பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/828

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808 குங்கிலியம்‌

808 குங்கிலியம் றது. மண நோய்களில் இதை நுண்ணுயிர்க் கொல்லியாகவும் காதுவலிக்கும் பயன்படுத்துவர். குங்கிலியத்தைக் காய்ச்சி வடிக்கும்போது நறுமண எண்ணெய் கிடைக் இதை, சுவா (chua) எண்ணெய் என்பர். ங்கிலியத்தில் 40-65% காணப்படும். இது நறுமணமுள்ளதால் ஏனைய எண்ணெய்த் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது. எண்ணெயை விளக் கெரிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்துவர். நெய் யோடு இதைச் சேர்த்துக் கலப்படம் செய்வதுண்டு. ஏனைய எண்ணெய்களோடு சேர்த்துச் சோப்பு தயாரிப்பர். சாக்லேட் தயாரிக்க, கோக்கோ - வெண் ணெய்க்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம். சால் பிண்ணாக்கில் புரதமும், கார்போஹைட்ரேட் டும் காணப்படுவதால் இதைக் கால்நடைத் தீவன மாசுப் பயன்படுத்துவர். சால் மரங்கள் டஸ்ஸீர் பட்டுக் கம்பளிப் பூச்சிக்கு ஏற்ற தாவரம் ஆகும். மேலும் அரக்குப் பூச்சிகள் தன் கிளைகளில் கூடு கட்டும். வட இந்தியாவில் இலைகள் பீடி சுற்றப் பயன்படுவதுண்டு. தையல் இலைகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. சால் பூக்களில் தேன் மிகுந்துள்ளமையால் தேன் பண்ணை களை இக்காடுகளில் அமைப்பர். மரங்கள் வெட்டிப் பதப்படுத்தும்போது மரப்பட்டைகள் பெருமளவில் நீக்கப்படுகின்றன. முற்காலத்தில் அவற்றை எரி பொருளாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற் சமயம் இப்பட்டைகள் பலவகைகளில் பயன்படு கின்றன. இவற்றில் டானின் என்னும் வேதிப் பொருள் மிகுந்துள்ளமையால் இவை தோல் பத னிடப் பயன்படுகின்றன. குங்கிலியத்தைப் பொடித்து, 875 மி.கிராம் வீதம் 168 மி. லிட்டர் பாலில் கலக்கி, நாளும் காலையில் சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். குழந்தைகளுக்கு உண்டாகும் சீதக் கழிச்சலுக்கு, 875 மி. கிராம் குங்கிலியப் பொடி யுடன் சர்க்கரை சேர்த்துக் கொடுத்து வரலாம். குங்கிலியத்தூள் 14 கிராம், மாம்பருப்புத் தூள் .17.5 கிராம். இலவம்பிசின் தூள் 6.10 கிராம், ஜாதிக்காய்த் தூள் 17.5 கிராம் இவற்றைக் கலந்து வேளைக்கு 260-390 மி. கிராம் வீதம் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். குங்கிலியம், மெழுகு வகைக்கு 105 கிராம் எடுத்து, இவற்றைச் சிறு தீயிட்டு உருக்கி, 350 கிராம் நல்லெண்ணெயும் சேர்த்துச் சூடா யிருக்கும்போதே வடிகட்டிக் கொண்டு, இதைத் துணியில் தடவி, ஆறாப்புண்களின் மேல் தடவி வரப் புண் ஆறும். இத்துடன் கந்தகம், காசுக்கட்டி, வெங் காரம் சேர்த்து இட்டால், சிவந்த நிறமுண்டாகி எளிதில் ஆறும். . இதைத் தணலிலிட்டுப்புகைக்க நோயாளியிருக்கு மிடத்திலும், சாக்கடை