குகை 803
னேட் கரைசல் குகையின் தரையில் சிறு குளம் போன்று தேங்கிக் காணப்படும். இது, தேங்கிய நிலையில் உள்ள நீரில் கல்லை விட்டெறிந்தால் எவ் விதம் அலைகள் உண்டாகுமோ, அதைப்போல வடி வத்தில் ஒத்து இறுகிக் காணப்படும். இவ்விதம் இறுகிய நிலையில் காணப்படுவது ரிம்கல் எனப்படும். குகைகளில் காணப்படும் கால்சியம் கார்பனேட் கரைசல் அரகோனைட் என்னும் கனிமப் படிகமா கிறது. து படிகமாகும்போது கொத்துக் கொத்தான பூக்களைப் போன்று படிகமாகிறது. ஆன் தோடைட் எனப்படுகிறது. கிரேக்க மொழியில் ஆன் தோஸ் எனில், பூக்கள் எனப் பொருள். . கார்ஸ்ட் சுண்ணாம்புக் காடு. அட்டிரியாட்டிக்குக் கடற்கரையிலுள்ள யூகாஸ்லாவியா நாட்டின் தினாரிக் ஆல்ப்ஸைச் சார்ந்த கார்ஸ்ட் என்னுமிடத் தில் புவியியல் அறிஞர்கள் ஒரு விந்தையான நிலப்பரப் பைக் கண்டனர். இந்நிலப்பரப்பு, சுண்ணாம்புப் பாறைகளால் காண்போரைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே, இதை ஒத்துக்காணப்படும் நிலப்பரப்புகனை உலகின் பிற டங்களில் காணுந் தோறும் அவ்விடத்தின் பெயரையே வழங்கி வரலாயினர். உலகின் பல பகுதிகளிலும் சுண்ணாம்புப் பாறைகள் பரவலாக அமைந்திருந்த போதும் கார்ஸ்ட் எனப்படும் ச்சுண்ணாம்புக்கரடு அரிதாகவே காணப்படுகிறது. கார்ஸ்ட் மிக நன்றாக உருவாகிய சுண்ணாம்புக் கரடு ஏணைய நிலப் பரப்புகளின்றும் வேறுபட்டுத் தனித்தன்மையுடையதாகக் காட்சியளிக்கும். இச் சுண்ணாம்புக்கரடு புல்பூண்டுகளோ மரஞ்செடி கொடி களோ அற்ற கரடுமுரடான பாழ்நிலமாக விளங்கும். குறுக்கு நெடுக்காக வெட்டிய வாய்க்கால்களை ஒத்த பிளவுகளும், அவற்றிடையே காணப்படும் வயற் பாத்திகளை ஒத்த நிலப்பரப்புகளும் கண்ணைக் கவரும். மழைநீர் பட்டுச் சீரழிந்த சர்க்கரைப் பொம் மையைப் போல நிலப்பரப்பின் பெரும்பகுதி கரைக்கப் பட்டும் சிதைக்கப் பெற்றும் காணப்படும். கடற் பஞ்சை ஒத்துச் சிலவிடங்களில் சிறுசிறு துளைகளும், குழிகளும் காணப்படும். பானை வடிவமுடைய துளை களும் அவற்றுடன் தென்படும். ஒரு சில இடங்களில் புனல் போன்ற அகன்ற பெரும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி ஏரிகளாகவும் காட்சியளிக்கும். சிலவிடங்களில் இடிந்து தூர்ந்துபோன பெருங் கிணறுகளை ஒத்த பள்ளங்கள் காணப்படும். அவற்றி னுள்ளே எட்டிப் பார்த்தால் கிணற்றின் அடித்தளத் தில் பண்டைக்காலச்சுரங்க வழியை ஒத்த ஓர் இருண்ட குகை பக்கவாட்டில் செல்வது புலனாகும். ஏறத்தாழ ஒருவர் நன்றாக நிமிர்ந்து செல்லக்கூடிய உயரத்திலோ அதைவிடப் பெரியதாகவோ அமைந் திருக்கலாம். குகையுள் கல்தூண்கள். தோரணங் களைப் போலக் குகையின் விதானத்திலிருந்து தொங் அ.