798 குகர்பிடேசி
798 குகர்பிடேசி தாவ தில் பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த பல ரங்கள் உண்டு. இக்குடும்பத்தில் 110 பேரினங்களும் 640 சிற்றினங்களும் அடங்கும். இவை பொதுவாக வெப்ப, மிகு வெப்பப் பகுதிகளில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தின் முக்கிய பேரினங்கள் குகர்பிட்டா, காக்சீனியா, குகுமிஸ், மொமார்டிகா என்பனவாகும். வை வளரியல்பு. இக்குடும்பத தாவரங்கள் ஒரு பருவ அல்லது பலபருவ னங்களாகக் காணப்படும். பெரும்பாலும் பற்றுக் கம்பிகளைக் (tendril) கொண்ட கொடிகளாகும். பற்றுக்கம்பிகள் கிளைகளுடனோ. கிளைகளற்றோ இருக்கும். சில தாவரங்கள் பற்றுக் சும்பிகளற்று நிலத்தில் படர்ந்து காணப்படும். இக்குடும்பத்தின் உள்ளமைப்பியலில் சில சிறப்புப் பண்புகளாவன: இருபக்க ஒழுங்கு (bicollateral) சாற்றுக்குழாய்க் கற்றைகள் (vascular bundle); தண்டின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் ஐந்து மேடு களையும், ஐந்து பள்ளங்களையும் கொண்டு காணப் படுகின்றன. 10 சாற்றுக்குழாய்க் கற்றைகள் இரண்டு சுற்றில் காணப்படுகின்றன. வெளிச்சுற்றில் ஐந்து சிறிய கற்றைகளும், உள்சுற்றில் ஐந்து பெரிய கற்றைகளும் பெரிய கட்டைத்திசுக் குழாய்களும் (xylem) பலவகைப்பட்ட தூவிகளும் காணப்படு கின்றன. பற்றுக் கம்பிகளைப் பற்றிய கொள்கைகள். பற்றுக் கம்பிகள் மெல்லிய சுருள்களாகவும், தொடு உணர்ச்சி மிக்கவையாகவும் காணப்படுகின்றன. இவற்றின் உதவியால் இக்குடும்பத் தாவரங்கள் பிற தாவரங் களின் மேலோ, ஏனையவற்றின் மேலோ பற்றிப் படர்ந்து வளர்கின்றன. பற்றுக் கம்பிகள் தோன்றும் விதம் பற்றிப் பல மாறுபட்ட கருத்துகள் கூறப்படு கின்றன. பிரான் கொள்கை. பிரானின் கொள்கைப்படி பற்றுக் கம்பிகள் பூக்காம்புச் செதில்களிலிருந்து உண்டானவையே ஆகும். மேலும் குகர்பிட்டா பெபோவில் (Cucurbita pepo) பூக்காம்புச் செதில் களில் ஒன்று மறைந்து, மற்றொன்று கிளைத்த பற்றுக் கம்பியாக மாறுகிறது என்றும், குகுமிஸ் சடைவசில் (Cucumis sativus) இரண்டு பூக்காம்புச் செதில்களும் தனித்தனியாகக் கிளையற்ற பற்றுக் கம்பிகளாக மாறுகின்றன என்றும் கூறப்படு கிறது. முல்லரின் கொள்கை. பற்றுக் கம்பிகளின் அடிப் பகுதி தண்டையும், நுனிப் பகுதி இலைப்பரப்பையும் ஒத்துள்ளன எனக்கூறிய முல்லர் குகர்பிடா பெப் போவில் சில இயல்பு மீறிய மாற்றங்களைக் கண்டறிந் தார். அவற்றில் ஒன்று இலைப்பரப்புகளையுடைய பற்றுக் கம்பிகள் அந்த இலைகளில் சில பற்றுக் கம்பி களாக மாறுவது. எனவே பற்றுக் கம்பிகளின் அடிப் 0 0 0 0 0 M 1.5 (1.31 1.6 1.4 1.7 மகரந்தத் தாள்களின் வகை வசுக 1.3 1.1 பெஃவிலியா வகை 1.1 தீலாடியாந்தா சைஸீடியம் வகை 1.4 பிரையோனியா வகை 1.5 குகாபிடா 1.6 சைகிளான்தீரா வகை 1 .7 சூலகக் குறுக்கு வெட்டு வகை பகுதி தண்டையும், சுருண்டு காணப்படும் மேல் பகுதி இலையையும் ஒத்திருப்பனவாகக் கருதப்படுகிறது. முல்லரின் கொள்கைக்கு ஹெஜரப் ஒப்புதல் கொடுத் துள்ளார். எங்னரின் கொள்கை. பொதுவாசு, குகர்பிடேசி லைகள் இலையடிச் செதில்களற்றவை. ஆனால் தென் ஆஃப்ரிக்காவில் தங்கனிக்கா என்னுமிடத்தில் காணப்படும் கெட்ராஸ்டிஸ் ஸ்பைனோசா (kedros- tis spinosu) என்னும் தாவரத்தில் இலையடிச் செதில் கள் (stipules) கொண்டவை. இத்தாவரத்தில் இலை யடிச் செதில் மறைந்து, மற்றொன்று பற்றுக் கம்பி யாக மாறுவதை எங்ளர் கண்டறிந்தார். இலை. தனி இலை, மாற்று இலையடுக்க அமைப்பு, இலைக் காம்புடையது. பெரும்பாலும் இத்தாவரங்களில் இலைகள் விசிறிபோல் மடல் களாகப் பிளவுபட்டிருக்கும். இலையடிச் செதில்கள் அற்றவை. அகங்கை வலைப்பின்னல் நரம்பமைப் புடையவை (palmate-reticulate). மஞ்சரி. தனி மலர்களாகவோ, குடை அல்லது கூட்டுப்பூத்திரள் (panicle) மஞ்சரிகளாகவோ காணப்