒருவகைக் குயிலும் உண்டு. இவை இள வேனிற் காலத்தில் நீலகிரி மலைப்பகுதிக்கு வரும் பறவை இனமாகும். இவற்றிற்கு வலசை போகும் (migration) பழக்கமுண்டு. தலையில் கொண்டை இல்லை. கரிச்சான் குயில் (Indian Dranco cuckoo). இக் குயில் அளவிலும் தோற்றத்திலும் கரிச்சான்களைப் போன்றிருக்கும். வாலும் கரிச்சானைப் போல் பிளவு பட்டிருக்கும். இவை தென்னிந்திய மலைக் காடுகளில் காணப்படுகின்றன. அ.அரங்கநாதன் கு. சம்பத் . குக்குறுவான் 795 பழங்களோடு மலரிதழ்கள், மலரின் தேன், சில சிறு பூச்சிகள் ஆகியவற்றையும் உணவாகச் கொள்ளும். கோடைக் காலம் தொடங்கியவுடன் உரத்த குரலில் குட்ரூக்... குட்ரூக் என நாள் முழுதும் இடைவிடாது கத்தியவாறு மார்ச் முதல் ஜுன் முடிய உள்ள உளுத்துப் போன மரக்கிளைகளைக் குடைந்து கூடமைத்து மூன்று முட்டைகளிடும். கூடமைப்பதி லும் குஞ்சுகளைப் பேணுவதிலும் ஆணும் பெண்ணும் பங்கு பெறுகின்றன. இருக்கும். காலத்தில் குக்குறுவான் இது பிசிபார்மீஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. மரங்கொத்திகளைப் போல உறுதியான தடித்த அலகுகள் கொண்ட இதன் அலகடியிலிருந்து நீண்ட முள்மயிர் வளர்ந் திருக்கும். மரங்களைக் குடைந்து கூடமைத்து முட்டையிடும். இலைதழைகளுக்கிடையே மறைந்து திரிய உதவும் பச்சை நிற உடலையும், முகத்திலும் கழுத்திலும் உணவாகக் கொள்ளும் பழங்களின் சிவப்பு நிறத்தை ஒத்த திட்டுகளையும் இது கொண் டுள்ளது. வெப்ப மண்டலக் காடுகளைச் சார்ந்து லகெங்கும் காணப்படும் இவற்றுள் 72 இனங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் வை காணப்படுவ தில்லை. ஆஃப்ரிக்காவில் காணப்படும் குக்குறுவான் களில் சில தலைக் கொண்டையுடையவை. வரிசையில் கேபிட்டொனிடே பச்சைக் குக்குறுவான (Megalaima zeylanica). து உருவில் மைனாவைவிடச் சற்றுப் பெரியது. இதன் தலை, கழுத்து, மேல் முதுகு, முன் மார்பு ஆகியன வெள்ளைக் கோடுகளோடு கூடிய பழுப்பு நிறமாக இருக்கும். கீழ்மார்பும் வயிறும் வெளிர் பச்சை நிறமாகவும் வாலின் அடிப்பக்கம் நீலநிற மாகவும் இருக்கும். கண்களைச் சுற்றி அமைந்த ஆரஞ்சு நிறத்திட்டு, அலகின் அடிப்பகுதி வரை நீண்டு செல்லும். தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் உள்ள காடு களிலேயே இதைப் பெரும்பாலும் காணலாம். மைனா, பச்சைப் புறா, கொண்டைக்குருவி முதலிய பறவைகளுடன் சேர்ந்து மரக்கிளைகளில் உயரே இரை தேடிக் திரியும் இது ஆல், அத்தி முதலிய மரங்கள் பழுக்கும் சமயத்தில் ஒருங்கு திரண்டு பழங்களைத் தின்னும். சின்னப் பச்சைக் குக்குறுவான் (Megalaima viridis). உருவில் முன்னதைவிடச் சற்றுச் சிறியது. கன்னக் கதுப்பைச் சார்ந்து செல்லும் வெள்ளைக் கோட்டைக் கொண்டு எளிதில் முன்னதிலிருந்து இதை வேறுபடுத்தி அறியலாம். இதன் கண்களைச் சுற்றி உள்ள திட்டு ஆரஞ்சு நிறமாக இல்லாமல் கரும் பழுப்பாகவும் அளவில் சிறியதாகவும் இருக்கும். கிழக்கு, மேற்கு மலைத் தொடர்ச்சிகள் சார்ந்த காடுகளில் பசுமை மாறாக் காடுகளில் இதைக் காண லாம். அப்பகுதிகளை அடுத்த நகரின் பூங்காக்களிலும் ஊர்புறத்தோப்புகளிலும் திரிவதுண்டு. பழக்க வழக் கங்களும் இனப்பெருக்கமும் பச்சைக் குக்குறுவானை ஒத்திருக்கும்.