க 8 A 51 அ குகை குகை 803 கும். தொங்கும் கல்தூண்களின் வழியாகவும் விதானத்திலிருந்தும் (மேல் கூரை) கசிந்துவரும் நீர் சொட்டுச் சொட்டாகக் குகையின் அடித்தளத்தில் விழும். அவ்வாறு நீர் விழும் இடத்தில், சிறிதளவு உயரத்துடன் வளர்ந்துள்ள கறையான் புற்றை ஒத்த அமைப்பையும் காணலாம். தொங்கும் அல்லது நிற்கும் ஓரிரு கல்தூண்கள் முற்றிலும் வளர்ந்து குகையின் கூரையைத் தாங்குவதைப் பார்க்கலாம். ஒளி பட்டுப் எதிர்பவிக்கும் கால்சைட், குவார்ட்ஸ் படிகங்கள் குகை முழுதும் எண்ணிறந்த வைரமணிகள் காய்த்துத் தொங்குவன போலக் காணப்படும். சுண்ணாம்புக் கரைசல்கள் படிந்து காய்ந்ததால் உருவாகிய சுண்ணாம்புப் பாறைஅடுக்கு கள் மிக அழகாகக் காட்சியளிக்கும். இத்துடன் குகையில் புழுக்கமும், இறுக்கமும் மிகுதியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் மழைநீர் புரண்டு விழுந்து ஓடும்போது வேர்ச்சல்லி போன்று கொப்புங்கிளையு மாகப் படர்ந்துள்ள சிற்றோடைகள் பெரியவாக மாறும். சரிவரத் தோன்றியமையாத பள்ளத்தாக்கு கள் பெரும்பாலும் உறிஞ்சு துளைகளிலோ விழுங்கு துளைகளிலோ முடிவடைந்துவிடும். ஓடைகளும், சில சமயங்களில் பெருஞ்சுழியுடன் திடீரெனப் புவிக்குள் சென்றுவிடும். ஓவென இரைந்தொலிக்கும் அருவி களையும் சலசலவென ஓடும் சிற்றருவிகளையும் காணலாம், ஓடைநீர் மாசுபட்டும். மிகவும் சுண்ணாம்புக்கலந்தும் இருக்கும். ஓடையின் ரு மருங்கும் காய்ந்துபோன சுண்ணப் படிவுகள், கட்டுகள் போல அமைந்திருக்கும். ஏனைய நீர் பெருகு தளங்களில் நீண்ட தடுப்பு மலைகளையும் இடைப் பள்ளத்தாக்குகளையும் மலை யலாது. படிக் காண ஒரு அடிநில நீர்க்குகையின் இடிபாடுகளிடையே இயற்கைப் பாலங்களையும், வளைவுகளையும், நீருற்றுகளையும், சுனைகளையும் காணலாம். சில இடங்களில் இயற்கையான மலைக் குகைகளும் தென்படும். நிலச்சரிவும், பாறையின் வீழ்ச்சியும் அடிக்கடி ஏற்படும். சிவந்த மண் திட்டுத் திட்டாகப் படிந்து வண்ணம் தீட்டிய ஓவியம் போல நிலப்பரப்புக் காட்சியளிக்கும். கார்பன் டை ஆக்சைடு கரைந்த மழைநீர் இந்நிலப்பரப்பில் விழுந்தவுடன், சுண்ணாம் புப் பாறையின் பெரும்பாலான கால்சியம் கார்ப னேட் கரைந்து செல்லக், கரைக்க இயலாத பொருள் கள். பாறையில் அப்படியே நின்றுவிடுகின்றன. புறப்பகுதியிலுள்ள அனைத்துக் கால்சியம் கார்ப னேட்டும் கரைக்கப்பட எஞ்சியுள்ள செர்ட், களிமண், மணற்பரல்கள் சிறுசிறு பொந்துகளுடனும், கூரிய விளிம்புகளுடனும், சிறிய அல்லது பெரிய துளைகளுடனும், கோணல்மாணலாகவும், கரடு முரடாகவும் காணப்படுகின்றன.