804 குகை
804 குகை செர்ட் உருண்டைகள், மணற்பரல்கள், களிமண் போன்ற பொருள்கள் புறநிலை அரிப்பால் பின்னர்த் தாக்கப்பட்டுப் பாறையினின்றும் உதிர்ந்து சாய்வான நிலப்பரப்பின் அடிப்பகுதியை அடைகின்றன. இவ்வாறு சேரும் பொருள்கள் சிறிது சிறிதாகப் படி கின்றன. பின்னர் அவை இயற்கைச் சிதைவால் ஒரு வை தாக்கப்பட்டுச் சிவந்த மண் எச்சத்தை உருவாக்கு கின்றன. இச்சிவந்த மண்ணே டெர்ரா ரோசா எனப் படுகிறது. இம்மண்ணெச்சம் வேறொரு பாறையின் மீது படிந்த பொருள்களால் உண்டானதால் மெல்லிய கோடு போன்ற சந்தி விளிம்பே இரண்டையும் வேறுபடுத்தும் பிரிநிலையாகக் காணப் படும். எனினும் படிந்துள்ள மண்ணின் உயரத்தை யும், பாறையின் தோற்ற முகப்பையும் பொறுத்து இத்தொடுநிலைக் கோடு வளைந்து செல்கிறது. பரந்துபட்டுள்ள இம்மண் இயற்கையரிப்பால் அரித்துச் செல்லப்பட, இடையிலே தோன்றும் கார்ஸ்ட் நிலப் பகுதிகள் லாப்பிகள் எனக் குறிப்பிடப் படுகின் றன, வை சில அங்குல உயரத்திலிருந்து சில அடிகள் உயரம்வரை தோற்ற முகப்புகளைக் கொண்டிருக்கும். 10 மழைநீர் பொழிந்த சிறிது நேரத்திற்குள் நீர் சிறு துளைகளின் வழியாகவும், பிளவு, வெடிப்பு களின் வழியாகவும் நிலத்தினுள் இறங்கிவிடுகிறது. இச்சிறிய கால அளவில் ஓடும் நீரால் மிகுதியான அளவில் சுண்ணாம்புப் பாறைகளைக் கரைக்க இயலு கிறது. எனவே ஒவ்வொரு முறையும் பிளவுகளினூ டேயும், ஓடைகளின் வழியாகவும் நீர் ஓடும்போது ஓடைகளும் பிளவுகளும் பெரியவாகின்றன. இத்துடன் சுண்ணாம்புப் படிகப்பாறை சாய்வு. சதுரப் பிரிவு களை உடையதால், இத்தகைய பாறைகள் நிறைந் துள்ள இடங்களில் நீண்ட நேரான பிளவுகளும், அவற்றைக் குறுக்கே இணைக்கும் பிளவுகளும் தோன்ற அவற்றிடையே உள்ள நிலப்பரப்புகள். வறண்ட உப்பளங்களையோ வயல்களையோ ஒத்துக் காட்சியளிக்கின்றன, இப்பிளவுகள் கிரிக்கி என்றும், நிலப்பரப்புகள் கிளியண்ட் என்றும் வழங்கப்படு கின்றன. நிலப்பரப்பினுள் புகுந்து செல்லும் மழைநீர், களிமண் போன்றவை நீர்புகாப் பாறைகளால் தடுக்கப் படுகின்றன. இவ்வாறு தேங்கும் நீர் பக்க வாட்டில் உள்ள சுண்ணாம்புப் பாறைகளைக் கரைத்துக் 11 12 12 13 குகைகள் பீ. சேறு 3. 1. 9. நீர் புகா மண் மூட்டம் படம் 3. களார்ஸ்ட் நிலப்பரப்பின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஸ்டாலக்டைட் 4. ஸ்டாலக்மைட் 5. நீர்புகாப்பாறை அடுக்கு 5. வடிகுழாய் 7. அடிநில ஏரிகள் 8.நீர் 20. புற நீரோடு வெளி 11 விழுங்கு துனைகள் 12. உறிஞ்சு துளைகள் 13. சுண்ணாம்புப் பாறை