குகர்பிடேசி 797
ராக விளங்கினார். 1756-1763 இல் இங்கிலாந்துக் கும் பிரான்சுக்கும் போர் நடந்த காலத்தில் பிஸ்கே விரிகுடாவில் பிடிக்கப்பட்ட கப்பல் ஒன்றில் கியூபெக் (Quebec) நீருக்கடியில் நடத்திய தாக்குதலை வெற்றி கரமாக முறியடித்தார். 1766 இல் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி (Royal society) எனும் நிறுவனத்திற்குச் சூரிய கிர கணம் குறித்துக் கண்டறிந்த விவரங்களை அனுப்பி வைத்தார். இச்செயல் குக்கைத் திறமையுடையவராக உயர்த்தியது. 1768 இல் ராயல் சொசைட்டி கப்பல் துறையின் உதவியுடன் பசிபிக் கடலுக்கு முதல் அறிவியல் தொடர்புடைய இயக்கத்தை நிறுவியது. நாற்பது வயதேயான ஜேம்ஸ் குக் இவ்வியக்கத் துக்குத் தலைவராகப் பணியமர்த்தப்பட்டார். இவர் ராயல் சொசைட்டியில் பணிபுரியும் அலுவலர் களுக்கும், உதவியாளர்களுக்கும் தம் ஆணைகளை அனுப்பி வீனஸ் கிரகம் சூரியனைக் கடக்கும் தன்மை யைக் கவனித்து ஆராயச் செய்தார். 1769 ஜூன் 3 ஆம் நாளன்று இவ்வாராய்ச்சி முடிக்கப்பட்டது. இதன் விளைவாக இவர் டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் எனப்படும் தெற்குக் கண்டத்தைக் கண்டுபிடித்தார். இவர், தம் முதல் பயணத்தில் மாலுமி நூலையும் வட்டக்கோணக் கருவியையுமே எடுத்துச் சென்றார். இவர் கடினமான பயணம் மேற் கொண்டு 1770 ஏப்ரல் 19 ஆம் நாள் மேற்கு டால் மன் கடலின் குறுக்கே கடந்து ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்கு வந்தார். கிழக்குக் கடற் கரை வழியே 3500 கி.மீ. வடக்கே வெற்றிகரமாகக் கப்பலைச் செலுத்திக் குயின்ஸ்லாந்து (Queensland's) குகர்பிடேசி 797 பெருந்தடைப்பவழப்பாறைகளைக் (coral reef) கண்டு பிடித்தார். தம் கப்பலைக் குயின்ஸ்லாந்து அருகில் கடற்கரை ஓரத்தில் நிறுத்திப் பழுது பார்த்தார். மீண்டும் இங்கி லாந்துக்குப் பயணமானார். இவர் கப்பல்தலைவராகப் பதவி உயர்வு பெற்ற உடனேயே மற்றொரு கடல் பயணத்திற்கு ஏற்பாடு செய்தார். புகழ்பெற்ற கடல் அறிவியலாரின் பயன்மிக்க கண்டுபிடிப்புகள் இவரின் ஆர்வத்தைத் தூண்டின. இது புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமன்றி ரனைய அறிவியல் தொடர்பான பாடங்களிலும் புதிய அறிவை வளர்க்க உதவியது. இவரின் துணிவுமிக்க கடற்பயணத்தின் . போது அறிவியல் முறையில் தொகுக்கப்பட்ட பொருள்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். 1772-1775 இல் ஜேம்ஸ் குக் மீண்டும் விட்பி கப்பலுடன் மிகச்சிறந்த கடல் பயணத்தை மேற் கொண்டார். உண்மையான ஆஸ்ட்ராலிஸ் என்பது ஆஸ்திரேலியா. நியூசிலாந்து. பனி உறைந்த அண் டார்க்ட்டிக்கா நிலப்பகுதிகளில் மட்டுமே அமைந் துள்ளது எனக் காட்டினார். இங்கிலாந்துக்குத் திரும்பியபின் இவர் கப்பல் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இறுதி யாக லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்கர்வி (Scurvy) எனும் நோய் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிக் காக இவருக்கு, கப்லி (copley) தங்கமெடல் விருது வழங்கப்பட்டது. மனிதர் கடல் பயண ஆராய்ச்சி மேற்கொண்ட என்னுமளவில் குக் மீண்டும் ஜுலை 1776 இல் விட்பி கப்பலின் துணை கொண்டு ஆராய்ச்சிக்காகக் கடல் பயணம் மேற்கொண்டார். குக்கின் சுடல் பயணத்துடன் அவர் குடும்ப வாழ்க்கையை ஒப்பிடும்போது இல்வாழ்வில் குறைந்த காலமே அவர் செலவிட்டுள்ளார் என்பது புலனாகிறது. இவர் 1762 இல் எலிசபெத் பாட்ஸ் Elizabeth batts) எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். தம் வாழ்க்கையின் பாதி நாள்களைக் கடலிலேயே கழித்தார். ஜேம்ஸ் குக், எலிசபெத் பாட்ஸ் தம்பதிக்குக் குழந்தைகள் அறுவர் பிறந்தனர். இவர்களில் மூவர் இளமைப்பருவத்தி லேயே இறந்துவிட்டனர். எஞ்சிய மூவரும் 1794 இல் மரணமடைந்தனர். அ. அரங்கநாதன் குகர்பிடேசி பூசணிக் குடும்பம் எனப்படும் குகர்பிடேசி (Cucurbi- taccae) இரு வித்திலைக் குடும்பமாகும். இக்குடும்பத்