குகைச் சூழலமைப்பு 805
கொண்டு புவியீர்ப்பு விசையால் பாய்கிறது. தனால், அந்நீர் விட்டுச் சென்ற இடம் குகை போல் அமைகி கிறது. குறுக்கும் நெடுக்குமாக அமையும் நீரோடைகள் ஒன்று சேர்ந்து ஒரு பேராற்றை உண்டாக்குவது போலவே நிலத்தடி நீரோடைகளின் சிறிய குகைகள் பெரிய குகையுடன் பின்னலாக இணைந்து ஒரு பெரிய நிலப்பகுதியைக் கவர் கின்றன. வட அமெரிக்காவிலுள்ள கெண்டுகி மாநிலத்தின் பவுலிங்கிரீனுக்கு அண்மையிலுள்ள மம் மாத்து என்னும் குகையே உலகிலேயே மிகவும் நீள மான பெரிய குகையாகக் கருதப்படுகிறது. எஸ். சுதர்சன் நூலோதி.G.W. Tyrrell; Principles of Petrology. BI Publications Private Ltd., New Delhi, 1985. குகைச்சூழலமைப்பு புவியில் காணப்படும் சிறிய அல்லது பெரிய ஆழ் குழி கள் போன்றவையே குகைகள், பெரும்பாலும் இவை இயற்கையிலேயே தோன்றுகின்றன. சாதாரணமாகக் குகைகள் குன்றுப்பகுதிகளிலும், மலைப்பாங்கான நாடுகளிலும், பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளி களின் அடிப்பகுதிகளிலும், ஆறு - குளம் போன்ற வற்றின் கரைப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. புவிக்கு அடியில் தரை மட்டத்திற்குக் கீழே மிகப் பெரிய ஆறுகள் பாய்கின்றன. இந்த நீரோட்டங்கள் அடிக்கடி தம் போக்கை மாற்றிக்கொண்டும் வேறு சில வற்றியும் விடுகின்றன. இவ்வாறு வற்றிப் போகும் அல்லது திசைமாறும் நிலத்தடி ஆறுகளின் தடங்கள் குகைகளாகிவிடுகின்றன. தற்காலக் குகை களில் பல அவ்வாறு தோன்றியவையே. மேலும் புவிக்கு அடியில் சில இடங்களில் சுண்ணாம்புக் கற் களின் பெரும் படிவங்கள் காணப்படுகின்றன. மழை நீர் மிகுதியாக ஊடுருவிக் கீழ்நோக்கி இறங்குவதால் நாளடைவில் இந்தச் சுண்ணாம்புக்கல் படிவங்கள் நீரில் கரைந்து மேலும் கீழ்நோக்கிச் சரிந்து புவிக்குள் மூழ்குகின்றன. இவ்வாறு பல்லாண்டுகளாக நிகழும் போது பாதாளக் குழிவுகள் உண்டாகின்றன. இக் குழிவுகள் இணைந்து படிப்படியாக விரிவடைந்து குகைகளாகின்றன. மணல் செறிந்த பாலை நிலங் களில் காணப்படும் குகைகள் காற்றினால் தோன்றி யவை. பாறைகள் அடர்ந்த கடற்கரையில் காணப் படும் குகைகள் பாறைகளின் மீது அலைகள் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே யிருப்பதால் ஏற்படுகின்றன. குகைகளின் உட்பகுதியில் ஒளி மிகக்குறைவு. இருளே நிறைந்திருக்கும். பெரிய குகைகளில் தட்ப வெப்ப நிலை ஆண்டு முழுதும் ஒரே சீரான நிலை குகைச்சூழலமைப்பு 805 யில் இருக்கும். காற்றில் ஈரப்பதம் மிகுந்திருக்கும். காற்றுச் சலனமற்றிருக்கும். உயிரினங்களின் வாழ்க் கைச் செயல் திறனையொட்டி அமையும் சுற்றுப் புறச் சூழல் பற்றிய ஆய்வுக்குச் சூழலமைப்பு என ஜி.டான்ஸ்லே (1935) என்பார் பெயரிட்டார். • குகைச்சூழலில் வாழும் உயிரினங்களின் தொகுதி யில் குறிப்பிட்ட இன உயிர்களே இருக்குமென்று முறையாக வரையறுக்கப்பட்டுள்ளது. தாவரங்களுக் குள்ள பச்சையம் இருண்ட சூழலில் வாழும் தாவரங் களில் இருந்தும் பயனில்லை. ஆகையால் பசுந்தாவரங் கள் குகைச் சூழலில் காணப்படுவதில்லை. தாவரங்கள் ல்லாமையால், செடிகொடிகளைத் தின்னும் விலங்குகளும் இல்லை. குகைகளில் மிக மங்கலான ஒளி பரவியிருக்கும் பகுதியான நுழைவாயிலில் ஒட்டுண்ணிகள். சாறுண்ணிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. குகை இருளில் வாழும் வௌவால் போன்ற குகை வாழ் விலங்குகள் விட்டுச் செல்லும் இரைத் துணுக்குகள், காற்று, நீர் மூலமாக வந்து சேரும் உணவுத் துணுக்குகள் போன்றவற்றையே குகையின் நுழைவாயில் வாழ் உயிரினங்கள் சார்ந் துள்ளன. குகை வாழ் பெரிய விலங்குகள் குகைக்கு வெளியே வாழும் அதே இனத்தைச் சேர்ந்த விலங்கு களிலிருந்து தகவமைப்புகளில் பெரிதும் மாறுபட்டுக் காணப்படுகின்றன. குகைச் சூழலில் வாழும் விலங்கு களின் தோலில் நிறமித் துணுக்குகள் காணப்படுவ தில்லை. எனவே அவை மிகவும் வெளிறிய தோற்றம் கொண்டவையாக உள்ளன. இக்குகைவாழ் விலங்கு களை ஒளியில் வைத்துப் பேணும்போது நாளடைவில் அவற்றின் தோலில் நிறமிகள் தோன்றுவதைக் காணலாம். எப்போதும் இருட்டிலேயே வாழ்வதால் குகை வாழ் விலங்குகளின் கண்கள் செயலிழந்தோ. சரியாக உருவாகாமலோ உள்ளன. மேலும், இவ்விடங்களில் வாழும் மீன்களுக்குச் செதில்கள் இருப்பதில்லை. நத்தைகளின் ஓடுகள் மிகவும் மெல்லியனவாகவும். நண்டுகள் போன்றவற்றின் ஓடுகள் வலிமை குறைந்தும் எளிதில் நொறுங்க வல்லவையாகவும் இருக்கும். இச்சூழலில் வாழும் விலங்குகள் பொது வாக உடல் நீண்டு ஒடுங்கியும், தொடு உணர்ச்சி மிக்க நீண்ட உணர் இழைகளைக் கொண்டும் உள்ளன. குகைப் பகுதியில் பொதுவாகவே உணவுப் பற்றாக்குறை நிலவுவதால் உயிரினங்கள் மிகுதியாகக் காணப்படுவதில்லை. பல காரணிகளைப் பொறுத்து ஒரு குகையில் வாழும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளின் எண்ணிக்கை அமைகிறது. குகையின் பரிமாணம், பரப்பளவு, எத்தனை ஆண்டு