முதலியவிடங்களிலும் உண் டாகும் நாற்றம் நீங்கும். நச்சு வளிமங்கள் நீங்கும், தை ஆல்கஹாலில் கரைத்து, அதன் அளவு முட்டை வெண்கரு சேர்த்துக் கலந்து, மேலுக்குப் பூச வாதவலி முதலிய நோய்கள் குணமாகும். இப் பிசினை நெய்விட்டுப் பொரித்து, நீரிலிட்டு நன்றாக அடித்துப் பிசைந்து ஆடையில் வடிகட்டி, நீரை நிற்பதை வடித்து, ஆடைமேல் தங்கி எடுத்துத் தகுந்த அளவில் கொடுக்க வெள்ளைநோய் நீங்கும். உடல் வலிமை பெறும். துத்தம், கந்தகம், சூதம், காசுக்கட்டி, துருசு,குங்கிலியம், குக்கில், மிருதார் சிங்கி, தாரம், வேம்பாடம்பட்டை வேர், தோன்றிக் கிழங்கு இவற்றைச் சம எடையாக ஈருள்ளிச் சாற்றால் வேப்பெண்ணெய் ஒரு நாளாட்டி உலர்த்திப் பின்பு விட்டுக் களிம்பாகும் வரை அரைத்துக் கண்டமாலை முதலான காயங்களுக்குப் போட்டுவர நோய் தீரும். உதி. பெருமரம், வேம்பு, செங்கத்தரி, பூதக் கரப் பான் இவற்றின் பட்டை. தேவதாரம் வகைக்கு 7 கிராம், கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், மிளகு, பூண்டு. வெள்ளைக் குங்கிலியம், காசுக்கட்டி வகைக்கு 3.5 கிராம், துருசு 875 மி.கிராம் இவற்றை அரைத்து 501 மி.லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்துச் சீலையிலூட்டிக் காயங்களில் போட்டு வர நோய் தீரும். தூள், தூள், விபூதிபோல் வறுத்த நாட்டுக் கல்நார் தூள். வெள்ளைக் குங்கிலியத்தூள். மாசிக்காய்த் கிச்சிலிக் கிழங்குத்தூள். சாம்பிராணித் ஏலரிசித் தூள், சுக்குத் தூள் இவற்றை ஒன்றாகக் கலந்து சீசாவில் வைத்துக் கொள்ள வேண்டும். பல் நோய்க்குப் பல் துலக்கிக் கொண்டு, வெந்நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். துத்தம், வரட்பூலா,முத்தக் காசு,சுக்கு, ஓமம், அதிவிடையம், பொன் முசுட்டை வேர், நற்சீரகம், குங்கிலியம் இவற்றை ஒரே நிறையா யரைத்து ஆவியில் வேகவைத்து உண்ண வயிற்றுக் கடுப்போடு கூடிய பேதி தீரும். வெள்ளைக் குங்கி லியம் 3.5 கிராம் பொடித்து, மோரில் போட்டு மத் தாற் கடைந்து வடிகட்டி 50 மி, விட்டர் தேங்காய்ப் பாலில் கலந்து கொடுக்க, வயிற்றுக் கடுப்போடு கூடிய பேதி தீரும். வெள்ளைக் குங்கிலியம், சர்க்கரை, பரங்கிப் பட்டை வகைக்கு 175 கிராம் பொடித்துக் கட்டி நல்லெண்ணெயிலாவது, ஆவின் நெய்யிலாவது ரசா யனஞ் செய்து, அந்தி, சந்தி கொட்டைப் பாக்களவு சாப்பிட்டுவர வெள்ளை தீரும். வெள்ளைக் குங்கி வியம் கற்கண்டு வகைக்கு 245 கிராம் பொடித்துக் கொண்டு வேளை ஒன்றுக்கு 35 கிராம் வீதம் 17.5 கிராம் நல்லெண்ணெயில் மக்தித்து நாளொன்றுக்கு இரு நேரமாக ஏழு நாள் சாப்பிட்டுவர நீரிழிவு, வெட்டை தீரும். வெள்ளைக் குங்கிலியம் 175 கிராம், ரசக்கற்பூரம் 175 கிராம், தேங்காய் நெய் விட்டு அரைத்து அப்பால் நீர்விட்டுத் தவளம் போலாகும் வரை குழவியால் மத்தித்துப் புண்ணிற் போடலாம். சே.பிரேமா தி. ஸ்ரீகணேசன்