806 குங்கிலியம்
806 குங்கிலியம் களாக அது உள்ளது குகை நிலையானதா அல்லது எளிதில் தூர்ந்து போகக் கூடியதா அல்லது நிரப்பப் படவல்லதா ஆகியவற்றைப் பொறுத்தே அங்கு உயிரினங்களின் எண்ணிக்கை வாழும் அமையும். படிமலர்ச்சி பற்றி அறிந்து கொள்வதில் குகைளை இயற்கையின் ஆய்வுக் கூடம் என்று குறிப்பிடுவது மிகப்பொருத்தமாகும். ஒரே குகைத் தொகுதியில் காணப்படும் பல்வேறு இணைப்புக்களும், அதே சமயத்தில் பல்வேறு பகுதிகள் ஒன்றோடு ஒன்று எவ்விதத் தொடர்பும் இன்றித் தனித்தனியே காணப் படும் தன்மையும் குகைவாழ் விலங்குகளின் படி மலர்ச்சியை அறுதியிடும் காரணிகளாகின்றன. இவ்வாறு குகைத்தொகுதிகள் அமைந்துள்ளமையால் அங்கு வாழும் விலங்கினங்கள் தனித்தே தமக்குரிய முறையில் வெவ்வேறுபட்ட வழிகளைக் கையாண்டு ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத பல புதிய னங்களாக உருவாக இயலும். - சு.மாடசுவாமி குங்கிலியம் இது சால் (sal) மரத்திலிருந்து கிடைக்கும் ஒரு வகைப் பிசினாகும். இதன் தாவரவியல் பெயர் ஷொரியா ரொபஸ்டோ (Shorea robusta) ஆகும். சிறகுக் கனி குங்கிலியம்