பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/827

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்கிலியம்‌ 807

இது டிப்டிரோகார்பேசி எனப்படும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இம் மரம் வட, மைய இந்திய இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. தென்னிந்தியத் தேக்குக் காடுகளுக்கு இணையாக வட இந்தியாவில் சால் காடுகள் உள்ளன. விசாகப் பட்டினத்திலிருந்து வட இந்தியா முழுதும் இம்மரம் பருத்து வளர்ந்து காணப்படும். வளரியல்பு. சாதாரணமான தட்பவெப்ப நிலையில் குங்கிலிய மரங்கள் 18-30 மீ உயரம் வரை வளரும். சாதகமான சூழ்நிலையில் 45 மீ, உயரத்தோடும் 4மீ சுற்றளவோடும் வளரக் கூடியவையாகும். நல்ல வளர்ச்சியுடைய மரங்கள் 20-25 மீ உயரம் வரை கிளைகள் அற்ற உருண்டையான அடிமரங்களைப் பெற்றிருக்கும். இலை தனித்தது; முழுமையானது; காம் புடையது; மாற்றிலையடுக்கு அமைப்பு. தோல் போன்றது. முட்டை வடிவம் அல்லது நீண்ட வட்ட வடிவம். 30-30 செ.மீ. நீளமிருக்கும். ஓரங்கள் ரம்பப் போன்றவை. பற்கள் பக்க நரம்புகள் இணையாகக் காணப்படும். இலையடிச் செதில்கள் விரைவில் உதிரக்கூடியவை. பழுத்த இலைகள் பள பளப்பாயிருக்கும். இலைக்கோண அல்லது தண்டு நுனி மஞ்சரி. கூட்டுப்பூத்திரள் (panicle) அடர்த்தி யற்றது. மலர்கள் இருபால், ஒழுங்கானவை, 5-அங்க மலர்கள். புல்லிவட்டத்தில் 5 புல்லிகள், அடியில் ணைந்தவை. சமமற்ற மடல்களைக் கொண்டு, நிலைத்துக் காணப்படும். அல்லிவட்டத்தில் 5 அல்லி கள் வெண்மையானவை, தனித்தவை, திருகு அமைப் பில் உள்ளன. மகரந்தத்தாள்கள் 15, தனித்தவை. ணைப்புத்திசு (connective tissue) நீண்டு, வளரியைக் கொண்டிருக்கும். சூலகத்தில் 3 சூவிலைகள், 3 சூலறைகள், ணைந்தவை, மேல்மட்டச் சூல்பை. சூல்கள் அறைக்கு இரண்டாகக் காணப்படும்; தொங்கு ஒட்டு முறை (pendulous placenta); சூல் தண்டு நீண்டது. சூல்முடி மூன்றாகப் பிளவுபட்டிருக்கும். உலர். வெடியாச் சிறகு கனி. நிலைத்த புல்லிகள் நீண்ட சிறகுகள் போன்று கனிபரவுதலுக்குத் துணை செய் கின்றன. விதை ஒன்று. மரக்கட்டை. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட குங்கிலிய மரம் வணிக முறையில் கடின மரங்களி லேயே மிகவும் முக்கியமானதாகும். இந்தியா தவிர பர்மா, இலங்கை, மலேயா, பிலிப்பைன்ஸ் வரை பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் வளர்கிறது. தண்டின் மென்கட்டை வெண்மையாகவும், வைரக் கட்டை வெளிர் பழுப்பு அல்லது பழுப்பு வண்ண குங்கிலியம் 807 மாகவும் காணப்படும். இவ்வைரக்கட்டை காற்றுப் பட்டால் அடர் சிவப்பு வண்ணமாக மாறிவிடும். கட்டைகள் பல ஆண்டுகள் ஆனாலும் கறையான், பூசணங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை. உலர்ந்த கட்டைகளின் மேற்பரப்பில் காணப் படும் சிறு வெடிப்புகள் இதன் சிறப்புப் பண்பாகும். இதற்குப் பிசின் குழாய்களே காரணமாகும். இம் மரத்தை ரம்பத்தால் அறுப்பதும், உளியால் செதுக்கு வதும் எளிதல்ல. ஆனால் எந்திர வாளின் மூலம் பலகைகள் செய்ய முடியும். வைரக்கட்டைப் பகுதி மிகவும் கடினமாகவும், கனமாகவும், நீடித்து இருக்கக் கூடியதாகவும் இருக்கும். காற்றுப்படக்கூடிய இடங் களிலும், நீரினுள்ளும் கெடாமல் இருக்கக்கூடியது; இருப்புப் பாதை அடிக்கட்டைகளுக்கு ஏற்றது. தாமர் மரங்களிலிருந்து வெட்டுப்பட்ட குங்கிலியம். மரத்திலிருந்து எண்ணெய் கொண்ட பிசின் (resin) வெளிப்படுவ துண்டு. இதை, சால்-தாமர் அல்லது வங்காள- என்பர். 1940 க்கு முன்பு சால் சேகரிப்பதில் சரியான குங்கிலியம் கையாளாததால் மிகவும் குறைவாகவே எடுத்து வந்தனர். அண்மையில் பல புதிய முறைகளால் ஒவ்வொன்றிலிருந்தும் ஆண்டொன்றுக்கு 4-5 கிலோ முறையைக் ங்கிலியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. குங்கிலியம் சேகரிக்க அடிமரத்தில், தரை மட்டத்திலிருந்து 90-120 செ.மீ. உயரத்தில் 3-5 குறுகிய கீறல்களை உண்டாக்குவர். 10 அல்லது 12 நாளுக்குப்பின் இந்த வெட்டு வாய்களில் குங்கிலியம் வெண்மையான பிசின் போல் வெளியேறிக் காற்றுப் பட்டவுடன் பழுப்பாக மாறிக் கெட்டிப்படும். இவற்றைச் சேகரித்தவுடன் வெட்டு வாயைப் புதிதாகக் கீறிவிடுவர். இவ்விதமாகப் பிசின் சேகரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு மும்முறை ஜுலை அக்டோபர் ஜனவரி மாதங்களில் ங்கிலியம் சேகரிக்கப்படுகிறது. . பயன்கள். இந்தியாவில் சால் - குங்கிலியம் பெரு மளவில் தயாரிக்கப்பட்டு, வணிக முறையில் முக்கிய மான ரோசனமாகக் கருதப்படுகிறது. பொதுவாக. குங்கிலியம் கிரீம் - மஞ்சள் நிறமாக, உடையக் கூடிய குச்சிகளாக, மென்மையான மணத்துடன் காணப் படும். மதச் சடங்கு, திருவிழா, கோவில், மசூதிகளில் இதைப் பயன்படுத்துவர். தீயிடும்போது வெண்மை யான மணத்தோடு கூடிய புகை வெளிப்படும். குங்கி லியம் தரக்குறைவான பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தயாரிக்கவும் பயன்படுகிறது. மென்மையான மெழுகைக் கெட்டியாக்கவும் காலணிப் பூச்சு கரித் தாள் (carbon paper) தட்டச்சு எந்திர நாடா தயாரிக்கவும் பயன்படுகிறது. ஒட்டுப்பலகைத் (ply. wood) தயாரிப்பிலும் பயன்படுகிறது. வயிற்றுப் போக்கு சீதபேதி போன்ற நோய் களுக்கு இதை மருந்தாகப் பயன்படுத்துவர். தோல்